Sunday, September 27, 2009

தேவையை தருவாய் தேவதையே...

முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆக, இந்த தேவதை, இறையின் தூதாக கொண்டு பதில் தருகிறேன்.

ஏகாந்த தனிமையில், மொட்டை மாடியில், கவலையோடு அமர்ந்திருந்தேன்...

வழக்கமான என் பொழுதுபோக்கான நட்சத்திர ஆராய்ச்சி கூட செய்யவில்லை...

ஆனால், இரண்டு நட்சத்திரங்கள் என்னை பார்த்து கண்சிமிட்டின. கொஞ்சம் கொஞ்சமாக அவை அருகில் வர, எங்கிருந்து, அதன் பின்னால், இரண்டு நிலாக்கள் முளைத்தன? அட, இறக்கைகள்...

கண்ணை மூடி திறந்தபோது தெரிந்தது, நவாஸும், சதீஷும் என்னிடம் அனுப்பியிருப்பது...

ஆசைக்கா பஞ்சம்...என் கவலைக்கு காரணமே அதானே???

இதோ என் வேண்டுகோள்களின் பட்டியல்!

1.எல்லா அசைன்மெண்ட்டுகள் மற்றும் ரெகார்டுகளும் தானாக எழுதப்பட்டு விட வேண்டும்.

2.பேனாவை எடுத்து பேப்பரில் வைத்தால், தானாகவே பரிச்சை எழுதி விட வேண்டும்.

3.சிஸ்டம் முன்பாக உட்காரும் தேவை இல்லாமல், நான் மனதில் நினைத்து எண்டர் கொடுப்பது, பதிவாக வந்து விட வேண்டும்.

4.வீட்டு வேலைகளை எல்லாம் நொடியில் முடித்து தர, சொன்ன வேலையை செய்யும் ஒரு ரோபோ வேண்டும்.

5.மாதம் ஒரு முறை, உலகின் எதாவது ஒரு மூலைக்கு விர்ச்சுவல் டூர் போய் வந்து, அந்த கட்டுரையை என் ப்ளாகில் போட வேண்டும்.

6.உள்ளே கை விட்டு எடுக்க எடுக்க, ஆயிரம் ருபாய் நோட்டுக்களாக(அல்லது தங்க கட்டிகளாக) வரும் ஒரு உண்டியல் வேண்டும்.

7.எழுத்துலகில் ஒரு பவர்ஃபுல் சக்தியாக நான் உருவெடுக்க வேண்டும்.

8.என்றென்றும் வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்க வேண்டும்.

9.வெளியே சொல்ல முடியாமல், மனதில் இருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேற வேண்டும்.

என்ன, எல்லாம் சுயநலமாக இருக்கு என்று பார்க்கிறீர்களா? இதோ என் பத்தாவது வேண்டுகோள்.....

10.இந்த உலகில் துன்பம் என்பதே யாருக்கும் இருக்கக் கூடாது!

இதில் எல்லாமே அடங்கி விட்டதல்லவா??????

தேவதை எல்லாவற்றையும் கேட்டு விட்டு, ‘இவை ஆசைகள் அல்ல, பேராசைகள். அதனால், இவை எல்லாம் நிறைவேற நீ மறு உலகம் வர வேண்டும்’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டது...இப்போதைக்கு நான் இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பதாக இல்லை...என்ன செய்யலாம் சொல்லுங்கள்?!

-சுமஜ்லா.

18 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இந்த உலகில் துன்பம் என்பதே யாருக்கும் இருக்கக் கூடாது!//

இந்த ஒன்று போதும், மற்ற ஒன்பதும்
வேண்டாம்.

இதுக்குப் பேருதான் முத்தாய்ப்பு!

S.A. நவாஸுதீன் said...

ஒரு ஸ்டூடண்ட்டா, ஒரு சிறந்த பதிவரா, ஒரு நல்ல குடும்பத் தலைவியா, ஒரு எழுத்தாளரா கேட்டதும், கடைசியில் முத்தாய்ப்பாய் பத்தாவது வரமும் அருமை.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//பேனாவை எடுத்து பேப்பரில் வைத்தால், தானாகவே பரிச்சை எழுதி விட வேண்டும்.


இளைஞர் சாய்ஸ் இதுதான்



http://saidapet2009.blogspot.com/2009/09/usename-password-firefox.html

ஸ்ரீ.கிருஷ்ணா: நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க

SUFFIX said...

//S.A. நவாஸுதீன் said...
ஒரு ஸ்டூடண்ட்டா, ஒரு சிறந்த பதிவரா, ஒரு நல்ல குடும்பத் தலைவியா, ஒரு எழுத்தாளரா கேட்டதும், கடைசியில் முத்தாய்ப்பாய் பத்தாவது வரமும் அருமை.//

சரியா சொன்னீங்க நவாஸ், வழிமொழிகிறேன்!!

SUMAZLA/சுமஜ்லா said...

//இதுக்குப் பேருதான் முத்தாய்ப்பு!//

நல்ல வார்த்தை!

//இளைஞர் சாய்ஸ் இதுதான்//

இப்போதைக்கு என்போன்ற கிழவிகள் சாய்ஸும்...!

//ஸ்ரீ.கிருஷ்ணா: நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க//

எங்க இன்னொரு மேடம் தன்னோட ஜிமெயில் யூசர் ஐடி பாஸ்வோர்டு என்னிடம் தந்திருக்கிறார். அவ்ளோ நெருங்கி பழகிட்டோம்...!

R.Gopi said...

பதிவை சுவாரசியமாக்கிய உங்கள் வரங்களின் வரிசையை படித்துக்கொண்டே வந்தபோது, 10வது வரத்தில், 10 சிக்ஸர்கள் அடித்து விட்டீர்கள் சுமஜ்லா...

நீங்கள் சொன்னது சரிதான்... அந்த பத்தில் எல்லாம் அடங்கி விட்டது...

வாழ்த்துக்கள்...

venkat said...

பத்தில் எல்லாம் அடங்கி விட்டது...

வாழ்த்துக்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லா வரமும் கிடைக்கட்டும்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லா வரமும் இறைவன் அருளால் கிடைக்க என் வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

//முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை//

இறைவிசுவாசம் அதுதான் என் சுவாசம்

சூப்பர் சுமஜ்லாக்கா

Jaleela Kamal said...

//முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை//

நல்ல அழகாக சொல்லி இருக்கீங்க சுஹைனா.

9 பதில்கள் படித்து சிரிக்க வைத்தாலும், பத்தாவதா சூப்பரா சொல்லிட்டீங்க.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

என்ன இப்படி சொல்லிடீங்க ?
நீங்களும் யூத் ராகுல் 35 வரை இளைஞர் சொல்லிடாரு .

IE பத்தி சொல்லனுனா 5 பதிவு போடணு அவ்ளோ பெரிய மேட்டர் , ஒவ்வொரு verson ஒவ்வொரு Type விரைவில் சொல்லுறேன் அக்கா,

அடுத்து ஜிமெயில் Hacking பத்தி படிசிட்ட்டு இருக்கேன் முடிஞ்சா சீக்கிரம் அந்த பதிவும் போடறேன்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

PDF File ஐ பேசவைக்கலாம் வாங்க.

கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கணடுபிடிப்பது எப்படி?
www.saidapet2009.blogspot.com

வால்பையன் said...

சோபேறியாய் இருப்பதற்கு வரமா!?
தேவதை வரம் கொடுக்காமலேயே நிறைய பேர் இப்படித்தானே இருக்கோம்!

"உழவன்" "Uzhavan" said...

துன்பம்னு எதையெல்லாம் சொல்லுறீங்க சுகைனா?

Yousufa said...

சுஹைனா,

மாணவி ஆனதால் மறுபடியும் யூத் ஆகிட்டீங்க??!! (ஏற்கனவே யூத்துதான் சொல்லிடுவீங்களே!)

மாணவி என்ற புதுப் பொறுப்பு உங்களை அதிக வேலைப்பளுவுக்கு ஆளாக்கியுள்ளது தெரிகிறது!! வழக்கம்போல் இதையும் எதிர்கொண்டு வென்று வந்துடுவீங்க.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வரம் கிடைக்க வாழ்த்துகள்.

SUMAZLA/சுமஜ்லா said...

வரம் கிடைக்க வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றி!

அப்ப நான் யூத் தானா???? சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறேன்...(நான் தான் யூத் ஆச்சே!)

அப்புறம் நம்ம ராகுல்...40 வயது வரை திருமணம் செய்யாவிட்டால், யூத் மார்ஜினையும் ஜாஸ்தி பண்ணிடுவார்னு நினைக்கிறேன்:)

//துன்பம்னு எதையெல்லாம் சொல்லுறீங்க சுகைனா?//

இதையெல்லாம் டிஃபைன் பண்ண முடியுமா? அது மனிதருக்கு மனிதர் வேறு படுமே?!

//மாணவி என்ற புதுப் பொறுப்பு உங்களை அதிக வேலைப்பளுவுக்கு ஆளாக்கியுள்ளது தெரிகிறது!! //

ஆம், மனைவி ஆன பின், மாணவி ஆனதால் தான்...கூடுதல் வேலைப்பளு!

//சோபேறியாய் இருப்பதற்கு வரமா!?//

என்ன இப்படி சொல்லிட்டிங்க? வாழ்க்கையில் ரசித்து அனுபவிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கே?!