Saturday, August 1, 2009

வாழ்த்து பாடல்கள் - இளைய நிலா

என் பெற்றோரின் 25ம் ஆண்டு திருமண வெள்ளிவிழாவுக்கு நான் எழுதிய பாடல்.

வெள்ளிவிழா வாழ்த்துக்களே
இதயம் வரை நனைகிறதே - இதைப்
போல என்றும் இணைந்திடவே விழா காணுமே நெஞ்சமே!

வரும் வழியில் வாழ்த்தொலிகள்
இன்பவிழா தினம் தினமும்
ராபியாமா இஸ்பஹானி
தாய் தந்தை மனம் மலரும்
நூறு காலங்கள் நீங்கள் வாழுவீர்
சேரும் வாழ்த்துக்கள் நாங்கள் பாடவே
இனிய விழா நாளினிலே கனவு வரும்(வெள்ளி)

இருமனங்கள் இணைந்ததனால்
இந்த விழா வந்ததம்மா
ஒரு மனமாய் ஆனதினால்
வெள்ளி விழா காணுதம்மா
சுஹைனாமஜ்ஹரும் மஹபூப்சுரைஜுடன்
லாப்புக்கண்ணுமே வாழ்த்துச் சொல்லவே
கண்மணிகள் சூழ்ந்திடவே வாழ்ந்திடுவீர்.(வெள்ளி)

சுமஜ்லா

ஒரிஜினல் பாடல் இதோ:

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும் (2)

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும் (இளைய நிலா)

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ (2)

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

No comments: