Saturday, December 26, 2009

ஹாலி லூயா...

இந்த இடுகை நேற்றே எழுதியிருக்க வேண்டும். ஒரு நாள் லேட்டாகி விட்டது!

கிருஸ்த்துமஸ் நெருங்கி விட்டாலே, சின்ன வயதில், என் மனதில் சந்தோஷம் நிரம்பி விடும். அதற்கு மூன்று காரணங்கள் - முதலாவது, அதைத் தொடர்ந்து வரும் அரையாண்டு பரிச்சை விடுமுறை, அடுத்து கிருஸ்த்துமஸுக்கு அடுத்த மூன்றாவது நாள் வரும் என்னுடைய பிறந்த நாள், அடுத்து வேண்டுமட்டும் தின்னக் கிடைக்கும் கேக்கும், கேக்குத்தூளும்!

கேக்கை விட, இந்த கேக்குத்தூள் எனக்கு மிகவும் பிடிக்கும்... பாக்கிட் பாக்கிட்டாக அப்பா வாங்கி வருவார். அதில் பல டேஸ்ட்டுகள் கொண்ட கேக்குகள், சிறு சிறு கட்டிகளாக இருக்கும்! விரும்பியவரை அதை சாப்பிட்டு விட்டு, பல நேரங்கள் சாப்பாடே வேண்டாம் என்று சொல்லி விடுவேன்!

இப்போது, நான் படித்த அதே பள்ளியில் டீச்சிங் ப்ராக்டிஸ் போய்க் கொண்டிருக்கும் வேளையில், அங்கு போன வாரம் கிருஸ்த்துமஸ் கொண்டாடினார்கள். தீபாவளிக்கு இந்து டீச்சர்ஸும், கிருஸ்த்துமஸுக்கு கிரிஸ்டியன் டீச்சர்ஸும் ஏற்பாடு செய்கிறார்கள்.

டீச்சிங் ப்ராக்டிஸ் ஸ்டூடண்ட்ஸ் மொத்தம் ஆறு பேர்! அதில் மூவர் இந்துக்கள், இருவர் இஸ்லாமியர், ஒருவர் கிரிஸ்டியன் என்று என்ன ஒரு சமத்துவம் பாருங்கள்.(பாகிரதி, சுதா, தேன்மொழி, சுஹைனா, இல்ஹாம், அருள்செல்வி)

அங்கு, கிருஸ்த்துமஸ் கொண்டாட்டத்துக்கு எங்களை அழைக்க மறந்து விட்டார்கள். எங்களுக்கு சொல்ல முடியாத வருத்தம். இல்ஹாமோ அழுதே விட்டாள். அன்று மாலை, கிருஸ்டியன் டீச்சர்ஸின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அதோடு அவர்கள் அளித்த டின்னர்!

நாங்கள் அனைவரும் முதல்நாள் வரை அழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து, ஏமாந்து, மனம் வெதும்பி போயிருந்தோம். அன்று காலையில் முகமே வாடிப் போய் விட்டது!

டூட்டி முடிந்து லன்ச்சுக்காக ரூமுக்கு வந்தால்...அழகான கிருஸ்த்துமஸ் கேக் அங்கே!

கேக் சாப்பிட்டதும், பப்ஸ், அடுத்து பால்கோவா! எல்லாம் அருள்செல்வியின் ஏற்பாடு!

பாகிரதி, அருமையான சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருந்தார். நான் புரோட்டாவும் சாப்ஸும் கொண்டு போயிருந்தேன். ஒரே தம்மா...கும்மா தான் அன்று! எல்லாரும் டீன் ஏஜுக்கு திரும்பி விட்டிருந்தோம்! மற்ற டீச்சர்ஸை விட அதிகம் கொண்டாடியது நாங்களாகத்தான் இருக்கும்!!!

எல்லாருடைய டிபனும் அன்று திறக்கப்படாமலே திரும்பிப் போயிற்று!

முகத்தில் கிரீமைப் பூசிக் கொண்டு ஆட்டம் போட்டது மறக்க முடியாத நினைவாக அமைந்து விட்டது! அருள் இந்த ஏற்பாட்டை சஸ்பென்ஸாக செய்திருந்ததால், அன்று கேமரா கொண்டு போயிருக்கவில்லை...இல்லாவிட்டால், அந்த அழகு கோலங்களை உங்களுடன் பகிர்ந்திருப்பேன்!

அரைப்பரிச்சை லீவ் என்ற சந்தோஷத்துக்கு பதிலாக, மீண்டும் பத்து நாட்கள் ஆகுமே, நாம் ஆறு பேரும் மீட் பண்ண, என்ற நினைவில், எங்கள் கண்கள் குளம் கட்டிக் கொண்டன.

( “அக்கா... நம்மளப் பற்றி ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதுங்கக்கா... ”என்று தேன்மொழி ஆசைப்பட்டதற்காக இந்த பதிவு!)

அனைவருக்கும் (தாமதமான) கிருஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

9 comments:

Jaleela Kamal said...

நல்ல பகிர்வு சுஹைனா.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நாங்க இதுக்கெல்லாம் சான்ஸே இல்லை. காலேஜ் என்ப‌தால் எல்லாம் இது போல் ஆட்ட‌ம் பாட்ட‌ம் போட‌ முடிகிற‌து.

கேக் தூள் ம்ம்ம்ம் நினைப்ப‌ காமிச்சிட்டீங்களே என‌க்கும் அந்த‌ பொட்ட‌ல‌ம் ரொம்ப‌ பிடிக்கும்.
கிருஸ்மஸ் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. said...

கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

முருக.கவி said...

Advance Happy Birthday

அரங்கப்பெருமாள் said...

இந்தப் பதிவை எழுதியதற்கு முதலில் பாராட்டுக்கள்.

//முகத்தில் கிரீமைப் பூசிக் கொண்டு ஆட்டம்//

யூத் ஆயிட்ட மாதிரி தெரியுதே... கலக்கல் போங்க.

இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றி! ஆனா, இப்போலாம் நான் பிறந்த நாள் கொண்டாடறதே இல்லை(வயது முப்பதைத் தாண்டியதிலிருந்து!) வயசாகுதேனு கவலை தான் :)

//யூத் ஆயிட்ட மாதிரி தெரியுதே... கலக்கல் போங்க//

வயோதிகம் உடலுக்குத் தானே, மனசுக்கு இல்லையே!

அரங்கப்பெருமாள் said...

//வயோதிகம் உடலுக்குத் தானே, மனசுக்கு இல்லையே//

என்னமோ போங்க... நீங்கதான் இப்படி சொல்லுறீங்க.

கண்மணி/kanmani said...

//அங்கு, கிருஸ்த்துமஸ் கொண்டாட்டத்துக்கு எங்களை அழைக்க மறந்து விட்டார்கள்.//

ஒரே இடத்தில் பயிலும் போது ஏன் இப்படி பாகுபாடு?தெரியாமல் நடந்து விட்டதோ?

அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

கேக் தூள்...அக்கா எனக்கும் அந்த அனுபவம் இருக்கு எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பேக்கரில அம்மா போய் வாங்கி குடுப்பாங்க...நல்ல ருசியா இருக்கும் எல்லா கேக்கும் மிக்ஸ்ஆ இருக்குறதால அப்றம் இதயம் கனிந்த அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள்...

வயோதிகம் உடலுக்குத் தானே, மனசுக்கு இல்லையே!ம்ம்ம்ம்