Monday, December 28, 2009

குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...

இல்லையொரு பிள்ளையென்று ஏங்கும் போது வந்துதித்த என் செல்லத்தங்கத்துக்கு, பன்னிரெண்டு வருடங்களுக்கு முன், நான் எழுதிய தாலாட்டு!

அன்பு எனும் மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
லாஃபிரா கண்ணே தூங்கிடுவாய் தாலேலோ - நீ
மனம் நிறைய களிப்புடனே மகிழ்ச்சியுடன் ஆடியபின்
தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ
தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ(அன்பு எனும்)


பூவிதழால் புன்னகைத்து தாய்மனதைக் கொள்ளைகொண்டு
பவுர்ணமியாய் ஒளிதருவாய் தாலேலோ - உந்தன்
மழலையிலே எனை மயக்க குறும்பினிலே நீ கலக்க
நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ!
நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ!(அன்பு எனும்)


இல்லையொரு பிள்ளையென ஏங்கும் போது வந்துதித்த
லாஃபிராகண்ணே கண்மலர்வாய் தாலேலோ - உன்
தேன்மொழியில் வாயொழுக தீந்தமிழில் பாட்டிசைக்க
திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ!
திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ! (அன்பு எனும்)


கையிரண்டில் அள்ளிக் கொண்டு கன்னத்திலே கன்னம் வைத்து
முத்தங்களை பொழிந்திடவே தாலேலோ - உன்
பொன்னழகை பார்ப்பதற்கும் பூமுகத்தை ரசிப்பதற்கும்
கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ!
கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ! (அன்பு எனும்)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ - அவன்
வாய் நிறைய மண்ணனை உண்டு மண்டலத்தை காட்டியப்பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)


பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ - அந்த
மந்திரத்தில் அவளுரங்க மயக்கத்திலே இவனுரங்க
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)


நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ - அந்த
மோகநிலைக் கூட, ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)


கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகை பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

6 comments:

அன்புத்தோழன் said...

Office la ukkandhu idha padichruka kudadhu...

satre kan ayarndha poludhu unardhen.... thaaimaiyin thalatin sirappu.
(nallavela manager pakala) :-)

Arumaiyana thalatu sila eluthu pilaigaludan... like

"தனை மறாந்து தூங்கிடுவாய் தாலேலோ
தனை மறாந்து தூங்கிடுவாய் தாலேலோ"

"றா" raavukku kuda thunaiyaga thunaikaalai serthu vaithu paakum nalla manasu.. ha ha....

சீமான்கனி said...

//கையிரண்டில் அள்ளிக் கொண்டு கன்னத்திலே கன்னம் வைத்து
முத்தங்களை பொழிந்திடவே தாலேலோ - உன்
பொன்னழகை பார்ப்பதற்கும் பூமுகத்தை ரசிப்பதற்கும்
கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ!
கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ!//

இந்த வரிகள் மிக அருமை அக்கா....ரசித்தேன்...
லீவு விட்டுட்டாங்களா???

SurveySan said...

my favourite song.

nallaa ezhudhirukkeeenga.

naanum, mathavangalum, paadiyadhu inge
http://neyarviruppam.blogspot.com/2007/04/9.html

நட்புடன் ஜமால் said...

நமக்கு உதவும் நோட் பன்னிக்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//"றா" raavukku kuda thunaiyaga thunaikaalai serthu vaithu paakum nalla manasu.. ha ha....//

மனசு விட்டு சிரித்தேன்!

//இந்த வரிகள் மிக அருமை அக்கா....ரசித்தேன்...
லீவு விட்டுட்டாங்களா???//

நன்றி தம்பி! ஏண்டா லீவு விட்டு தொலைச்சாங்கன்னு இருக்கு!

//நமக்கு உதவும் நோட் பன்னிக்கிறேன்.//

ஆமாமா...பேரை மட்டும் மாற்றினா போதும்!

SUMAZLA/சுமஜ்லா said...

//my favourite song.

nallaa ezhudhirukkeeenga.//

நன்றி சர்வேசன்! உங்கள் பாட்டைக் கேட்டேன்... நல்ல குரல்வளம்! அருமையாக வந்திருக்கிறது!

என் மகளுக்கு நிறைய பாடல்கள் எழுதிய போதும் என் மகனுக்காக பாடல் எதுவுமே எழுதவில்லை! யாராவது கேட்டால், அதான் இதயம் முழுவதுமே தந்து விட்டேனே, தனியாக பாடல் எதற்கு என்று சமாளிப்பேன்! தற்போது விவரம் வந்த பின், அவன் ரொம்ப கேட்டதால், ‘சுட்டும் விழி சுடரே’ மெட்டில் ஒரு பாடல் எழுதித் தந்தேன்... அதை வெளியிடுகிறேன். உங்களால் முடிந்தால், அதைப் பாடித் தாருங்கள். இசையோடு இங்கு வெளியிடலாம்!