Wednesday, September 2, 2009

காலேஜில் முதல் நாள்

“மம்மி, பேனா, பென்சில், அழி ரப்பர் எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டிங்களா?” மகள் லாஃபிரா கேட்டாள்.

“தோ! நேற்று தான்மா போய் பேனா, மைக்ரோடிப், ரப்பர், ரஃப் நோட் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்”

“என்ன மம்மி, இந்த நோட்டா, இதுல பேப்பரே கிழிக்க முடியாதே! எதுக்கும் எக்ஸ்ட்ரா பென் ஒன்னு எடுத்துக்குங்க. யாராச்சும் பென் கொண்டு வர்லைனா கொடுக்கலாம்”

அவள் சொன்னதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. அழி ரப்பர் என்றவுடன், சின்ன வயதில், பென்சில் குப்பையை ரப்பர் செய்வதற்காக சேர்த்து வைத்தது நினைவுக்கு வந்து விட்டது....

வீட்டில் முதல் நாள் ஒரே கலாட்டா, செம ரகளை!

நான் முன்னெச்சரிக்கையா தோணியதெல்லாம் எடுத்து பேகில் வைத்தேன்.

நோட்டு, ஸ்டேஷனரி, குட்டி டிக்ஸ்னரி, செல்போன், சாவி கொத்து, சர்டிபிகேட்ஸ், பர்ஸ், குடை, டிஜிடல் கேம், பென் ட்ரைவ், எல்லாம்... ஸ்கேல் வாங்கவில்லை, அதனால் மகளிடம் இரவல் வாங்கி கொண்டேன்!

இரண்டு நாளா எனக்கு பாடம் படிக்கறா, “நைட்லாம் நெட்ல உட்கார்ந்திட்டு, க்ளாஸ்ல தூங்கி வழியாதிங்க..., க்ளாஸ்ல உட்கார்ந்திட்டு, போஸ்ட் போடுவது பற்றி, ஓட்டு பற்றி, பின்னூட்டம் பற்றியெல்லாம் திங்க் பண்ணிக்கிட்டு இருக்காதிங்க..., அட்டெண்டன்ஸ் எடுத்தா, உடனே எந்திருச்சு எஸ் மிஸ்னு சொல்லுங்க...., இன்னும் நிறைய நிறைய...

காலையில் குளிச்சிட்டு, என்ன உடுத்தறதுன்னு ஒரு கால் மணி நேர யோசனைக்குப் பின், புது சாரி ( ரம்ஜான் பர்சேஸில் ஒன்று) எடுத்து உடுத்தி கொண்டேன்.

காலேஜ் பெயர் சாரா கல்வியியல் கல்லூரி!

காலையில கிளம்பியதும், சும்மாவாவது அவர்கிட்ட கேட்டேன், “ஏங்க பர்ஸ்ட் பர்ஸ்டா காலேஜ் போறேன், எனக்கு ஒரு இரண்டாயிரம் ருபா தாங்க!”

“எதுக்கு?”

“சும்மா தான் திடீர்னு வண்டி வழியில பஞ்சர் ஆயிரிச்சுனா...”

“என்னது வண்டி பஞ்சருக்கு ரெண்டாயிரமா........”

குறுக்க புகுந்த என் மகள், “டாடி, மம்மிக்கு ரெண்டு ருபா மட்டும் கொடுங்க மாங்கா வாங்கி திங்கறக்கு....” என்றாள்.

ஒரே சிரிப்பு, அதோடு டென்ஷன் ஒரு பக்கம்.

இன்னிக்கு ஓணம்....அதனால், மகனுக்கும் மகளுக்கும் ஸ்கூல் லீவ். அதனால், செண்ட் ஆஃப்க்கு ரெண்டு பேரும் காலேஜ் வர்ரேன்னு சொன்னாங்க, அவங்க டாடி கூட!

காலையில ஒரு யாசீன் ஓதிட்டு, என் கையால் சதகா கொடுத்திட்டு கிளம்பினேன்.

வெளியே வந்தால், அவர் வண்டி பஞ்சர்!

“சரி, நீ குழந்தைகளை கூட்டிட்டு போ, நான் பஞ்சர் ஒட்டிட்டு வர்ரேன்” என்று அவர் சொல்ல கிளம்பினேன்.

“என்ன மம்மி ஷார்ட் டூர் மாதிரி...இவ்ளோ தூரமா வண்டியில வர போறீங்க...” என்று சொன்ன என் மகள், வீட்டுக்கு வந்ததும், மம்மி இவ்ளோ தூரம் டூ வீலர்ல போக அலோவ் பண்ணாதிங்கன்னு எங்க அம்மாகிட்ட, மாமனார்கிட்ட போட்டு குடுத்திட்டா!

முதன்முதலா வகுப்புக்குள் போகும் போது, முதலிரவு அறைக்குள் போகும் புது மணப்பெண் மாதிரி ஒரே பதட்டம்.

பிள்ளைகளையும் கூட்டிட்டு, ஹால் உள்ளே போனதும், பேரண்ட்ஸ் எல்லாம் உள்ளே வராதிங்கன்னு சொல்ல, எனக்கு ஒரே வெட்கமாகி விட்டது!

நான் தாங்க படிக்க போறேன், இது என் மகள், இப்ப போயிடுவானு சிரிச்சுக்கிட்டே சொன்னேன்... ஆனா, என்னை விட பெரியவங்கல்லாம் ஒரு சிலர் இருக்கிறதை பார்த்ததும் ஒரு ஆறுதலாகி விட்டது!

முதலில், ஒரிஜினல் சர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாம் ஒவ்வொன்றாக எல்லாரும் ஒப்படைத்தோம்... அதற்குள் இரண்டு பேரை நான் பிரெண்ட் பிடித்து விட்டேன்!

அடுத்து, மீட்டிங் ஹாலில், சின்ன இன்னாகுரேசன் ஃபங்ஷன்!

முதலில் தமிழ்தாய் வாழ்த்து! அடுத்து ஒரு D.T.Ed படிக்கும் பெண் இறைவாழ்த்தாக அல்ஹம்து சூராவும் அதன் அர்த்தமும் ஓத (இஸ்லாமிய காலேஜ்), பின், பிரின்சிபால், மற்றும் தாளாளர், ஹாஜி ஜபருல்லாஹ் ஆகியோர் பேசினர்.

பின், விரிவுரையாளர்கள் அறிமுகம் நடந்தது! ப்ளாகில் போட, யாருக்கும் தெரியாமல், என் டிஜிட்டல் கேமில் நான் ஒரு ஸ்னாப் எடுத்து கொண்டேன்!


“லெக்சரரா போகலாம், ப்ரொஃபெஸ்ஸரா போகலாம், அப்படி இருக்க ஏன், இந்த கல்வியை தேர்ந்தெடுத்தீங்க...யாராவது சொல்ல முடியுமா?” பிரின்சிபல் கேட்க, முதல் பெஞ்சில் இருந்த நான் கை தூக்கினேன்.

“சொல்லுங்கம்மா”

“சார், நான் இந்த கோர்ஸ் தேர்ந்தெடுத்ததற்கு, காரணம் என் ஆசிரியைகளிடம் நான் வைத்திருந்த அன்பு தான்... We grow in the image of those we love அப்படீனு சொல்வாங்க.... எனக்கு கிடைத்த அற்புதமான டீச்சர்ஸ் தான் - அவர்களுடைய பணியில் எனக்கு ஈடுபாடு வர காரணமாயிருந்தது...”

நான் சொன்னதும், கைதட்டல்!

அடுத்து, பேரண்ட்ஸ் ஓரிருவர் பேசினர். என்னவர் வண்டி பஞ்சர் ஒட்டி வந்ததும், என் மகளும் மகனும் அவருடம் கிளம்பி போய் விட்டனர்.

தொழுகை நேரம் ஆனதும் தாளாளர் கிளம்பி விட்டார்.

அடுத்து யாராவது ஸ்டூடண்ட்ஸை பேச சொன்னார்கள். யாரும் முன்வரவில்லை. ஏற்கனவே நான் பேசி இருந்ததால், என்னை வர சொல்லி பிரின்சிபால் சைகை செய்ததும், நான் எழுந்து மைக்கை வாங்கினேன்.

“குட்மார்னிங் டு ஆல்... 10த் வரை நான் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு நான் எண்டர் ஆகும் முதல் இன்ஸ்ட்டிட்யூசன் இது தான்! இடையில் எல்லாமே கரெஸ்ஸில்... எனக்கு வாய்த்த அருமையான ஆசிரியைகள் தான் எனக்குள் இந்த கனவை விதைத்தவர்கள்... ஸ்டூடண்ட்ஸ் நாம் எல்லோரும்... டெடிகேட்டடா, ஒருவருக்கொருவர் ஹெல்ப்ஃபுல்லா இருக்கணும். நன்றி!”

என்று கூறி ஷார்ட்டாக என்னுரையை முடித்து கொண்டேன்!

நன்றி நவிலலுக்கு பின்பு தேசிய கீதத்துடன் விழா முடிந்தது!

பிறகு தேனீர் விருந்து! நான் நோன்பு வைத்திருந்தேன்!

காலேஜை சுற்றி பார்த்தேன். நல்ல கம்ப்யூட்டர் லேப், சைக்காலஜிக்கல் லேப், தொழுகும் அறை எல்லாம் இருந்தது. ஓரிருவருடன் போன் நம்பர், ஈமெயில் எல்லாம் பகிர்ந்து கொண்டேன்!

மதியம் ஒன்னரைக்கு கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்ததும், பயங்கர தலைவலி! ஒன்றும் முடியவில்லை. நோன்பு திறந்ததும் மாத்திரை சாப்பிட்டு, இன்னும் தலைவலி லேசாக இருக்கிறது. ரொம்பவும் டென்ஷன்; டென்ஷன் ஆனாலே தலைவலி தான்!

இனி, எப்படி டைம் கிடைத்து, எப்படி பதிவு போடுவேனோ, தெரியவில்லை!

(இந்த பதிவின் பிண்ணனி புரியாதவர்கள், இந்த பதிவை படிக்கவும்: ஐ யெம் எ காலேஜ் கேர்ள் )

-சுமஜ்லா.
.

47 comments:

சீமான்கனி said...

நான்தான் பாஸ்ட்...

சீமான்கனி said...

//“நைட்லாம் நெட்ல உட்கார்ந்திட்டு, க்ளாஸ்ல தூங்கி வழியாதிங்க..., க்ளாஸ்ல உட்கார்ந்திட்டு, போஸ்ட் போடுவது பற்றி, ஓட்டு பற்றி, பின்னூட்டம் பற்றியெல்லாம் திங்க் பண்ணிக்கிட்டு இருக்காதிங்க..., அட்டெண்டன்ஸ் எடுத்தா, உடனே எந்திருச்சு எஸ் மிஸ்னு சொல்லுங்க...., இன்னும் நிறைய நிறைய...//
:)))))))))))))...ha...Ha....

சீமான்கனி said...

//“டாடி, மம்மிக்கு ரெண்டு ருபா மட்டும் கொடுங்க மாங்கா வாங்கி திங்கறக்கு....” என்றாள்.//

அதுவே ஜாஸ்திதான்...LoL

Porkodi (பொற்கொடி) said...

seri neengale 1st irundhukonga! naan thaan 2ndu :)

சீமான்கனி said...

“குட்மார்னிங் டு ஆல்... 10த் வரை நான் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு நான் எண்டர் ஆகும் முதல் இன்ஸ்ட்டிட்யூசன் இது தான்! இடையில் எல்லாமே கரெஸ்ஸில்...

எனக்கு வாய்த்த அருமையான ஆசிரியைகள் தான் எனக்குள் இந்த கனவை விதைத்தவர்கள்... ஸ்டூடண்ட்ஸ் நாம் எல்லோரும்... டெடிகேட்டடா, ஒருவருக்கொருவர் ஹெல்ப்ஃபுல்லா இருக்கணும். நன்றி!”

உங்க கூடவே வந்து பாத்தமாதிரி இருக்கு.....
வாழ்த்துகள்....
நல்ல படிக்கணும் ஓகே வா....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பிள்ளைகளையும் கூட்டிட்டு, ஹால் உள்ளே போனதும், பேரண்ட்ஸ் எல்லாம் உள்ளே வராதிங்கன்னு சொல்ல, எனக்கு ஒரே வெட்கமாகி விட்டது!//

-அவய்ங்க சொன்னது கரெக்ட்டுதானே?
நீங்க பிள்ளைகளையும் கூப்ட்டுக்கிட்டுப்
போனா, அப்படித்தான் சொல்வாங்க.
உங்க மாமா, மாமி இவங்களை ஏன்
அழைச்சுக்காமப் போனீங்க?

SUMAZLA/சுமஜ்லா said...

சீமான்கனி, ஹேமா(பொற்கொடி) ரெண்டு பேரும் பர்ஸ்ட் தான். ஜென்ஸ்ல சீமான்கனி, லேடீஸ்ல ஹேமா! (ஹேமா...ஆமா உங்க நிஜ பேரு என்னங்க?)

தேங்க்ஸ்ப்பா உங்க ரெண்டு பேர் அன்புக்கும்...

SUMAZLA/சுமஜ்லா said...

//நல்ல படிக்கணும் ஓகே வா....//

நல்லா படிக்கிறேன் அண்ணாச்சி... நீங்க ஃபீல் ஆகாம தைரியமா இருங்க!

SUMAZLA/சுமஜ்லா said...

//அதுவே ஜாஸ்திதான்...LoL//

போட்டு கொடுக்கறீங்களா அவருக்கு!

கடைசியில் ஒரு எண்ணூறு ருவா தான் தேரிச்சு!

SUMAZLA/சுமஜ்லா said...

//-அவய்ங்க சொன்னது கரெக்ட்டுதானே?
நீங்க பிள்ளைகளையும் கூப்ட்டுக்கிட்டுப்
போனா, அப்படித்தான் சொல்வாங்க.
உங்க மாமா, மாமி இவங்களை ஏன்
அழைச்சுக்காமப் போனீங்க?//

ஓக்கே! நாளைக்கு என் மாமனாரை கூப்பிட்டு போறேன். ஆனா, இது என்ன முதியோர் கல்வியானு கேட்டாங்கன்னா?

SUMAZLA/சுமஜ்லா said...

எல்லாரும் போடற ஓட்டை பொறுத்து தான், இந்த பதிவை நாளைக்கு காலேஜில் திறப்பு விழா பண்ணுறது!

ஓட்டு நிறைய கிடைத்தால், எனக்கு எவ்ளோஓஓஓஓ பேன்ஸ் அப்படீனு அளக்கலாம் பாருங்க!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அக்கா உங்க சீனியர்ஸ் ராகிங் பண்ணலையா . இன்னிக்கு கிளாஸ் போனது உங்க ஞாபகம் வந்தது அக்கா இனிக்கு காலேஜ் போயிருப்பாங்கன்னு ..

நாளை ஊருக்கு போகிறேன் திங்கள் மாலை தான் பதிவு . முடிந்தால் ஒரு பதிவு தூங்குவதற்கு முன் ..
நாளை வைகை எக்ஸ்பிரஸ் ஜாலியா கெளம்பிடுவேன் , . ஆமா நீங்க என்ன மேஜர் சொல்லவே இல்ல ..இங்கிலிஷா ..

சங்கரராம் said...

ஒரு இடைவேளைக்கு அப்புறம் படிக்க போவது வித்யாசமான அனுபவம் தான்.
எனக்கும் அந்த அனுபவன்ம் உண்டு.

SUMAZLA/சுமஜ்லா said...

இது ஒன் இயர் கோர்ஸ்...சோ நோ சீனியர்ஸ்... ஆனா, D.T.Ed ஸ்டூடண்ட்ஸ் உண்டு. ஆனா, அவங்க எல்லாம் +2 முடிச்சிட்டு, டிப்ளமோ பண்ணற பச்சை புள்ளைங்க!

நல்ல படியா ஊருக்கு போயிட்டு வாங்க! மதுரையா?

நான் இங்கிலீஷ் மேஜர் தான்! ஆனா, எங்க இங்கிலீஷ் லெக்சரர் கிட்ட பேசும் போது, ‘மேம், மை ஹஸ்பண்ட்ஸ் வண்டி வெண்ட் பன்க்சர்’ என்றேன்.

வெளியே வந்ததும், ‘ஏன் மம்மி, இப்படி சொதப்பறீங்க’ன்னு என் மகள் கிட்ட ஒரே திட்டு... இனி ஜென்மத்துக்கும் அவளை காலேஜ் பக்கம் அழைத்து போவதாக இல்லை!

SUMAZLA/சுமஜ்லா said...

//எனக்கும் அந்த அனுபவன்ம் உண்டு//

அட, என்னங்க படிச்சிங்க????????

Jaleela Kamal said...

சுஹைனா நாம பார்த்து பார்த்து முதல் நாள் பள்ளிக்கு பெனா ரபப்ர் எல்லாம் எடுத்து வைப்போம், உங்களுக்கு உங்க பொண்ணு சொன்ன அட்வைஸ் எல்லாம் கேட்டு ரொம்ப சிரிப்பு தான் வருது.

Jaleela Kamal said...

குறுக்க புகுந்த என் மகள், “டாடி, மம்மிக்கு ரெண்டு ருபா மட்டும் கொடுங்க மாங்கா வாங்கி திங்கறக்கு....” என்றாள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//சுஹைனா நாம பார்த்து பார்த்து முதல் நாள் பள்ளிக்கு பெனா ரபப்ர் எல்லாம் எடுத்து வைப்போம், உங்களுக்கு உங்க பொண்ணு சொன்ன அட்வைஸ் எல்லாம் கேட்டு ரொம்ப சிரிப்பு தான் வருது.//

எல்லாம் நேரம் அக்கா...

கொஞ்சமே கொஞ்சம் ஷேமா இருந்தாலும், நிறைய்ய்ய்ய்ய பெருமையாவும் இருந்தது உண்மை! (கிழவிங்கள்ளாம் காலேஜ் போறதுல என்ன பெருமைனு யாரும் கேட்கபடாது!)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வைகை திருச்சிக்கும் போகும் அக்கா.
யாருக்கும் தெரியாம போட்டோ எடுத்துடீங்க/ சுட்டுடீங்க எப்புடி இவ்ளோ தெறமை ...

SUMAZLA/சுமஜ்லா said...

//யாருக்கும் தெரியாம போட்டோ எடுத்துடீங்க/ சுட்டுடீங்க எப்புடி இவ்ளோ தெறமை ...//

எல்லாம் கண்கட்டி வித்தைதான்! அதுக்கு தான ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல சீட் பிடித்தேன்.

அட்லீஸ்ட் ஒரு போட்டோவாவது இல்லாட்டி, பதிவு நல்லா இருக்காதே!

நாளைக்கு சொல்லணும் பிரின்சிபால்கிட்ட, ‘சார், இன்னாகுராஷன் பத்தி என் ப்ளாக்ல போட்டிருக்கேன் பாருங்க’ன்னு! ஹி இஸ் அ நைஸ் ஓல்டு சேப்!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உங்கள் குட்டிஸ் போல நீங்களும் Fire Fox பயன்படுத்துங்கள் . IE விட FireFox ஐ வைரஸ் தாக்கும் அபாயம் மிக குறைவு ,,,

SUMAZLA/சுமஜ்லா said...

ஆமாம் தம்பி, இப்ப என் சிஸ்டத்தில் IEக்கு என்னமோ ஆயிரிச்சு! டெட் ஸ்லோ! அதான் நானும் கட்சி மாறிடலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்!

அதுக்கு வைரஸ் காய்ச்சல் கூட இல்லப்பா, ஸ்வைன் ஃப்ளூ! டெத் ஆகி, நாலு நாள் முன்னாடி தான் ஃபார்மட் செய்தேன், நோ யூஸ்!

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் நாளே அசத்தல் ஆரம்பமா?

வாழ்த்துக்கள் சகோ.....

இராஜகிரியார் said...

//‘மேம், மை ஹஸ்பண்ட்ஸ் வண்டி வெண்ட் பன்க்சர்’ என்றேன்.//

இதெல்லாம் வாழ்க்கையிலே சகஜமுங்கோ...

வருங்கால டீச்சருக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

//ரொம்பவும் டென்ஷன்; டென்ஷன் ஆனாலே தலைவலி தான்!//

முதல் நாளே தலைவலிங்கறீங்களே!!! :)

நட்புடன் ஜமால் said...

“சார், நான் இந்த கோர்ஸ் தேர்ந்தெடுத்ததற்கு, காரணம் என் ஆசிரியைகளிடம் நான் வைத்திருந்த அன்பு தான்... We grow in the image of those we love அப்படீனு சொல்வாங்க.... எனக்கு கிடைத்த அற்புதமான டீச்சர்ஸ் தான் - அவர்களுடைய பணியில் எனக்கு ஈடுபாடு வர காரணமாயிருந்தது...”]]

அருமை.

---------------

நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைப்பாங்க

அதுல ப்லாக்ர்ஸ் எத்தனை தேர்வாங்கன்னு பாருங்க

எழுதாதவங்களையும் எழுத வச்சிடுங்க.

---------------

வாழ்த்துகள்.

லதானந்த் said...

கேள்வி பதில் பாத்தீங்களா? ஒங்க கேள்விக்குப் பதில் இருக்கு

இப்னு அப்துல் ரஜாக் said...

31:20
நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.

34:6
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.

Unknown said...

நானும் உங்களுடன் படிக்க வந்தது போல் இருக்கு.
உங்கள் பதிவை பார்த்த பின்பு எனக்கும் என் கல்லூரியின் முதல் ஞாபகம் வருகிறது

கிரி said...

//முதன்முதலா வகுப்புக்குள் போகும் போது, முதலிரவு அறைக்குள் போகும் புது மணப்பெண் மாதிரி ஒரே பதட்டம்.

பிள்ளைகளையும் கூட்டிட்டு, ஹால் உள்ளே போனதும், பேரண்ட்ஸ் எல்லாம் உள்ளே வராதிங்கன்னு சொல்ல, எனக்கு ஒரே வெட்கமாகி விட்டது!//

ஹா ஹா சூப்பர்

நீங்க கல்லூரி போக தயார் ஆகும் பரபரப்பு ரசிக்கும்படி இருந்தது... என் பள்ளி நினைவை கொண்டு வந்தது

இனி கல்லூரி வாழ்க்கை லைவ் கமென்ட்டரியாக வரும் போல இருக்கே ;-) அங்கேயும் வலைத்தளம் பற்றியே யோசித்துட்டு இருப்பீங்க..

நல்லா சுவாராசியமா எழுதி இருக்கீங்க

Anonymous said...

மனிதனின் முயற்சிக்கும் திறமைக்கும் தடையே கிடையாது. கனவுகள் நனவாக என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

மனிதனின் முயற்சிக்கும் திறமைக்கும் தடையே கிடையாது. கனவுகள் நனவாக என் வாழ்த்துக்கள்.

kavi.s said...

:),வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

இரண்டு நாளா எனக்கு பாடம் படிக்கறா, “நைட்லாம் நெட்ல உட்கார்ந்திட்டு, க்ளாஸ்ல தூங்கி வழியாதிங்க..., க்ளாஸ்ல உட்கார்ந்திட்டு, போஸ்ட் போடுவது பற்றி, ஓட்டு பற்றி, பின்னூட்டம் பற்றியெல்லாம் திங்க் பண்ணிக்கிட்டு இருக்காதிங்க..., அட்டெண்டன்ஸ் எடுத்தா, உடனே எந்திருச்சு எஸ் மிஸ்னு சொல்லுங்க...., இன்னும் நிறைய நிறைய...
***********************

எதை பண்ணக்கூடாதுன்னு உங்க மகள் சொன்னாங்களோ அத கரெக்ட்டா பண்ணி இருக்கீங்க. இதுதான் ஒரு ஸ்டுடென்ட்டுக்கு அழகு.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் சகோதரி.

ஏன் தேவையில்லாம டென்சன் ஆகறீங்க ??. உடம்பை பார்த்து கொள்ளவும். சுவர் சரியாக இருந்தாலதான் சித்திரங்கள் சிறப்பாக வரைய முடியும்.

அதிரை அபூபக்கர் said...

“டாடி, மம்மிக்கு ரெண்டு ருபா மட்டும் கொடுங்க மாங்கா வாங்கி திங்கறக்கு....” என்றாள்.//

:) சிரித்தேன்...

வாழ்த்துக்கள்,,

SUMAZLA/சுமஜ்லா said...

எவ்ளோ விசாரிப்புகள்!

இந்த பதிலை பதிவாகவே போடலாம். ஆனால், சும்மா சும்மா கல்லூரி பற்றியே பேசி போரடிக்ககூடாது. அது தொட்டுக்க ஊறுகா மாதிரி அப்பப்ப!

இன்னிக்கு ஈவ்னிங் தேர்டு அவர், என்னிடம் என் ப்ளாகை, எல்லா டீச்சர்ஸுக்கும் காட்ட சொல்லி இருந்தார், பிரின்சிபல். எனக்கு எவ்ளோ பேர் என்னென்ன பின்னூட்டமிட்டுருப்பார்களோ என்று ஒரே இதா இருந்தது. ஆனா பயமெல்லாம் இல்லை.

யாருக்கும் அவ்வளவாக ப்ளாக் பற்றி தெரியவில்லை. ஆனால், சொல்லி தருகிறேன், ஒரு டீம் ப்ளாக் உருவாக்கலாம் என்று சொன்னேன். இதே கருத்தை பிரின்சிபாலிடமும் சொன்னேன். சரி சில நாட்கள் போகட்டும் என்றார்.

ஆனா, என்னோட டைம், இன்று தமிழகத்தை சேர்ந்த ஆங்கிலத்தில் டாக்டரேட் முடித்திருந்த ஒரு பேராசிரியர், சையதுடன் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துவிட்டார்கள். அவர் துபையில் வேலை பார்க்கிறார். நல்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்.

சிறிது நேரத்துக்கு பின், யாரையாவது பேச சொன்னார், யாரும் முன்வர வில்லை. நான் எழுந்து ஆங்கிலத்தில் சில நிமிடங்கள் பேசி, எங்க வகுப்பு மானத்தை காப்பாற்றினேன். பயங்கர அப்ளாஸ். அப்படியே ஸ்கூல் பொண்ணு மாதிரியே சந்தோஷமா இருந்தது.

இந்த மீட்டிங்கால், ப்ளாக் இண்ட்ரடக்‌ஷன் இன்று இல்லை.

நாளை முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தால், லீவ். இனி திங்கள் தான் காலேஜ்!

இலா said...

Suhaina... You are inspiration to many women in more than one way.. Good luck.... Enjoy your college days...

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

காலேஜுக்குத்தானே லீவு; இடுகைக்கு ஏன் லீவு?

200-ஆவது பதிவு எப்போ? முன் கூட்டியே எனது
வாழ்த்துக்கள்!

SUFFIX said...

ஆரம்பிச்சாச்சா காலேஜ் கலாட்டா, முதல் நாளே கல கட்டுது!!

//இனி, எப்படி டைம் கிடைத்து, எப்படி பதிவு போடுவேனோ, தெரியவில்லை!//

இப்ப‌டியெல்லாம் சொல்லி த‌ப்பிக்க‌ முடியாது, தெரிய‌லைனா, தெரிஞ்சத நீங்க‌ ப‌திவு போடுங்க‌!! ஹி..ஹி.

SUFFIX said...

பல பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்!! You can do it!!

அரங்கப்பெருமாள் said...

வாழ்த்துக்கள்.
ஒழுங்கா காலேஜ் போகணும்.
வீட்டுப்பாடமெல்லம் சரியா எழுதனும்.
சரியா?

எனது வேலையை PEACE TRAIN அவர்கள் செய்வதால்,வாழ்த்துக்களுடன்...

பெருமாள்

SUMAZLA/சுமஜ்லா said...

எவ்வளவு அன்பான நண்பர்கள்! சந்தோஷமாக இருக்கிறது.

எழுதுவேன், கண்டிப்பாக எழுதுவேன். வாரம் ஒரு முறை ஒரு வாரத்துகுண்டானதை சேமித்து வைத்து கொள்வேன்.

//தெரிய‌லைனா, தெரிஞ்சத நீங்க‌ ப‌திவு போடுங்க‌!! ஹி..ஹி.//

ஒன்னும் தெரியலைனா, இருக்கவே இருக்குது காலேஜ் கலாட்டாஸ்! ஹா...ஹா...

வாரம் ஒரு முறையாவது அது பற்றிய அப்டேட்ஸ் இருக்கும்!

//ஒழுங்கா காலேஜ் போகணும்.
வீட்டுப்பாடமெல்லம் சரியா எழுதனும்.
சரியா?//

ரெக்கார்டு ஒர்க் வரும் போது ரொம்ப கஷ்டம்...அப்போ, பதிவு போடுவதும்...

//200-ஆவது பதிவு எப்போ? முன் கூட்டியே எனது
வாழ்த்துக்கள்!//

இனி, கொஞ்சம் நிதானமாகத்தான் எல்லாம் நடக்கும்...


இரண்டு நாட்களாக, அப் அண்ட் டவுன் 34 கி.மீ பழக்கமில்லாமல் டூவீலர் ஓட்டியதால்...கை நரம்பெல்லாம் ஒரே வழி! அதான் டைப் செய்ய முடியவில்லை. இப்ப ஓக்கே!

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோதரர் அரங்க பெருமாள்,நன்றி.நீங்களும் கண்டிப்பாக எழுத வேண்டும்,நீங்கள் என்ன கருத்து உள்ள வசனம் போட்டுள்ளீர்கள் என்பதைக் கண்டு மிக சந்தோசம் அடைவேன்.எல்லாம் வல்ல ஏகன் உங்களுக்கு இன்னும் பல கிருபைகள் செய்து,வெற்றி தர போதுமானவன்,உங்கள் பிளாக்கில் நான் கொடுத்த லிங்க் பார்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்,நன்றி உங்கள் அன்புக்கு!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் சகோதரி.கல்விக்கு வயது ஏது??

அன்புடன் மலிக்கா said...

முதல் நாள் காலேஜ்ஜில் நான்தான்
போன்செய்து டிஸ்டப் பண்ணிட்டேன் சாரிக்கா

தாங்களின் அனைத்து பணிகளும் நல்லபடியாக நிறைவேறட்டும்