நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய கவிதைகளை தொகுத்து ஒரு பிரிண்டட் காப்பியாக்கி தந்தார்கள். அதை PLUMED POEMS என்ற பெயரில், நூலாக்கி இன்றும் பாதுகாத்து வருகிறேன். பார்க்க அதன் புகைப்படம்:
இதில், ASHYA SUHAINA என்று இருப்பது, என் கெஸட் பெயராகும். இதில் இருக்கும் கவிதைகளை ஒவ்வொன்றாக அவ்வப்போது மொழிபெயர்க்கப்போகிறேன்.
முதலாவதாக நான் மொழிபெயர்க்க போவது, 14 வயதில் பள்ளியில் நடந்த போட்டிக்காக எழுதி, முதல் பரிசு பெற்ற கவிதையை. இதற்கு தலைப்பெல்லாம் இல்லை. கொடுக்கப்பட்ட ப்ளோ அப் படத்தை பார்த்து, ஒரு மணி நேரத்தில் கவிதை எழுத வேண்டும், அங்கேயே...! இதோ அக்கவிதை!
GOD'S MESSAGE TO MANKIND
The voice of nature is so sweet
...Enlightening me with joy and bliss,
It sorrounds my thoughts and makes me bright
...And covers everything with smog and mist.
The snow clad pillar is standing still
...With not a single man to adore
This is the time to exhibit our skill
...I praise its beauty, therefore.
The mountain stretches, far and wide
...Welcoming me to cheer it a bit
Flowers are dancing side to side
...Depicting its own humour and wit.
In this magnificient picture, I can see,
...God's message to the mankind
Boundless joy and endless glee
...In every creation, I can find.
Nature dances on leaves as translucent dew
...Inspiring me and giving me good mood
And spreads along the free sky blue
...No doubt, it is a gift of God.
The huts and houses are caressing
...Their occupants, with great fortitude
The yellow tent is impressing
...As it enjoys the joy of solitude.
The wood is lively, wonderful and bright
...With its own beauty and splendour
Both natural and artificial make attracting sight
...Reflecting God's greatness and grandeur.
Scarlet dots on greenish bed
...Wonders on the creation of God
And russet flowers, tossing their head
...Amazes one, of the greatness of Lord.
-Sumazla.
பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்தி!
இயற்கையின் குரலில் வழிந்திடும் இனிமை,
பயனுறு மகிழ்ச்சிப் பேரொளி பரவ
நினைவெளியெங்கும் நித்தியம் பெற்று,
பனித்துளிபுகையாய் தனித்துவம் தருதே!
பனியுடை போர்த்தி, தனியனாய் நிற்கும்,
மணிக்கம்ப மாட்சிமை உணர்வாரில்லை,
தனிதிறன் யாவும் வெளிபடும் நேரம்
இனியதன் அழகை புகழ்ந்திடுவேனே!
மலைச்சரிவிரிவோ, யாங்கிலும் யாங்கிலும்,
தனைமகிழ்வூட்ட எனையழைத்திடுதே...
கலையழகோடு பூக்களின் நடனம்,
விலைமதிப்பில்லா, புன்னகை படலம்.
காணரும் ஓவியத்தில் நான் காண்பதென்ன,
மானுடம் உய்த்திட இறைவனின் செய்தி!
வானிலுமடங்கா பேருவகை தன்னை,
ஒவ்வொரு படைப்பிலும், உணர்கின்றேனே!
இலையில் துளியாய் இயற்கையின் தாலாட்டு,
உயிரோடு ஊடுருவி, எனக்கு தரும் பாராட்டு,
அண்டப்பெருவெளியில் சிந்தும் தேனூற்று,
சந்தேகமென்ன, எல்லாம் இறையின் விளையாட்டு!
குடிசைகளும், கோபுரங்களும் தழுவுகின்றன,
குடியிருக்கும் இதயங்களை வருடுகின்றன,
கூடாரம் மஞ்சளாய் மயக்குகின்றது,
தனிமையின் இனிமையை பருகுகின்றது!
அற்புத கானகம், அழகுடன் மிளிர,
பொற்புதையலாக ஒளித்துளி வெள்ளம் -
இயலும் செயலும் கரங்கள் இணைக்க,
இறையுணர்வாலே இதயங்கள் துள்ளும்.
பசும்பட்டில் பூத்த செந்நிற பூக்கள்,
பரம்பொருள் படைப்பின் விநோதம் காண
பழுப்புடன் சிவப்பாய் ஆடிடும் மலர்கள்,
பிரபஞ்ச ஆதிக்கன் பெருமையை பேசுதே?!
-சுமஜ்லா.
(திறந்த மனதுடன் நிறை குறைகளை பின்னூட்டத்தில் அலசினால், அடுத்தடுத்து, இன்னும் செம்மையாக்க முடியும்)
.
Tweet | ||||
12 comments:
அப்பவே எழுதியிருக்கீங்க
வாழ்த்துகள்.
மொழி பெயர்க்கும் முயற்சி அழகு தான்
தமிழில் கொடுப்பதால் என்னை போன்றோருக்கு கொஞ்சமேனும் புரியும்
நன்றி.
முதல் ஊட்டத்துக்கு நன்றி ஜமால்.
//அப்பவே எழுதியிருக்கீங்க//
என் முதல் கவிதை எட்டு வயதில்...
வயதுகள் வளர வளர வார்த்தைப் பரிமாணங்களும் முதிர்ந்தன!
//தமிழில் கொடுப்பதால் என்னை போன்றோருக்கு கொஞ்சமேனும் புரியும்//
அடுத்த முயற்சியில் இன்னும் கொஞ்சம் எளிமையாக்க முயல்கிறேன், நண்பரே!
தமிழ்படுத்துதல் சாதாரணமான விஷயம் இல்லை...
உங்களுக்கு அது நன்றாக அல்ல.. மிகவும் நன்றாக வருகிறது!
8 வயசுலேயா? ம்ம்... மூத்த பதிவராயிட்டீங்க!!
இயற்கையின் அழகை சிறு வயதில்
ஆங்கிலத்திலும் இப்போது பெரு வயதில்
தமிழிலும் கவியாக வடித்துள்ளீர்கள்.
இரு சுமஜ்லாவுக்கும் பாராட்டுக்கள்.
நன்றி கலையரசன், நான் எழுதிய கவிதைக்கு நானே மொழியாக்கம் செய்வது விநோதமாக இருக்கிறது, எனக்கே!
சில ஆங்கில புத்தகங்களை மொழியாக்கம் செய்து தர இயலுமா என்று ஒரு பப்ளிஷர் இன்று கேட்டார், புக் ஃபேரில்! அதன் தாக்கம் தான், இந்த சோதனை முயற்சி! இதை எழுத கூட இல்லை, நேரடி டைப்பிங் தான்.
மிக நன்று என்று பாராட்டியமை புத்துணர்ச்சி தருகிறது.
8 வயசுல பதிவராகலையே?! அந்த வயதில் எழுதிய என் முதல் கவிதையை எனது என்று அங்கீகரிக்க, என் ஆசிரியை மறுத்த காரணத்தால், மனம் நொந்து, அதன் பின் வெளிப்படுத்தாமலே எழுதி வந்தேன். பிறகு 7த் 8த் படிக்கும் போது, நான் வாங்கிய முதல் பரிசுகள் தான் மீண்டும் என்னை அடையாளம் காட்டியது! அது ஒரு கனாக்காலம்.
பெரு வயது என்றால், ரொம்ப கிழவி போல் தோன்றுகிறதே?!
அப்புறம், இரண்டும் சுமஜ்லாக்கள் இல்லை. அன்று நான் ஏஷ்யா. என் பள்ளியில் அப்படி உச்சரிப்பார்கள். அப்போ, ‘மஜ்’ ஜும் இல்லை ‘லா’ க்களும் இல்லையே?!
ஓ 'ரொம்ப' கிழவி என்று அர்த்தம் வருகிறதோ!
அதாவது 'சிறு வயதிலேயே பெரு(ம்) மன முதிர்ச்சி
பெற்ற சுமஜ்லா' என்று என் வார்த்தையின் பொருள்
விரிவாக்கம் செய்து கொள்ளுங்கள்.
இப்ப அர்த்தம் ஓ.கே.தானே?
மிக அருமை.. மொழிபெயர்ப்பும் மிகக் கச்சிதம். மெட்டுக்கு பாட்டு எழுதியத் தாக்கம் தெரிவது போல ஒரு உணர்வு(எனக்கு மட்டும்).
//அற்புத கானகம், அழகுடன் மிளிர,
பொற்புதையலாக ஒளித்துளி வெள்ளம் -//
சரியான மொழிபெயர்ப்பு...
நண்பர் சோல்ஜருக்கு,
நீங்கள் மெட்டை அனுப்பினால், பாடல் எழுதி அனுப்புகிறேன், மின்னஞ்சலில்...
//இப்ப அர்த்தம் ஓ.கே.தானே?//
ஓக்கே பாஸ்!
//மிக அருமை.. மொழிபெயர்ப்பும் மிகக் கச்சிதம். மெட்டுக்கு பாட்டு எழுதியத் தாக்கம் தெரிவது போல ஒரு உணர்வு//
நன்றி! அன்று எழுதிய கவிதையைவிட, இன்றைய மொழிபெயர்ப்பை தான் நானும் மிகவும் ரசித்தேன். எழுத்து என்னுடையதாக இருந்தாலும், அதன் முதல் ரசிகன்(கை) நான் தான், தாய் தன் குழந்தையை ரசிப்பது போல. பல தடவை படித்து படித்து, சில போது மனனம் கூட ஆகிவிடும். நான் கொஞ்சம் லூசுங்க!
இந்தியாவின் ஷேச்க்பியர்
//இந்தியாவின் ஷேச்க்பியர்//
அட, அட, அட, நீங்க வேற!
ஆனா, ஒரு விஷயம்; நான் படித்த பள்ளி கலைமகள் கல்வி நிலையம். என் திறமைகள் அனைத்துக்கும் காரணமாக அமைந்த பாசறை!
நம்ம கவிக்குயில் சரோஜினி நாயுடுவை, நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா என்பார்கள். பள்ளியில் என் செல்ல பெயர், நைட்டிங்கேல் ஆஃப் கலைமகள்! பெருமை பேசவில்லை, ஜஸ்ட் மலரும் நினைவுகள்...
Post a Comment