Sunday, October 4, 2009

வெற்றியின் ரகசியம்


யாரும் அறியா உலகத்திலே
...நாம் இருவரும் கைகோர்ப்போம்
எங்கும் இருக்கும் இறையருளால்
...இனிதாய் மனம் களிப்போம்-நாம்
...இனிதாய் மனம் களிப்போம்.

யாரும் அறியாப் பொழுதினிலே
...ஒன்றாய் இணைந்திடுவோம்
காற்றும் நுழையா இடத்தில் கூட
...காதலில் கனிந்திடுவோம்-நாம்
...காதலில் கனிந்திடுவோம்.

நித்திய உலகை கடந்தே இருவரும்
...நிலவுக்குள் நுழைந்திடுவோம்
நிலவில் கூட இணைந்தே ஒன்றாய்
...நாடகம் நடத்திடுவோம்-நாம்
...நாடகம் நடத்திடுவோம்.

ஈருடல் ஓருயிர் அல்ல அல்ல
...ஓருடல் ஒருயிர் தான்
நீயே நான் என, நானே நீயென
...புரிந்திடல் சுகமே தான்-இதைப்
...புரிந்திடல் சுகமே தான்.

-சுமஜ்லா

20 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
Starjan (ஸ்டார்ஜன்) said...

I am first

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சூப்பெர் , கவிதை , லாஃபிராமா விளக்கம் நான் எதோ புதிதாகவோ அல்லது இஸ்லாம் சம்மந்தப்பட்ட வார்த்தை என்று நினைத்தேன் , உங்கள் குட்டிஸ் பெயர் என்று தெரிந்து சிரிப்புதான் வந்தது .. நல்ல பெயர் , லாஃபிரா க்கு ஒரு ஹாய் ..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அய்யய்யோ ! சே.. மிஸ்ஸாயிடுச்சே ...

நான் இரண்டாவது மூணாவது

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகான ஒரு மெட்டை அடிப்படையாய்
வைத்துக் கொண்டு, அதில் வார்த்தைகளைப்
போட்டு எழுதியது போல் இருக்கிறது.
கருத்துக்கள் நன்றாய் இருக்கின்றன.

Starjan (ஸ்டார்ஜன்) said...

I am seconnd , fourth ,sixth

நட்புடன் ஜமால் said...

நீயே நான் என, நானே நீயென
...புரிந்திடல் சுகமே தான்]]

உண்மை

Jaleela Kamal said...

//காற்றும் நுழையா இடத்தில் கூட
...காதலில் கனிந்திடுவோம்/

ரொம்ப அருமையான வரிகள் சுஹைனா

பீர் | Peer said...

:)

அப்துல்மாலிக் said...

well said

அரங்கப்பெருமாள் said...

அருமையாக எழுதியிருக்கிங்க.... நிலாவுல தண்ணி கிடைக்குதுன்னு தெரிஞ்ச உடனே அங்கேயும் கிளம்பிட்டீங்களா? வாழ்த்துக்கள்.

SUFFIX said...

அழகிய பாடல்+கவிதை::::)

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப அருமை சுமஜ்லா அக்கா

Anonymous said...

மேடம்,
ஒரே வெப்சைட் நேம்ல, தங்கலடுஅதும் மற்றும் பலரது பெண் பதிவுகளை பார்க்க "FEMALE POWER IN GOOGLE READER" படித்துகொண்டிரிண்டேன்.
தற்போது மறந்துபோனத்தல்
PLEASE TELL ME THE CORRECT WEBSITE ADDRESS

கருணாகரன்
My mail id is "vvk85614@yahoo.co.in"

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றாக இருக்கிறது.

SUMAZLA/சுமஜ்லா said...

//லாஃபிராமா விளக்கம் நான் எதோ புதிதாகவோ அல்லது இஸ்லாம் சம்மந்தப்பட்ட வார்த்தை என்று நினைத்தேன் //

ஹா...ஹா...!

நன்றி ஸ்டார்ஜன், ஃபர்ஸ்ட் செகண்ட் என்று பள்ளியில் நான் வாங்கிய ரேங்க்கை நினைவுபடுத்தியதற்கு!

அரங்கண்ணா, உங்க குசும்புக்கு அளவே இல்லாம போயிருச்சு! இது நிலாவில் தண்ணி கண்டுபிடிக்கறக்கு முன்னால எழுதினது!

மற்றபடி, அருமை, அருமைனு என்னை ஊக்கப்படுத்திய எல்லாருக்கும், அருமையான நன்றிகள்...

SUMAZLA/சுமஜ்லா said...

வாரத்துக்கு நாலு பதிவு போட வேண்டும் என்று முயல்கிறேன்...ஆனால், அது ஒரே நாளில் நான்கு பதிவு, மீதி நாளில் ஒன்றுமில்லை என்று கூட இருக்கலாம்...

எல்லா ஃபிரெண்ட்ஸுடைய பதிவையும், இந்த வீக் எண்டில் படித்து பின்னூட்டமிடணும்... நாலைந்து நாளா, டெஸ்ட், டெஸ்ட்டுனு காய்ச்சி எடுத்திட்டாங்க...(எல்லா டெஸ்ட்லயும், V.Good வாங்கியது வேறு விஷயம்...)

R.Gopi said...

//யாரும் அறியா உலகத்திலே
...நாம் இருவரும் கைகோர்ப்போம்
எங்கும் இருக்கும் இறையருளால்
...இனிதாய் மனம் களிப்போம்-நாம்
...இனிதாய் மனம் களிப்போம்.//

ஜிலீர் ஆர‌ம்ப‌ம் சும‌ஜ்லா...

//யாரும் அறியாப் பொழுதினிலே
...ஒன்றாய் இணைந்திடுவோம்
காற்றும் நுழையா இடத்தில் கூட
...காதலில் கனிந்திடுவோம்-நாம்
...காதலில் கனிந்திடுவோம்.//

வாவ்... காத‌லின் அண்மையை வெகு அழ‌காக‌ சொல்லி இருக்கிறீர்க‌ள்...

//நித்திய உலகை கடந்தே இருவரும்
...நிலவுக்குள் நுழைந்திடுவோம்
நிலவில் கூட இணைந்தே ஒன்றாய்
...நாடகம் நடத்திடுவோம்-நாம்
...நாடகம் நடத்திடுவோம்.//

ம்ம்ம்... ஒவ்வொருவ‌ருக்கு ஒவ்வொரு க‌தாபாத்திர‌ம்...

//ஈருடல் ஓருயிர் அல்ல அல்ல
...ஓருடல் ஒருயிர் தான்
நீயே நான் என, நானே நீயென
...புரிந்திடல் சுகமே தான்-இதைப்
...புரிந்திடல் சுகமே தான்.//

அட‌... இது கூட‌ புதிய‌ சிந்த‌னைதான்... நான் நீயென்னும்போது, நீயும், நானும் வேற‌ல்ல‌வே என்ப‌து...

வாழ்த்துக்க‌ள் சும‌ஜ்லா... ந‌ல்லா இருக்கு...

இப்னு அப்துல் ரஜாக் said...

very nice

Yousufa said...

சுஹைனா,

என்ன பெரிய‌ லீவாக விட்டுட்டீங்க? சாயபு வீட்டுக் கதையையாவது போடுங்கள். அதுதான் நான் தவறாமல் படிப்பது. காத்திருக்கிறேன்.