Saturday, December 19, 2009

சந்தோஷம் தரும் சந்திப்பு

எலக்ட்ரான்ஸும் ப்ரோட்டான்ஸுமான மின்காந்த அலைகள் எழுதவில்லை எம்மனங்களின் சங்கமத்தை! அதையும் தாண்டி இருக்கும் எதார்த்த நட்பும், எதிர்பார்ப்பில்லா அன்பும் பின்னிய வலை இது!அகம் மட்டுமே பார்த்த நட்புகள் முகம் பார்க்க ஒரு வாய்ப்பு! எழுத்தின் வடிவத்தை மட்டும் பார்த்தவர்கள் எழில் உருவத்தையும் நோக்கிட ஒரு சந்திப்பு!! ஈரோட்டில் சந்தோஷம் தரும் சந்திப்பாய், ஒரு சங்கமம்!!!

சென்னையின் சிறுகதை பட்டறை நடந்த போது, ஒரு ஏக்கமாய் - ஒரு எதிர்பார்ப்பாய் - கைக்கெட்டாத கனியை பார்த்து கொட்டாவி விட்ட கதையாய் ஏங்கியது என் உள்ளம்...கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தவர்கள் மேல் சற்று பொறாமையாகக் கூட இருந்தது...! அதற்கெல்லாம் ஒரு விடிவாய், இதோ எமக்கொரு வாய்ப்பு!!!

நண்பர்கள் அனைவரையும் வருக! வருக! என்று வரவேற்கிறேன்!

சந்திப்பு குறித்த விவரங்கள்:20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3.30 மணிக்குத் துவங்கி மாலை 7 மணிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

சந்திப்பு நடைபெறும் இடம் :

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)

லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,

பெருந்துறை சாலை,ஈரோடு - 11

தயவுசெய்து பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் தங்கள் வருகையை முன் கூட்டியே கீழ்காணும் யாரிடமாவது உறுதி செய்துகொள்ளவும்.

வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

இந்த சங்கமத்தைச் சிறப்பாக நடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடு அழைக்கிறேன்.

இந்த சங்கமத்தில்
* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு

அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாக கருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்.


எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...

- சுமஜ்லா.

14 comments:

க.பாலாசி said...

//எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...//

வழிமொழிகிறேன்....

அகல்விளக்கு said...

சிறப்புற நடத்துவோம்.

அண்ணாமலையான் said...

சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்.. முடிந்தவுடன் முழு பதிவு எதிர்பார்க்கிறேன்.

Jaleela said...

சுஹைனா ஆஹா ஈரோட்டிலும் பதிவர் கூட போறீங்களா?

நேற்று துபாயில் நடந்தது ஹுஸைம்மா, மலிக்கா அழைத்து கொண்டே இருந்தார்கள் , என்னால் போக முடியல.

நீங்களும் நல்ல படியாக நடத்துங்கள்.

வாழ்த்துக்கள்.

Jaleela said...

//சென்னையின் முதல் பதிவர் சந்திப்பு நடந்த போது, ஒரு ஏக்கமாய் - ஒரு எதிர்பார்ப்பாய் - கைக்கெட்டாத கனியை பார்த்து கொட்டாவி விட்ட கதையாய் ஏங்கியது//
நேற்று ஷார்ஜாவில் நடந்த பதிவர் சந்திப்புக்கு
இங்கிருந்து காரில் ஏறினால் அரைமணி நேரம் இதற்கே போக முடியாமல் , காதில் புகைவிட்டு கொண்டு இருந்தேன்.

பூங்குன்றன்.வே said...

சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்.

SUFFIX said...

சந்திப்பு நல்ல முறையில் நடந்து நட்புகள் மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி!
நிச்சயமாக முடிந்தபின் அதன் தொகுப்பை வெளியிடுகிறேன்!
அடடா! என்ன ஜலீலாக்கா, இப்படி மிஸ் பண்ணிட்டீங்க?!

Anonymous said...

வர முயன்றும் முடியலை..இருந்தாலும் சந்திப்பு சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்...

asiya omar said...

ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பா? வாசிப்பாளர் என்ற முறையில் வாழ்த்துக்கள்.தகவல்களை தொகுத்து வெளியிடவும்.சுஹைனாவின் கவிமழையில் அனைவரும் நனைய ஒரு வாய்ப்பு.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நல்ல படியாக நடத்துங்கள்.கவிமழையில் அனைவரும் நனைய ஒரு வாய்ப்பு.

வாழ்த்துக்கள்.

seemangani said...

விழா நல்லபடியாக வர வாழ்த்துகள்....உங்கள் பதிவை எதிர்பார்த்து...

அரங்கப்பெருமாள் said...

நம்ம கலந்துக் கொள்ளமுடியாதே. எனது வாழ்த்துக்கள்.

வட போச்சே..

Porkodi (பொற்கொடி) said...

sumazla, epdi irukinga? vegu naal ayitru unga padhivu padithu!! ellam nalamena ennugiren!