Sunday, October 11, 2009

அரபு சீமையிலே... - 10

செல்வந்தர் வீட்டு
செல்வங்களையெல்லாம்
செவ்வனே வளர்க்க
செவிலித் தாய்கள்,
நியமிப்பது அந்த
ஊரின் வழக்கம்!
அதற்கென கூலியும்
கொடுப்பது பழக்கம்!!

தகப்பனில்லாப் பிள்ளை - எனவே
வளர்பணம் அதிகம் கிட்டாதென
அருமைப் பிள்ளை முஹமதுவை
பெருமை பொங்க வளர்த்திடவே
யார்க்கும் எவர்க்கும் துணிவில்லை!
சேர்த்து வளார்க்க மனமில்லை!!

மெலிந்த கோவேறு கழுதை - மடிவற்றி
நலிந்த ஒட்டகை தன்னை
இழுத்தபடி இறுதியாக ஹலிமா வந்தார்!
வளக்கவொரு பிள்ளை கிடைக்காமல் நொந்தார்!!
பாலகர் முஹமதுவைக் கண்டார்!
சேவகம் செய்ய மனம் கொண்டார்!!

செய்கூலி குறைந்தாலும்,
சேதாரமின்றி நான் வளர்ப்பேன்,
என,
மெய்யோடு மெய்யாக
சேர்த்தணைத்தார் திருமலரை!

சன்மானம் கிடைக்காவிட்டாலும்
தன்மானம் காக்க வேண்டுமென,
எடுத்துச் சென்றார் முஹமதுவை!
ஏந்தல் ரசூல் அஹமதுவை!!

அநாதையாம் முஹமதுவை
அற்புத பிள்ளை அஹமதுவை
பொக்கிஷமாய் அரவணைக்க்,
மார்பில் பால் சுரந்தது!
ஒட்டகமும்
மடு பெருத்து கரந்தது!!
அனைவர் பசியும் தீர்ந்தது!
அகமும் முகமும் குளிர்ந்தது!!

களைத்துச் சோர்ந்திருந்த
கோவேறு கழுதை,
பீடு நடை போட்டு முன்னேற,
முந்திச் சென்ரா மற்றவையெல்லாம்,
ஈடு கொடுக்க முடியாமல் பின்னேற,

சுபிட்சம் நிறைய
வறுமை வாடியது!
சுந்தர மகனால்,
பெருமை தேடியது!!
உணவும் உயர்வும்
அங்கே கூடியது!
எல்லாம் எல்லாம்
இறைவன் நாடியது!!

ஆண்டுகள் மூன்று
ஓடி மறைய
தாண்டினார் முஹமது
பால்குடி பருவம்!
ஈண்டு ஆமினாவிடம்
இஷடமின்றி எடுத்துச் செல்ல,
சீண்ட, மக்காவில்
தொற்று நோய் பரவ,
மீண்டும் மகிழ்வாய்
மீட்டு வந்திட்டார்
யாண்டும் நற்குண
மாதராம் ஹலிமா!!

இனியேகிய ஆண்டுகள்
இரண்டு - ஆனபின்,
தனி தாடக மலரை
தாயிடன்
புனிதவதி ஹலிமா
புகழோடு சேர்த்தார்!

பிறப்பால் குறைஷி
ஆனாலும்,
வளார்ப்பால் ஹுனைன் தேச
பனூசஆத் ஆனதால்,
கலங்கலின்றி தெள்ளரபி
தடங்களின்றி பழகி பேசினார்!
மலர்மங்கை ஹலிமாவின்
குலவளார்ப்பின் காரணமாம்!!

உம்மு ஐமனுடன் பாலகரை
அன்னை ஆமினா
அழைத்துக் கொண்டு,
யத்ரீபு சென்றார்.
கணவரின் உறவுகளை
தனயனுக்குக் காண்பித்தார்!
பணிமகளின் துணையுடனே,
பாதி வழி சேர்ப்பித்தார்!!

திரும்பி மக்காவை நோக்கி,
மேற்கொண்டார் பயணம்!
விரும்பி ஆமினாவைத்
தேடி வந்தது மரணம்!!

நேராத் துன்பம்
நேர்ந்ததே முஹம்மதுக்கு!! - தன்
ஆறாம் வயதில்
அநாதை ஆகிவிட்டார்!!!

(வளரும்)

-சுமஜ்லா.

8 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல மொழி வளம் உங்களுடையது.

கவி அழகன் said...

அழகாக அடுக்கிகொண்டே செல்கிறீர்கள் உங்கள் காதல் வரிகளை

R.Gopi said...

நல்ல அருமையான தொடக்கம்...

சீரான மற்றும் சரளமான எழுத்து நடை... தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்...

வாழ்த்துக்கள் சுமஜ்லா...

நட்புடன் ஜமால் said...

செய்கூலி குறைந்தாலும்,
சேதாரமின்றி நான் வளர்ப்பேன்,
என,
மெய்யோடு மெய்யாக
சேர்த்தணைத்தார் திருமலரை!]]

நிகழ்வை அழகா காட்சி செய்திருக்கீங்க

பாத்திமா ஜொஹ்ரா said...

//சன்மானம் கிடைக்காவிட்டாலும்
தன்மானம் காக்க வேண்டுமென,
எடுத்துச் சென்றார் முஹமதுவை!
ஏந்தல் ரசூல் அஹமதுவை!!//

annai haleema rali is really great

அன்புடன் மலிக்கா said...

மிகுவும் அருமையக்கா,

ஏந்தல் நபியின்
ஏற்றமிகுந்த வரலாறு
எள்ளலவும் மறந்திடுமோ
எங்கள் நிலைபாடு

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஸ்ரீ, யாதவன், கோபி, பாத்திமா ஜொஹ்ரா, ஜமால் மற்றும் மலிக்காவுக்கு!

ராஜவம்சம் said...

ரஸூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸ்ஸலாம் பற்றி கவிதை தொகுக்கும் போது மிகமிக கவனமாக இருக்கவேண்டும் அனு அளவு பிசகாமல் (இறைவன் அளவு உயர்திடாமலும் அவர்களின் தரம் குறைந்திடாமலும் கண்னும் கருத்துமாக இருக்கவேண்டும்)

கவிதைக்கு அழகு சேர்ப்பதர்க்காக ரஸூலை வெரும் முகமது என்று சில இடங்கலில் வந்துல்லது கவனிக்கவும் ஹதிஸ் முறைப்படி அப்படி அழைப்பது தவரு