Thursday, August 27, 2009

அய்யோ! விருதா?!

அவள் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறாள். திரும்பி பார்த்தால்...முதலில் இரண்டு பேர் துரத்தி வந்தது போய், இப்போ, நான்கு, ஐந்து என்று சிறிது சிறிதாக ஒரு பெருங்கூட்டமே சேர்ந்து விட்டிருந்தது.

திரும்பி பார்ப்பதும் ஓடுவதுமாக இருந்தவள், தவறி போய் காட்டுக்குள்ளேயே நுழைந்து விட்டாள். அங்கு ஒரு இடத்தில், மானும் மயிலும் ஆடிக் கொண்டிருந்தன. அருகே ஒரு மலைப்பாம்பு படம் எடுத்து கொண்டிருந்தது.

“என்ன செய்றீங்க இங்க?”

“நாங்க மலைப்பாம்பு நடத்தும் மலைஞர் டி.வி.க்காக, “மனிதனாட”னு நிகழ்ச்சி நடத்திட்டு வர்ரோம். அதுக்கு தான் இங்க சூட்டிங் நடக்குது!”

சிறிது நேரம் தன்னை மறந்து ரசித்தவள், அருகே இருந்த டீ.வி. நியூஸில், “கேல்ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சாரியா விருது தொகைகள் அதிகரிப்பு” என்ற செய்தியில் ‘விருது’ என்ற வார்த்தையை கேட்டவுடன், மீண்டும் அலறி அடித்து ஓட ஆரம்பித்தாள்.

வழியில் ஒரு புலி குறுக்கிட்டது,

“வாங்க எங்க வீட்டுக்கு.......”

பயந்தபடி போனாள்.

“இந்தாங்க உங்க சேவையை பாராட்டி இந்த “எருது” வழங்குகிறேன்.”

பாடம் செய்யப்பட்ட ஒரு எருதின் தலையை கையில் கொடுத்தது. வேண்டாமென்றால், தன்னை எதாவது செய்து விடுமோ என்று பயந்து வாங்கிக் கொண்டாள்.

“அப்புறம், இந்த எருது, இன்னும் அரை மணி நேரத்தில், ஆறு எருதுகளாக மாறிவிடும். அதை யாருக்காவது கொடுத்திருங்க”

தலையை ஆட்டி விட்டு புறப்பட்டாள். அதே போல ஆறு எருது தலைகளாக மாறி விட்டது. தூக்கவே முடியவில்லை...கஷ்டப்பட்டு யாருக்காவது கொடுக்கலாம் என்று திரும்பி பார்த்தால், முன்பு நாலைந்து பேராக இருந்தவர்கள், இப்போ பெரும் கூட்டமாக தன்னை துரத்தி வருவது கண்டு மிரண்டாள். அதிலும், எல்லார் கையிலும் எருது.

அடுத்த அரை மணி நேரத்தில் ஆறு எருது, பெருகி, முப்பத்தியாறு ஆகி விட்டது. கையில் தூக்கவும் முடியாமல், சுமக்கவும் முடியாமல், அப்படியே மயங்கி விழுந்து விட்டாள்.

விழித்த போது தான் தெரிந்தது, இது ஒரு பயங்கர கனவு என்று!

அவள் தோழி விருந்துக்கு கூப்பிட்டிருந்தது நினைவுக்கு வர, கிளம்பினாள்.

போய் பார்த்ததும் தான் தெரிந்தது, அது விருந்தல்ல...விருது என்று! பிறகென்ன, சுமக்க முடியாமல் சுமந்து வீட்டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வந்தால், எல்லா இடத்திலும் விருது குவிந்து கிடந்தது...கால் வைக்க இடமில்லை, தாண்டி தாண்டி உள்ளே போனாள். அப்போ வெளியே ஊர்வலம்....ஏதோ கட்சி ஊர்வலம் போலிருக்கிறது என்று வேடிக்கை பார்க்க, மீண்டும் கஷ்டப்பட்டு தாண்டி தாண்டி வெளியே வந்தாள்,

வால்பையன் கொடி பிடித்து ஊர்வலம் நடத்தி கொண்டிருந்தார்...

“இந்த விருது போதுமா...இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
இன்னும் கொஞ்சம் வந்திட்டா...பதிவுலகம் தாங்குமா?”

“வாலு...நீங்க அடமானம் வெச்ச விருதுகளை முதலில் மீட்டுட்டு வாங்க...அதுவரைக்கும் நான் கொடி பிடிக்கிறேன்........”

வால்பையன் கையில் இருந்த கொடியை தான் வாங்கி கொண்டு வீர நடை போட ஆரம்பித்தாள்!

(நண்பர்களே, புதுசு புதுசா விருது உருவாக்குவதால், அதை துரத்தி துரத்தி கொடுப்பதால், எந்த பயனும் இல்லை. விருது என்னும் வார்த்தைக்கு கொஞ்சமாவது மதிப்பு கொடுக்க வேண்டும்.)

நிறைய்ய்ய்ய்ய பேர், நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய விருதுகள் கொடுப்பதால் தான், இப்படி மொக்கையா ஒரு போஸ்ட்!

புச்சா விருது உருவாக்க மண்டையை குழம்புபவர்கள், எனது இந்த பதிவை படிக்கவும்: விருது மேனியா.

ஒரு வேளை இப்படி இருக்குமோ? ஒரு பதிவர் பதிவு போடுவது சகிக்கவில்லையென்றால், அதை தடுப்பது தெரியாமல், விருதாய் வழங்கி விட்டால், சைடு பார் எல்லாம் நிரம்பி........போஸ்டிங் போடும் இடத்திலும்.... தேங்க்ஸ் A, தேங்க்ஸ் B, தேங்க்ஸ் C,........... என்பதாக போட்டு வைத்துக் கொள்வாரல்லவா? இனி, அவர் பதிவில் இருந்து எஸ்கேப்.........! இது போன்று என் பதிவில் இருந்து எஸ்கேப் ஆக நினைப்பவர்களை, எனக்கு மனமுவந்து விருந்து...சாரி விருதளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விருது தான் வேண்டாம்னு சொன்னேன், ஓட்டு போடுவதை சொல்லல! :-)

-சுமஜ்லா.
.
.

20 comments:

நட்புடன் ஜமால் said...

ஒரு வேளை இப்படி இருக்குமோ? ஒரு பதிவர் பதிவு போடுவது சகிக்கவில்லையென்றால், அதை தடுப்பது தெரியாமல், விருதாய் வழங்கி விட்டால், சைடு பார் எல்லாம் நிரம்பி........போஸ்டிங் போடும் இடத்திலும்.... தேங்க்ஸ் A, தேங்க்ஸ் B, தேங்க்ஸ் C,........... என்பதாக போட்டு வைத்துக் கொள்வாரல்லவா? இனி, அவர் பதிவில் இருந்து எஸ்கேப்..]]


ஓஓஓ ...

நட்புடன் ஜமால் said...

அவள் தோழி விருந்துக்கு கூப்பிட்டிருந்தது நினைவுக்கு வர, கிளம்பினாள்.

போய் பார்த்ததும் தான் தெரிந்தது, அது விருந்தல்ல...விருது என்று! பிறகென்ன, சுமக்க முடியாமல் சுமந்து வீட்டு வந்தாள்.]]


ஹா ஹா ஹா

Vidhoosh said...

அய்யயோ. இப்பத்தான் வீட்டுப்புறா சக்தி எனக்கு ஒரு விருது வழங்கிட்டுப் போனாரு. அதுக்கு நன்றி சொல்லிட்டு இங்க வந்தா இப்படியா...

ஆனால் ஒரு விஷயம் சுகைனா. நம் சொந்த நேரம், அறிவு, முயற்சி எல்லாவற்றையும் கொடுத்து பதிவு எழுதுகிறோம். அது அடுத்தவருக்கு விருப்பமானதாகவோ, இல்லை பயனளிக்க கூடியதாகவோ இருக்கவேண்டும் என்றே நம் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு.

விருது என்பது முகமறியா நட்பின் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன். மற்றபடி, இது ஒரு மகிழ்ச்சி பரிமாற்றம்தான்.

--வித்யா

Jaleela Kamal said...

“இந்தாங்க உங்க சேவையை பாராட்டி இந்த “எருது” வழங்குகிறேன்.”
ஹா ஹா ஒரே சிரிப்பு தா போங்க.

எனக்கும் இந்த விருதில் எல்லாம் உடன்பாடில்லை, நான் பதிவுகள் போட ஆரம்பித்ததே பயனுள்ள தகவல் சில பேரையாவது சென்றடையனும் என்ப‌து தான் என் எண்ண‌ம்.

ஆனால் ப‌க்க‌ங்க‌ள் நிர‌ம்புவ‌து உண்மை.

அப்பாவி முரு said...

//விருது தான் வேண்டாம்னு சொன்னேன், ஓட்டு போடுவதை சொல்லல! :-)//

முரண்பாடாக இருக்கே...

Anonymous said...

http://ammus-recipes.blogspot.com/2009/08/tag.html

poi parunga...

Thanks,
Ammu.

SUMAZLA/சுமஜ்லா said...

//விருது என்பது முகமறியா நட்பின் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன். மற்றபடி, இது ஒரு மகிழ்ச்சி பரிமாற்றம்தான்.//

இந்த கருத்து சரிதான் வித்யா. என்னோட கருத்தும் இதே தான். ஆனா, முன்னாடி பட்டாம்பூச்சி விருதுன்னு ஒன்னு இருந்தது. அதுக்கு ஒரு மதிப்பும் இருந்தது. ஆனா, இப்ப தடுக்கி விழுந்தா ஒரு விருதுன்னு, கோரல் டிரா, போட்டோஷாப் தெரிந்தவங்க எல்லாம் ஆளுக்கொரு விருதா உருவாக்க ஆரம்பித்தால்....விருது கொடுக்க ஆளில்லாமல், கொடுத்தவருக்கே மீண்டும் மீண்டும் கொடுப்பது....இதெல்லாம் எனக்கு என்னவோ போல் இருக்கிறது. எவ்வளவு பேரின் பேரைத்தான் சைடு பாரில் போட்டு வைத்து கொள்வது?

Vidhoosh said...

அதான் உங்க பிரச்சினைனா, http://www.slide.com/ என்ற இணையத்தில் படத்தை எல்லாம் flash-presentation போல மாற்றி code தராங்க. அதை உங்கள் விருப்பம் போல உங்கள் தளத்துக்கு ஏற்ற width and breadth மாற்றி அமைத்து, எல்லாப் "படத்தையும்" (ஹி ஹி) ஒரே இடத்தில காட்டிடலாம்...

--வித்யா

சீமான்கனி said...

“இந்த விருது போதுமா...இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
இன்னும் கொஞ்சம் வந்திட்டா...பதிவுலகம் தாங்குமா?”

“வாலு...நீங்க அடமானம் வெச்ச விருதுகளை முதலில் மீட்டுட்டு வாங்க...அதுவரைக்கும் நான் கொடி பிடிக்கிறேன்........”
:))))))))))))).....

:((((((((((((((((((((....

SUMAZLA/சுமஜ்லா said...

விதூ, நான் இங்கே அப்படித்தானே காட்டிட்டு இருக்கேன். இது நானே அடோப் இமேஜ் ரெடியில் போட்டு செய்தது. இன்னும் நாலு பிக்ஸ் இதில் சேர்க்கணும், அதோடு, ஒரு இருவது பேரின் பேரையும்.... டைம் இல்லப்பா...

SUMAZLA/சுமஜ்லா said...

சீமான், வாலுகிட்ட போட்டு கொடுத்துராதிங்க:-)

"உழவன்" "Uzhavan" said...

//விருது என்பது முகமறியா நட்பின் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன். மற்றபடி, இது ஒரு மகிழ்ச்சி பரிமாற்றம்தான்.//

வித்யா அவர்கள் சொன்னதுபோல, இது ஒரு முகமறியா நட்பின் அங்கீகாரமே. நாம் சந்தித்துக்கொண்டால் ஒருவருக்கொருவர் ஹலோ சொல்லிக்கொள்வதில்லை; நலம் விசாரிப்பதில்லையா... என்னடா இது நல்லா இருக்குறீங்களானு கேட்க நாம என்ன மருத்துவமனையிலா சந்திக்கிறோம் இப்படியெல்லாம் சலித்துக்கொள்கிறோமா. இல்லையே.. அதுபோல்தான் இதுவும்.

இதற்கு முன்னர் நீங்கள் எழுதிய ஒரு இடுகையில், இதுவரை யாருமே என்னை 32 கேள்வி-பதில் தொடர் இடுகைக்கு அழைக்காதது வருத்தமே என் சொல்லியிருந்தீர்கள். அதுபோல, யாருமே உங்களுக்கு எந்த விருதும் ஒருவேளை வழங்கவில்லையெனில், பின்னாளில் யாருமே எனக்கு எந்த விருதும் இதுவரை வழங்காதது வருத்தமளிக்கிறது என்று நீங்கள் சொல்லக்கூடாதல்லவா.

நீங்கள் சொன்னது போல, விருது என்றால் அதற்கென்று ஒரு அங்கீகாரம் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட விருதுகளை பெறுவதற்குத்தான் அனைவரும் ஆசைப்படுவர்.

பதிவர்கள் தங்களது ஆரம்ப காலங்களில், பின்னூட்டங்கள் நிறைய இல்லையே என்று ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் ஏங்கிய நாட்கள் இருக்கும். அதுபோலதான் ஐயோ நமக்கு யாருமே விருது கொடுக்கவில்லையே எனவும் எண்ணியிருப்பர்.

இதுபோன்று யாரும் எண்ணிவிடக்கூடாது என்று கருதியும், இவன் யார் நமக்கு விருது கொடுப்பதற்கு; விருது கொடுக்கும் அளவிற்கு இவன் என்ன பெரிய சாதனையாளனா என்றெல்லாம் யாரும் எண்ணிவிடக்கூடாது என்ற எண்ணத்தால்தான், நான் சமீபத்தில் பெற்ற இரண்டு விருதுக்களையும் மற்றோருக்குக் கொடுக்கவில்லை.

அன்புடன்
உழவன்

SUMAZLA/சுமஜ்லா said...

உழவன், நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான். முதன்முதலில், நீங்கள் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்த போது, எனக்கு ரொம்பவும் பெருமையாகவும் மகிழ்வாகவும் இருந்தது...:-)

ஆனால், அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சாகிவிடுவது போல, ஆளாளுக்கு புதுப்புது பேரில் விருதுகள் உருவாக்குவது தான் எனக்கு உடன்பாடில்லை...

நீங்கள் எனக்கு தந்த விருதை நான், வேறு இருவருக்கும் தர முயன்ற போது, தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பினேன். இதனால், என்ன பயன் என்று பதில் வந்தது.அதோடு விட்டு விட்டேன். அதன் பிறகு இதுவரை யாருக்கும் தர முயற்சிக்கவில்லை....

32 கேள்வி என்பது குறித்து ஒரு ஆதங்கம் இருந்தது உண்மைதான்.

ஆனால், விருது விஷயத்தில், தரலாம்...ஆனால், சைடு பாரில் போட வேண்டும், அதோடு பத்து பேருக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையால், பிடிக்குதோ பிடிக்கவில்லையோ, பத்து பேரை தேட வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். அது தான் எனக்கு அலர்ஜியாக இருந்தது.

மற்றபடி இது ஒரு நகைச்சுவை பதிவு தான். யார் மனதையும் புண்படுத்த அல்ல.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...

உண்மைதான் எனக்கு விருதெல்லாம் குடுத்திருக்கிறாகள்... அதன் போது நான் அனுபவித்த சங்கடங்களை வேறுயாரும் அனுபவிக்கக்கூடாதென்பதற்காக யாருக்கும் விருது வழங்குவதில்லை.

என்னைபொறுத்தவரை எரிதங்களை ஒருபோதும் விரும்புவதில்லை... அவ்வாறே சில விருதுகளும்.. :)) நிறைய ரசித்தேன் உங்கள் பதிவை..

வால்பையன் said...

எனது எண்ணங்களை பிரதிபலித்து விட்டீர்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒன்றிரண்டு என்றால் ஓ.கே.தான்.

ஆனால் அந்த நிபந்தனைகள்!!!

அதனால்,
'அளவிற்கு மீறும் அமிர்தமும்
நஞ்சு' என்று நீங்கள் கூறியது
முற்றிலும் சரி.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி, மதுவதனன், வால் பையன் & நிஜாமுதீன் அண்ணா...

மாத்திரை கசப்பாக இருந்தாலும், இனிப்பால் கோட் பண்ணி இருக்கிறதல்லவா? அது போல் தான் நகைச்சுவையான இந்த கசப்பு மாத்திரை, பதிவுலகத்திற்கு அவசியம் தேவை என்று தான்... ஆனால், மீண்டும் சொல்கிறேன், இது யார் மனதையும் புண்படுத்த அல்ல:))

SUFFIX said...

//“நாங்க மலைப்பாம்பு நடத்தும் மலைஞர் டி.வி.க்காக, “மனிதனாட”னு நிகழ்ச்சி நடத்திட்டு வர்ரோம். அதுக்கு தான் இங்க சூட்டிங் நடக்குது!”//

இது எல்லாம் ரொம்ப ஓவரு....ஹீ..ஹீ

SUFFIX said...

சரி விடுங்க, விருது தானே:::::)

SUMAZLA/சுமஜ்லா said...

//சரி விடுங்க, விருது தானே:::::)//

ஆமாம், விட்டுட்டேன்!