Tuesday, September 1, 2009

மரபு கவிதையும் புது கவிதையும்

(பள்ளி நாட்களில் கட்டுரை போட்டிக்காக எழுதி பரிசு வாங்கிய கட்டுரை இது. இதில் வரும் கவிதைகள் என்னுடையதல்ல, ஆனால், கட்டுரை நான் எழுதியது(மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்து அதை வாங்கி வரலாம் என்றால் அப்படி யாருமில்லை எனக்கு)! விரிவஞ்சி சற்றே சுருக்கி இருக்கிறேன். 15 வயதில் எழுதியது என்பதால், தவறு இருந்தால், பொறுத்து கொள்ளுங்கள்)

கலைகளுள் சிறந்ததொரு கலையாய் திகழ்வது கவி எழுதும் கலையாகும். சிறந்த நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் நயமாக உணர்த்துவதைக் கவிதை எனலாம். அக்கவிதையை மரபு கவிதை, வசன கவிதை, புது கவிதை என்று பிரிப்பர்.

“செல்வத்துள் செல்வம் கவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”

என்று நாம் ஒரு புது குறளே உருவாக்கலாம்.

பன்னரும் புலவர்களும் எண்ணருங் கவிஞர்களும் அன்று வாழ்ந்தனர்; இன்று வாழ்கின்றனர்; என்றும் வாழ்வர்!

“கவிதை என்பது உள்மனதிலிருந்து சுயமாக பொங்கி வரக்கூடிய ஆழ்ந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு” என்கிறார் வோர்ட்ஸ் வொர்த் என்னும் ஆங்கிலக்கவி.

கவிதை எழுதுவோரை நாம் முப்பகுப்பாக்கிக் காட்டலாம். கட்டுத்தளைகளை வெட்டி எறிய வேண்டும் என்ற கருத்தாளராய் கவி புனைவோர் முதலாம் வகையினர். மரபு பாதையில் நடைபோடுபவர் இரண்டாம் வகையினர். மரபுக் கவிதையின் யாப்பிலிருந்து ஒதுங்கி நிற்போர் மூன்றாம் வகையினர்.

சங்க இலக்கியம் தாங்கருந் தனிசிறப்பு வாய்ந்தது. அதில் யாப்பு விதிக்கு உட்பட்டு சொற்செறிவோடும் நகைச்சுவையாகவும் கவிகள் இயற்றப்பட்டன. பல வெண்பாக்களும் நீதி நெறி பாக்களும், தொடர்நிலை செய்யுள்களும் மலர்ந்தன. ஒரு சாதாரண கருத்தை கவிமொழியிலே அழகாக வழங்கி வந்தனர்.

யாப்பு விதிகளுக்குள் முகிழ்க்கும் கவிதைகளை மரபு கவிதை என்று கூறுவர். அக்கவிதைகள் வாழ்க்கை குறிப்புகள் பற்றியும், தலைவன் தலைவி காதல் பற்றியும், போர்பரணியாகவும், தனிப்பாடலாகவும் வெளிவந்துள்ளன.

“குடத்திலே கங்கை அடங்குமா?”

ஆனால், தன் பாடலால் அடங்க வைக்கிறார் காளமேக புலவர்.

“விண்ணுக்கடங்காமல் வெற்புக்கடங்காமல்
மண்ணுக்கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்.”

அதாவது சடா மகுடம் என்பதை சடாம குடம் என்று பிரித்து நகைச்சுவைபட பாடுகிறார்.

பாரதி,

“சொந்த நாட்டில் பிரக்கடிமை செய்து
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்” என்று பாடி விடுதலை உணர்வை முன் வைக்கிறார்.

பாரதிதாசனோ,

“கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
களையிடையேறிய சாறும்
இனியன என்பேன் எனினும் - தமிழை ‘
என்னுயிர் என்பேன் கண்டீர்” என்று தமிழை முற்படுத்தி பாடுகிறார்.
(1992ல் எழுதிய அதே பேப்பர்; எம் ஆசிரியை சிவப்பு இன்க்கால், பிழை திருத்தம் செய்திருப்பதை காணலாம்)

தமிழனின் இனிமையையும் தொன்மையையும் உணர்த்தும் பல பாடல்களையும் அப்பாடலை இயற்றிய புலவர்களை பற்றியும் நாம் வரலாற்று ஏடுகளில் காணலாம். நக்கீரர், கபிலர், பாணர், பரணர் போன்ற ஆண்பாற் புலவர்களும், இளவெயினி, நச்செல்லையார், காக்கைபாடினியார், ஔவையார் போன்ற பெண்பாற் புலவர்களும் சங்க காலத்தில் வாழ்ந்தனர். அவர்கள் வள்ளல்களாலும் மன்னர்களாலும் புரக்கப்பட்டனர்.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழியுமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற்
செறியெயிற்றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ யறியும் பூவே”

என்ற பாடலை எதிர்த்து நக்கீரர் வாதிட்டதன் மூலம், நாம் புலவர்களின் தமிழ் புலமையையும் நாவன்மையையும் உணர்ந்து கொள்ளலாம்.

புதுக்கவிதையை நாம் ‘ யாப்புக்களின் சிறைக்குள் இருக்காமல், கருத்துக்களால், தன்னைத்தானே ஆளும் ஜனாதிபதி’ என்று கூறலாம். இது பெரும்பாலும், விடுதலை வேற்கையையும் மறுமலர்ச்சிக்கான எழுச்சியையும் தேசப்பற்றையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

புதுக்கவிதையில் பிற மொழி சொற்கலப்பை காணலாம்.

“தீண்டாமை வேண்டாமென்று
தெருவெல்லாம் முழக்கம்.
ஆனால், அது எனக்கு மட்டும் வேண்டுமாம்...
ஏன்?
கோபாவேசத்துடன் கேட்டது கோப்ரா!(Cobra என்னும் மலைப்பாம்பு)”

புதுக்கவிதைகளிலே ஹைக்கூ கவிதைகள், நம் எண்ணத்தைக் கிளர்ந்தெழச்செய்து, நம்மை சிந்திக்க தூண்டுகின்றன.

“சுதந்திரம்
இரவில் வாங்கினோம்,
இன்னும் விடியவேயில்லை!”

“சூரிய மணாளன்
பள்ளியறை புகுமுன்
துப்பி சென்ற எச்சில்”

“வானச்சுவரில்
சூரிய மூட்டை பூச்சியை
நசுக்கியது யார்?”

“அந்திச்சிவப்பு
செவ்வானத்தின்
அன்றாட பூப்பு!”

இப்படி அந்தியில் சிவந்த வானத்தை பலரும் பலவாறாக வர்ணிக்கின்றனர்.

ஆனால், மரபுக் கவிதையிலே சூரியனை வர்ணிக்கையில்,

“ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்தின் இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையாது
தன்னேரில்லாத தமிழ்!” என்ரு குறிப்பிடுகிறார்.

மனிதன் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சியை சுவைபட விவரிக்கும் போது அங்கு கவிதை பிறக்கிறது. அத்தகைய கவிதைகள் விழிப்புணர்வூட்டுபவையாகவும், சாதிசமயத்தை சாடுபவையாகவும் இருக்கின்றன.

“ஜாதியும் மதமும் மனிதனைக் கட்டிப் போடுவதா?
ஜனங்களின் இதயம் கண்ணீரில் துருப்பிடிப்பதா?
எல்லோரும் பத்து மாசம் தான் எண்ணி பாருங்கள்..
எல்லோர்க்கும் பசி தாகம் தான் உணர்ந்து பாருங்கள்..

கீழ்சாதி என்பதால், பாலும் தேனும் கசக்குமா?
மேல்சாதி என்பதால், பாகற்காய் கூட இனிக்குமா?
இரத்தத்திலே வானவில் நிறங்களின் பேதமா?
இல்லை ஆகாயத்தில் இருந்து பிறந்ததாக வேதமா?”

என்று கவிஞர் கேள்விக்கணைகளை கவி வில்லிலிருந்து அனுப்புகிறார்.

“தமிழ் நடந்து வந்தால் உரை நடை,
நடனமாடி வந்தால், கவிதை,
டிஸ்கோ ஆடி வந்தால், புதுக்கவிதை”

என்று வேடிக்கையாக சொன்னார் ஒரு கவிஞர்.

மரபுக்கவிதைகள் அருளையும் பொருளையும் வேண்டி எழுதப்பட்டன. புதுக்கவிதைகள் இலக்கு ஏதுமின்றி, இன்பம் பயத்தற் பொருட்டு எழுதப்படுகின்றன.

நகைச்சுவையாகவும், வாழ்க்கைக்குறிப்பாகவும் பயிலும் மரபுக் கவிதை எளிதில் பொருள் விளங்கா! அடி, சீர், தளை, எதுகை, மோனை போன்றவை வரப்பெற்று, சொற்செறிவோடும் பொருட்செறிவோடும் விளங்கும்.

தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

“தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது.”

இதோ, பாம்பையும் வாழைப்பழத்தை ஒப்பிட்டு, இரண்டும் ஒன்று தான் என்கிறார் புலவர்!

“நஞ்சிருக்கும் தோலுரிக்கும், நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது
விஞ்சுமலர் தேம்பாயும் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்!”

புதுக்கவிதைக்கு தனக்கென தனி பாணி உண்டு. கருத்து செறிவோடு திகழ்ந்தாலும், அஃது எளிதில் பொருள் விளங்கக்கூடியது; சிந்திக்க தூண்டுவது!

“தென்னிலங்கை வேந்தன்
...திருநீற்று பக்தனென்று
பொன்னிலங்கை தனையெரித்து
...பொடியாக்கித் தந்து விட்டான்”

என்று ஒரு கவிஞர், அனுமானைப்பற்றி பாடுகிறார்.

“சுதந்திர வெளிச்சம்
...சேரியில் விழாமல்,
மாளிகை நிழல்களே
...மறைத்து கொண்டன”

என்று பணக்கார முதலைகளின் அதிகார ஆதிக்கத்தையும், ஏழைகளின் கூக்குரலின் சாரத்தை கவியாக்கி இருக்கிறார், இன்னொருவர்.

மரபு வழியாக வந்த கவிதைகளையும் பாதுகாக்க வேண்டும். அதே சமயம், புதுக்கவிதைகளுக்கும் புத்துயிர் அளிக்க வேண்டும்.

கவிக்கதம்பங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். இயற்கையை பேச வைக்கும், எழுச்சி காவியத்துக்கு உயிரூட்ட வேண்டும். கவிதைக்கு உரமூட்டும் கவிஞர் சமுதாயத்தை போற்ற வேண்டும்.

“இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்நாளும் காப்போம்”

“உயர்வோம்; உயர்த்துவோம்!
செய்வோம்; செயல்படுத்துவோம்!”

-சுமஜ்லா.
.

21 comments:

நட்புடன் ஜமால் said...

“உயர்வோம்; உயர்த்துவோம்!
செய்வோம்; செயல்படுத்துவோம்!”
]]


ரொம்ப ரொம்ப பிடிச்சது.

-----------------


தயவு செய்து ஒரு நாளைக்கு ஒரு இடுக்கை மட்டும் போடுங்க

நாங்களும் நாலு ப்லாக் படிக்கனும் பாருங்க

:)

நட்புடன் ஜமால் said...

“வானச்சுவரில்
சூரிய மூட்டை பூச்சியை
நசுக்கியது யார்?”]]

வித்தியாசமான சிந்தனை.

Unknown said...

இதனை படிக்கவே பத்து நிமிஷம் ஆச்சு..வதியாசமாக எழுதியிருக்கிங்க.. நல்லாயிருக்கு. நாளை காலேஜ்ஜா?

SUMAZLA/சுமஜ்லா said...

//தயவு செய்து ஒரு நாளைக்கு ஒரு இடுக்கை மட்டும் போடுங்க//

ஓக்கே! ஆனா, அணையப்போற விளக்கு வெளிச்சமா எறியுமே, அது மாதிரினு வெச்சிக்கோங்களேன்! :)

SUMAZLA/சுமஜ்லா said...

//இதனை படிக்கவே பத்து நிமிஷம் ஆச்சு..வதியாசமாக எழுதியிருக்கிங்க.. நல்லாயிருக்கு. நாளை காலேஜ்ஜா?//

நாளைக்கே நாளைக்கு தான். ஆனா, ஜாலி நாளைக்கு ஹாஃப் டே தான்!

சீமான்கனி said...

அடே...எப்பா.....
அக்கா நீங்கள் தமிழிலும் புலி .தான் போலவே...
15 -இல் !!!!அருமையா இருக்கு.....
//அணையப்போற விளக்கா???
:(((((((((((

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அந்த வயதில் ஒரு ஆழமான பார்வை ,அருமையான பாடல் சேர்க்கையுடன் நல்ல கட்டுரை.
இதே தலைப்பில் நான் எழுதியது இத் தொடுப்பில்http://johan-paris.blogspot.com/2006/12/blog-post_07.html உள்ளது. நீங்கள் என் கருத்துடன் ஒத்துக் கொள்வீர்களோ? தெரியாது
ஆனால் என் கருத்தில் மாற்றம் இல்லை.

SUMAZLA/சுமஜ்லா said...

//அணையப்போற விளக்கா???//

காலேஜ் போனால், டைம் கிடைக்காதுல்ல, அதிகமா பதிவு போட, அதைத்தான் அப்படி சொன்னேன் :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆங்கில வழிக் கல்வி படித்து,
ஆங்கிலத்திலேயே கவி எழுதி,
ஆங்கிலத்திலேயே கட்டுரையெழுதிய
நீங்கள், தமிழ்க் கட்டுரைகளும்
படை(டி)ப்பீர்களா?

நல்ல திறமையாக எழுதியிருக்கிறீர்கள்.
பரிசும் பெற்றிருக்கிறீர்கள். ஆனால்,
மொழிதான் செந்தமிழ் தரத்துக்குப்
போய்விட்டது. சற்று பழகு தமிழில்
இருந்திருக்கலாம்.

எப்படியாயினும் அந்த வயதில்
வெளிப்பட்ட திறமையை
மதிக்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//ஆங்கில வழிக் கல்வி படித்து,
ஆங்கிலத்திலேயே கவி எழுதி,
ஆங்கிலத்திலேயே கட்டுரையெழுதிய
நீங்கள், தமிழ்க் கட்டுரைகளும்
படை(டி)ப்பீர்களா?//

அடக்கடவுளே, நான் இது வரை என் ப்ளாகில் எழுதிய அனைத்து கவிதை கட்டுரைகளும், தமிழல்ல என்று நினைத்து கொண்டிருந்தீர்களா???

//ஆனால்,
மொழிதான் செந்தமிழ் தரத்துக்குப்
போய்விட்டது. சற்று பழகு தமிழில்
இருந்திருக்கலாம்.//

அவார்டட் ஆர்ட் பிலிம் ரகத்தில் இருந்தால் தான், ஸ்கூலில் எல்லாம் பரிசு கிடைக்கும்!

Unknown said...

Tata Safari Kanthaswamy Contest
participate in kandasamy contest and win free tickets to paris www.safarikanthaswamy.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//என் ப்ளாகில் எழுதிய அனைத்து கவிதை கட்டுரைகளும், தமிழல்ல என்று நினைத்து கொண்டிருந்தீர்களா???//

-ஹி..ஹி..
நான் கேட்டது அந்த 15 வயதிலேயே
எழுதுவீர்களா தமிழில் என்ற பொருளில்.

தாய் மொழியில் பொதுவாய் பேசுவதற்கு,
முற்றிலும் மாறுபட்டதல்லவா கட்டுரை
எழுதுதல்?

ஓ... நீங்க வலைப்பூவில் எழுதுறதுதான்
தமிழா? (சீரியஸா எடுத்துக்காதீங்க!)

SUMAZLA/சுமஜ்லா said...

//ஓ... நீங்க வலைப்பூவில் எழுதுறதுதான்
தமிழா? (சீரியஸா எடுத்துக்காதீங்க!)//

பரவாயில்லை, ஆனால், எனக்கு ஆங்கிலத்தில் மீது இருந்த அதே ஆர்வம் தமிழின் மீதும் இருந்தது, இருக்கிறது, காரணம் அது மொழியில் மீது இருந்த ஈர்ப்பு அல்ல; மொழியின் சுவையின் மீது இருந்த காதல்!!!!!

நான் படித்தது ஆங்கில மீடியத்தில் அதுவும் ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண் என்பதால், ஆங்கில இலக்கியம் படித்தேன். ஆனால், 10த்தில் ஆங்கிலம் தமிழில் இரண்டிலும் ஒரே மார்க்! ஆனால், ஆங்கிலத்தில் மாவட்ட அளவில்...தமிழில், என்னை விட நிறைய பேர் கூடுதலாக...

என் 10த் மதிப்பெண் தனி தனியாக:

Eng I - 92
Eng II - 78
Tam I - 90
Tam II - 80
Mat I - 92
Mat II - 84
Sce I - 91(biology)
Sci II - 66(phy&che) ( அன்று உடல் நிலை சரியில்லை, லூஸ் மோஷனால் படிக்க முடியவில்லை)

Sci practical - 100

His - 79
Geo - 75

கூட்டி பாருங்கள், 927/1100 வரும்... அப்பா, நிறைய படிக்க வேண்டாம் என்று சொன்னதால்... இல்லாவிட்டால்....

இப்போ சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்...92-93ல் இப்போ போல அவ்வளவு மார்க் போட மாட்டார்கள்... :)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அக்கா காலேஜ் போறதுக்கு வாழ்த்துக்கள் , என் காலேஜ் எஸ்.ஆர்.எம் கூடுவாஞ்சேரி ..

உங்களுக்காக இந்த பதிவை Dedicate செய்கிறேன்
எனது இன்றைய பதிவு .


எளிதில் எல்லா கூகிள் மெயில் பார்க்க
http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post.html

ஆமா நீங்க எந்த காலேஜ் எனக்கு மட்டு சொல்லுங்க அக்காகாகாகா........

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி கிருஷ்ணா, உங்கள் சகோதர பாசத்துக்கு! எனக்காக பதிவையெல்லாம் டெடிகேட் செய்திருக்கிறீர்கள்.

நான் தைரியமாக என் காலேஜில் பீற்றி கொள்ளலாம், எனக்கு எவ்ளோ பேன்ஸ் இருக்காங்கன்னு :) ஸோ ஹேப்பி!

நான் போவது சாரா காலேஜ், ஈரோடு! ஏரியா பெயர், கருந்தேவன் பாளையம்!

எங்க வீட்டிலிருந்து, போக 16 வர 16 ஆக 32 கி.மீ. ஸ்கூட்டியில் தான் போகப்போகிறேன். ஆக, தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல் காலி செய்து, நாட்டின் பொருளாதாரத்துக்கும்(!) வீட்டின் பொருளாதாரத்துக்கும்(!) என்னால் ஆன உதவி செய்ய போகிறேன்.......

என்ன செய்வது, பஸ் என்றால் இரண்டு பஸ் மாற்ற வேண்டும். அதோடு, நான் என் வாழ்க்கையில் ஈரோட்டில் டவுன் பஸ் ஏறியதே இல்லை தெரியுமா????????

SUMAZLA/சுமஜ்லா said...

கிருஷ்ணா, என்னிக்காவது ஈரோடு வந்தால், அப்படியே, கருந்தேவன் பாளையம் வாங்க, அழகழகான பெண்களை (கிழவிகளை அல்ல) இண்ட்ரடியூஸ் செய்து வைக்கிறேன்!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஓக்கே! ஆனா, அணையப்போற விளக்கு வெளிச்சமா எறியுமே, அது மாதிரினு வெச்சிக்கோங்களேன்! //

அப்படியெல்லாம் சொல்லாதீங்க நீங்க எல்லாம் இருக்குறதாலதான் நாங்களும் இடுகை போடணுன்னு தோணுது

இல்லாட்டினா நானும் ப்லாக் க்லோஸ் பண்ணிட்டு போயிடுறேன் சகோ...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அக்கா உங்க பாசத்துக்கு ரொம்ப நன்றி. காலேஜ் முடிஞ்சது எனக்கு கல்லூரி பேராசிரியர் ஆகணும் எப்படியும் இந்த வருஷம் முடிஞ்சது ஆகிவிடுவேன் . அப்புறம் 2 வருஷம் ..ஒரு பொண்ண பாத்து சொல்லுங்க . இப்ப நா எஸ்கேப் .. கொஞ்ச நாள் உங்க தம்பி சந்தோசமா இருக்கிறேன் . கண்டிப்பா ஈரோடு வரேன் அக்கா ,, கிருஷ்ணா வேண்டா தம்பி னு கூப்டுங்க .. எனக்கு அக்கா . தங்கை யாருமே இல்ல . இப்ப ஒரு அக்கா வந்துட்டாங்க ..... இப்படியே ஒரு பாச மலர் படத்த ஓசி ல எல்லோரு பாத்துட்டாங்க .. அக்கா
******************************


உங்க முதல் நாள் காலேஜ் பத்தி நாளைக்கு எழுதுங்க ... அது தா எங்க விருப்பம் .


once again all the best ..

SUMAZLA/சுமஜ்லா said...

//இப்ப ஒரு அக்கா வந்துட்டாங்க ..... இப்படியே ஒரு பாச மலர் படத்த ஓசி ல எல்லோரு பாத்துட்டாங்க .. அக்கா //

இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா??????

//உங்க முதல் நாள் காலேஜ் பத்தி நாளைக்கு எழுதுங்க ... அது தா எங்க விருப்பம் .//

நாளைக்கு ஹாஃப் டே தான்! அதனால, ஒரிஜினல் சர்டிஃபிகேட் சப்மிட்டிங், சோ & சோ மட்டும் தான் இருக்கும்...

என் மகள் வேற, கூடவே வந்திட்டு, நாங்க வெயிட் பண்ணி கூட்டிட்டு போறோம்னு சொல்லி பயமுறுத்தறா... எனக்கே வெட்கமா இருக்குப்பா...!

ஆனா, 10த் அப்புறம், இப்பத்தான் இப்படி ஒரு சான்ஸ். அதனால், கொஞ்சம் த்ரில்லாங்காவும் இருக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

அய்யய்யோ என்ன வசந்த! இப்படி ஃபீலிங் பார்ட்டி ஆயிட்டீங்க!

நான் ஒரு லேப் டாப் கேட்டு என்னவரிடம் அப்ளிகேஷன் போட்டிருக்கேன், காலேஜுக்கு கொண்டு செல்ல...பார்க்கலாம், நிறைய செலவுகள் அதனால், இன்னும் உறுதி சொல்லல...!

நீங்க ப்ளாக உங்க சிஸ்டத்தில் க்ளோஸ் பண்ணுனா, உங்க ப்ளாக எங்க சிஸ்டத்துல திறக்க முடியாத என்ன? :)

கணவருக்கு அடுத்தபடியா கணினிங்கறாப்புல ஆயிப்போச்சு! நானாவது பதிவு போடாம இருக்கிறதாவது??? ஆனா, எக்ஸாம் டைம்ல எல்லாம் ஆப்செண்ட் ஆவேன்!

அரங்கப்பெருமாள் said...

நல்லாத்தானே எழுதியிருக்கீங்க.. இவ்ளோ கவிதைகளையும் அப்பவே படிச்சிருக்கிங்களே. காளமேகப் புலவரின் பாடல்களை இப்போதுதான்(அமெரிக்கா வந்தபிறகுதான்) படித்தேன்.பள்ளியில் இரண்டு படித்த ஞாபகம்( எள்-பாம்பு, நாய்-தேங்காய்)..

ஜமால் சொன்னதுதான் நானும் சொல்லுறேன். நானெல்லாம் நாலு எடத்துக்கு போகணும் தாயி...