Sunday, September 27, 2009

பகிரங்கமாய் ஒரு ரகசியம்

எங்க லெக்சரர் மேடம், தன்னைப் பற்றிய ரிவ்யூ, அதாவது பிடித்தது, பிடிக்காதது எல்லாம் எழுதி தர சொன்னாங்க... அதுக்காக நான் எழுதியது இது. ஆனா, இன்னும் கொடுக்கவில்லை. அடுத்த மாதம் தான் கொடுக்கணும்.

மேடம் பேர் மட்டும் இங்கே கொடுக்கவில்லை...ஆனா, இதில் பேர் மறைந்திருக்கு! படிச்சிட்டு, உங்களுக்கு ரொம்ப தில்லுனு, க்ளாஸ்மேட்ஸ் சொன்னாங்க... நீங்க என்ன சொல்லப் போறீங்க?

சொல்ல நினைப்பதையும் சொல்லவில்லை
சொல்லாமல் இருப்பதிலும் அர்த்தமில்லை
சொல்ல நினைத்தாலும் முடியவில்லை!
சொல்ல ஆரம்பித்தால் முடிவேயில்லை!!

சிலரை தவிர்க்கிறது சிலரின் மனம்
பழக நினைக்கிறது எந்தன் உளம்
ஏன் என்ற கேள்வி மனதில் எழும்!
தக்க விடையொன்று மனமே தரும்!

முரண்களின் உருவமாய் மொத்தத்தில் அவர்
முடியாததையும் முடிக்க வைக்கும் பவர்!
மறுப்புக்கு மறுப்பு சொல்லும் மலர்,
மண்ணை தின்ன கண்ணனவன் கலர்!

சற்றே மிரள வைத்த முதல் பார்வை
பின் புரிந்தது அவர் உழைப்பின் வியர்வை!
தன்னை சுற்றி போர்த்தியிருக்கிறார் போர்வை,
அதை தூக்கி எறிவது காலத்தின் தேவை!

தவமிருந்து உருவான மணி
காய் விடுத்து கவர வேண்டும் கனி!
அவர் வழி என்றென்றும் தனி,
நானும் பழகிக் கொள்வேன் அதை, இனி!!

பிடிக்காதது முதலில் வரும் 4

பிடிக்காதது: பப்ளிக்காக வகுப்பில் வைத்து ஒருவரை திட்டுவது.
பிடித்தது: மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் எதையும் வெளிப்படையாக கேட்டு விடுவது.

பிடிக்காதது: சிலரின் திறமைக்கு மதிப்பு தரா தன்மை.
பிடித்தது: திறமையின் வடிவாக நீங்களே இருக்கும் உண்மை.

பிடிக்காதது: கால் மேல் கால் போட வேண்டாம் என்று சொன்னது.
பிடித்தது: பலமுறை இதே விஷயத்தை என் அம்மா சொல்லியும் கேட்காத என்னையும் கேட்க வைத்தது.

பிடிக்காதது: English பேசுபவர்களை கண்டு ஒதுங்குவது.
பிடித்தது: எல்லாரையும் செகண்ட் ஆப்ஷன் English எடுக்க சொன்னது.

********************************************


பிடித்தது முதலில் வரும் 4

பிடித்தது: சாவி விஷயத்தில் நடந்த செயலுக்காக வருந்திய என்னை, past is past என்று சொல்லி தேற்றியது.
பிடிக்காதது: என்னிடம் past is past சொன்ன நீங்கள் past ல் படித்த ஜாஹிரா டீச்சரிடம் சைக்காலஜி ஏன் பிடிக்கவில்லை என்று கேட்பேன் என்றது.

பிடித்தது: கண்டிப்பாக டெஸ்ட் எழுத வேண்டும் என்று சொல்லி, உங்கள் கம்பீரத்தை நிலை நாட்டியது.
பிடிக்காதது: பல நாட்கள் ஆப்சண்ட் ஆனவர்களையும் நிர்பந்தமாய் டெஸ்ட் எழுத சொன்னது.

பிடித்தது: அழகாக பாடம் நடத்துவது.
பிடிக்காதது: இவ்விஷயத்தில் எதுவுமில்லை.

பிடித்தது: Psychological Terms ஆங்கிலத்தில் போர்டில் எழுதுவது.
பிடிக்காதது: சிறிதும் ஆங்கிலத்தில் பேச தயாராக இல்லாமல் இருப்பது.

********************************************


என்னிடம் எனக்கு பிடித்தது: சொல்ல நினைப்பதை வெளிப்படையாக சொல்வது.
என்னிடம் எனக்கு பிடிக்காதது: சில நேரங்களில் சில விஷயங்களை சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமல் போவது(இங்கேயும் அது போல சில உண்டு)
(இங்கே நான் சொல்லியிருப்பது உங்கள் குணம் என்று நான் சொல்லவில்லை, இது என் சொந்த கருத்து மட்டும் தான்)

-சுமஜ்லா.

17 comments:

S.A. நவாஸுதீன் said...

நிஜமாவே உங்களுக்கு தில்லு ஜாஸ்திதான்.

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கவும்

ப்ரியமுடன் வசந்த் said...

//இங்கேயும் அது போல சில உண்டு//

pleease சொல்லிடுங்க...

ஹ ஹ ஹா

சிரிச்சா ஸ்டாப்புன்னு சொல்லிடாதிங்க சகோ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பிடித்து பிடிக்காததும் பிடிக்காத பிடித்ததும்
படித்ததும் பிடித்தது.

உங்க மேடம்கிட்ட கொடுத்து, அது
அவங்களுக்கு பிடித்ததா என்று பிறகு
எங்களுக்கு ஃபால்லோ-அப் தருவீங்கதானே?

SUFFIX said...

அவரு பெயரில் 'மணி' இருக்கா?

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கவும்//

பாதி எழுதி வைத்திருக்கிறேன்...போடுகிறேன், நிச்சயமாக!

SUMAZLA/சுமஜ்லா said...

//pleease சொல்லிடுங்க...//

இதுக்கும் மேல எழுதினால், எனக்கு டி.சி. கொடுத்து அனுப்பினாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை...

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்க மேடம்கிட்ட கொடுத்து, அது
அவங்களுக்கு பிடித்ததா என்று பிறகு
எங்களுக்கு ஃபால்லோ-அப் தருவீங்கதானே?//

நிச்சயம் தருகிறேன். ஆனால், ஒரு மாதம் ஆகும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//அவரு பெயரில் 'மணி' இருக்கா?//

இருக்கு!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அனுபவம்

துபாய் ராஜா said...

//தவமிருந்து உருவான மணி//

பேரை கண்டுபிடிச்சிட்டோம்.ஆனா யார்கிட்டயும் சொல்லமாட்டோம். :))

SUMAZLA/சுமஜ்லா said...

//பேரை கண்டுபிடிச்சிட்டோம்.ஆனா யார்கிட்டயும் சொல்லமாட்டோம். :))//

வெரிகுட்! சமத்து பசங்க!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அக்கா internal mark ல கை வெச்சிட போறாங்க .. இதெல்லாம் பெரும்பாலும் கண்துடைப்பு , பெரும்பாலும் நாம் மனதில் இருக்கும் உண்மைகளை சொல்ல முடியாது . அப்படி சொன்னால் அதை ஏற்றுக்கொள்பவர்கள் மிக சிலரே ....

என் ப்ளோக்ல rss feed எப்படி add பண்ணனும் சொல்லுங்க

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நல்லா இருக்கேன் அக்கா நீங்க எப்படி இருக்கீங்க . Final year project work அதனால் கொஞ்சம் bussy .

இப்னு அப்துல் ரஜாக் said...

தவத்துக்கும்,மணிக்கும்
உள்ள ஒற்றுமையே
எங்கள் டீச்சர் சுமஜ்லா அக்காவின்
டீச்சர்.
(அப்பப்பா,டார்ச்சர் தாங்களையோ)

SUMAZLA/சுமஜ்லா said...

//அக்கா internal mark ல கை வெச்சிட போறாங்க .. இதெல்லாம் பெரும்பாலும் கண்துடைப்பு , பெரும்பாலும் நாம் மனதில் இருக்கும் உண்மைகளை சொல்ல முடியாது . அப்படி சொன்னால் அதை ஏற்றுக்கொள்பவர்கள் மிக சிலரே ....//

சரிதான் தம்பி!
ஆயிரம் இருக்கு சொல்ல! ஆனால் வார்த்தைகள் வரவில்லை வெளியே!

SUMAZLA/சுமஜ்லா said...

//என் ப்ளோக்ல rss feed எப்படி add பண்ணனும் சொல்லுங்க//

இது சம்பந்தமாக, http://tvs50.blogspot.com பாருங்க... விளக்கமாக இருக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

//எங்கள் டீச்சர் சுமஜ்லா அக்காவின்
டீச்சர்.
(அப்பப்பா,டார்ச்சர் தாங்களையோ)//

எங்க காலேஜில், யாரும் அவ்வளவாக நெட்டுக்கு போவதில்லை...அந்த தைரியம் தான்... ஆனால், அவ்வப்போது, என் பதிவுகளை பிரிண்ட் எடுத்து(பின்னூட்டத்துடன்) காலேஜில் இஷ்யூ பண்ணி வருகிறேன் :) சோ பீ கேர்ஃபுல்!