கண்ணுக்கு விழியழகு
................கருவிழிக்கு மையழகு!
மண்ணுக்கு மழையழகு
................மழைதந்த முகிழலகு!!
பண்ணோடு சுதி சேர்ந்து
................எழிலூட்டும் அற்புதம் போல்
விண்ணுக்கு நிலவழகு
................நீள்வானின் ஒளியழகு!!
நெஞ்சத்தில் அன்பேற்றும்
................எண்ணத்தின் நிறையழகு!
மஞ்சத்தில் மலரழகு
................மையல் கூட்டும் மணமழகு!!
கொஞ்சம் தேன் குடித்தாடும்
................கோலத்தின் குறும்பழகு!
தஞ்சமென தலைமகனைத்
................தழுவிநிற்கும் சுகமழகு!!
-சுமஜ்லா
.
Tweet | ||||
28 comments:
நல்லா இருக்கு..
ஆஹா! அருமையானதொரு பாடலை அழகிய வரிகள் கொண்டு ஞாபகமூட்டிட்டீங்க ...
நன்றி யாதவன் & ஜமால்!
அந்த பாடல் வரும் முன்பாக தொண்ணூறுகளில் எழுதியது!
'சுறுக்'கமாய் 8 வரிகளில் கவிதை!
அதனால் மிக நிதானமாய் இரசிக்க
முடிந்தது.
//நெஞ்சத்தில் அன்பேற்றும்
..........எண்ணத்தின் நிறையழகு!//
கவனத்தில் கொள்ளத்தக்க வரி!
//நெஞ்சத்தில் அன்பேற்றும்
................எண்ணத்தின் நிறையழகு!
மஞ்சத்தில் மலரழகு
................மையல் கூட்டும் மணமழகு!!//
அருமை///
மொத்தத்தில் உங்கள் கவிதை அழகோ அழகு...
அழகு..அழகு என அழகான கவிதை... நல்லக் கவிதை.
'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுப் படுத்தியிருக்கிறோம்.(37:6)'
கவிதை நல்லா இருக்கு..
//அழகின் எழில்// அழகு எழில் இரண்டுமே ஒரே பொருள் தானே ?!?!?
//நெஞ்சத்தில் அன்பேற்றும்
................எண்ணத்தின் நிறையழகு!
மஞ்சத்தில் மலரழகு
................மையல் கூட்டும் மணமழகு!!
கொஞ்சம் தேன் குடித்தாடும்
................கோலத்தின் குறும்பழகு!
தஞ்சமென தலைமகனைத்
................தழுவிநிற்கும் சுகமழகு!!//
காதலை அழகு தமிழில் சொன்ன, உங்கள் கவிதை அழகோ அழகு...
வாழ்த்துக்கள் சுமஜ்லா....
ஆஹ்ஹா,ஆஹ்ஹா,அருமை.
உங்கள் பாடலுக்கு வரிகள் அழகு..
மழைக்காலத்துக்கு தேவையான உணவை சுறுசுறுப்பாக சேமிக்கும்.....
...................எறும்பழகு!
தைப்பொங்கல் அன்று வீட்டிற்கு முன் இருக்கும் ...................
...................கரும்பழகு!!
மொத்தத்தில் சுமஜ்லாவின் ...
...................கவிதைஅழகு!!!
வாழ்த்துக்கள் நன்றி.
க.பார்த்திபன்
சிங்கப்பூர்
தேங்க்ஸ் நிஜாம் அண்ணா,
//நெஞ்சத்தில் அன்பேற்றும்
..........எண்ணத்தின் நிறையழகு!//
இந்த வரிகளை சுவைத்து படித்தமைக்கு நன்றி!
நிதானமாக படித்தால் தான் இதன் அர்த்தத்தின் ஆழம் புரியும்!
ஹை! அரங்க பெருமாள் அண்ணா, நீங்க பீஸ் ட்ரைனை முந்திக்கிட்டிங்க!
//அழகு எழில் இரண்டுமே ஒரே பொருள் தானே ?!?!?//
ஒரே பொருள் என்பதால் தான் எழுதினேன்.
அழகு என்பது மேலோட்டமான வார்த்தை. எழில் என்பது ரசித்து சொல்லும் வார்த்தை!
அழகின் அழகை யாராவது உணர்ந்திருக்கிறோமா?
அதைத்தான் அழகின் எழில் என்பதாக எழுதியுள்ளேன். ‘ராஜாவின் ராஜா’ என்பது போல....
நன்றி கோபி,
நன்றி பீஸ் ட்ரைன்,
நன்றி தமிழரசி!
//மழைக்காலத்துக்கு தேவையான உணவை சுறுசுறுப்பாக சேமிக்கும்.....
...................எறும்பழகு!
தைப்பொங்கல் அன்று வீட்டிற்கு முன் இருக்கும் ...................
...................கரும்பழகு!!
மொத்தத்தில் சுமஜ்லாவின் ...
...................கவிதைஅழகு!!!
வாழ்த்துக்கள் நன்றி.
க.பார்த்திபன்//
ஹைய்யோ, என் கவிதையைப் பற்றியே ஒரு கவிதையா? ரொம்ப நல்லா இருக்கு!
இதே வரிகளை நான் எழுதியிருந்தால், இப்படி இருக்கும்,
மழைக்கால சேமிப்பை
..........வலியுறுத்தும் எறும்பழகு!
தைப்பொங்கல் நாளன்று
........நாம் சுவைக்கும் கரும்பழகு!!
என்று!!
இதே மாதிரி என்னைப் பற்றி ஒரு அக்கா கவிதை எழுதி தந்தாங்க...அதை இன்னொரு நாள் போடுகிறேன்!!!
இக்கவிதையில் முதல் நான்கு வரிகள் இயற்கையின் அழகை சொல்கிறது!
அடுத்த நான்கு வரிகள், காதலின் சுவையை, காதல் கனிந்து காமத்தில் முடிவதை, படிபடியாக உணர்த்துகிறது.
தலைவன், தலைவி இருவரும் தம் எண்ணத்தால் ஒருவருடைய நெஞ்சத்தில் ஒருவர் அன்பை ஏற்றுகிறார்கள், மிக அழகாக!
அடுத்து மலரோடு கூடிய மஞ்சம், அவர்களுக்கு இடையே மையலை - ஈர்ப்பை கூட்டுகிறது!
பின், காதல் தேனை கொஞ்சமாய் சுவைத்த பின் ஒரு போதை வருமே - அந்த கோலத்தில், இருவரிடையே பரிமாறிக்கொள்ளும் குறும்பான பார்வை மிகவும் அழகு!!
கடைசியாக, தலைமகனை தஞ்சமடைய, தழுவிக்கொள்ளும் போது, அந்த சுகம் அழகோ அழகு!!
(பொழிப்புரை எழுதி, ஆசிரியைனு நிரூபிச்சிட்டீங்கன்னு சொல்வது கேட்குது)
கவிதை ரொம்ப அழகு.. சின்ன தானாக ஸ்வீட்டாக இருக்கு //கொஞ்சம் தேன் குடித்தாடும்
................கோலத்தின் குறும்பழகு!
தஞ்சமென தலைமகனைத்
................தழுவிநிற்கும் சுகமழகு//அழகு சுமஜ்லா
ரீடரில் தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.அனைத்தும் அருமை.இந்தக்கவிதையை சொல்லவும் வேண்டுமா? தங்கள் ஆசிரியக்கனவு நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அழகின் கவிதையை கவிதையாய் எழுதிய சுஹைனாவின், கவிதை + அதன் பொழிப்புரையோடு அருமை அருமை//
உங்கள் கவிதை அழகு
உங்கள் எழுத்து நடை அழகு
ஆக மொத்தத்தில் அழகு^2
சுகமான உங்கள் கவிதை அழகு!!
வைரமுத்து கண்ணுக்கு மை அழகு எழுதுவதற்கு முன்னாடியே இப்படி ஒரு அருமையான பாடல். ரொம்ப நல்லா இருக்கு சகோதரி
எல்லாருக்கும் தேங்க்ஸ்ங்க!
பாயிஜா, உங்க சாமந்தி பூ கூட ரொம்பவும் அழகு!
நன்றி ஆசியா அக்கா, உங்க வாழ்த்துக்கும், துவாவுக்கும்...
ஜலீலாக்கா உங்க பின்னூட்டம் கூட கவிதையாய்...
அதிரை அபுபக்கர், அழகு பவர் 2 வா? தேங்க்ஸ்ங்க!
நவாஸ், ஷஃபி ரெண்டு பேருக்கும் நன்றி!
//தஞ்சமென தலைமகனைத்
................தழுவிநிற்கும் சுகமழகு!!//
ஆஹா கவிதை அழகு
ashtavathaaniyaaka irukkireerkal sakothari.vazthukal.
நன்றி பராரி & பீஸ் ட்ரைன்!
வரிகள் எல்லாமே அழகு
Post a Comment