Tuesday, February 9, 2010

அரபு சீமையிலே... - 15

இஸ்லாத்தைத் தான் ஏற்காத போதும்,
இன்முக சிறுதந்தை அபூதாலிப் அவர்கள்,
முரணாய் பேசிய மக்களிடமிருந்து,
அரணாய் காத்தார் நபிகள் தன்னை!!

அபூலஹப் மக்கள்
உத்பா, உதைபா,
நபியின் புதல்விகள்
ருகையா, உம்மு குல்தூம்
இவர்களை மணமுடித்திருக்க,

தீனின் மீது கொண்ட வெறுப்பால்
ஆணையிட்டார் மணவிலக்களிக்க!!

எண்ணரும் துன்பங்கள்
எல்லையின்றி தொடர்ந்தாலும்,
கண்ணென நபிகள்
காத்தார் தீனை!!

அண்ணல்நபிகளுக்களித்து வந்த கொடுமை
அளவில்லாமல் பெருக,
அடித்தும் படித்தும்
துடித்திட வைத்தும்,
உடலுக்கு நோவினையும்
மனதுக்கு வேதனையும்
வரையின்றி தந்தனர்!
குறையின்றி ஈந்தனர்!!

இந்நாள் மதினா,
அந்நாள் யத்ரிபு
மக்கள் சிலரும் மக்கா ஏகி
தக்கசன்மார்க்கத்தை
தலையால் ஏற்றனர்!!

எதிர்ப்பு அதிகப்பட
தீன் வளர்ந்தது!
ஏளனம் செய்யசெய்ய,
பாரெங்கும் பரவுது!!

அபூ ஜஹல் என்னும்
அறிவீனத்தந்தை
அளப்பரும் கொடுமைகள்
பலப்பல செய்தான்!

அண்ணல் பெருமானுக்கு
ஆதரவு ஒரு புறம்
ஆல்போல தழைக்க,
எதிர்ப்பெனும் விருட்சமும்
வேகமாய் வளர்ந்தது!

இஸ்லாத்தை தழுவி,
முஸ்லிமாக மாறிய,
சாதாரண மக்களும்
வேதனை பெற்றனர்,
சேதாரம் தாண்டிய
வேள்வியில் வென்றனர்!!

அத்தகைய ஒருவரே
சத்தியர் பிலால் – அவர்தம்
எசமானர் தன்னிடம்
வசமாக மாட்டினார்...
கழுத்தில் கட்டிய வன்கயிற்றால்
ரத்தம் வழிந்தோடும்!
எழுத்தில் வடிக்க இயலா இன்னலால்
குருதியும் தேய்ந்தோடும்!!

(வளரும்)

(பெருமானார் பெயர் வரும் இடங்களில் சலவாத் ஓதிக் கொள்ளுங்கள்)

-சுமஜ்லா.

9 comments:

கவி அழகன் said...

hi nice keep writing

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமை

இப்னு அப்துல் ரஜாக் said...

நானும்,நண்பர் யூசுப் அவர்களும் தங்களுக்கு பரிசாக புத்தகங்கள் அனுப்பி இருந்தோம்,பெற்றுக் கொள்ளவும்.உங்கள் நல்ல எழுத்துக்களுக்கு எங்களால் இயன்ற சிறு பரிசு,இன்னும் எழுதுங்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

உங்கள் ஹஜ் விளக்கம் பிளாக்கை அடுத்து என் எழுத்து இகழேல் தளமும் தேர்வு பெற்றுள்ளது.அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ் அது தொடர்பான கட்டுரை எதிர் பாருங்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//நானும்,நண்பர் யூசுப் அவர்களும் தங்களுக்கு பரிசாக புத்தகங்கள் அனுப்பி இருந்தோம்,பெற்றுக் கொள்ளவும்.உங்கள் நல்ல எழுத்துக்களுக்கு எங்களால் இயன்ற சிறு பரிசு,இன்னும் எழுதுங்கள்.//

நன்றி! ஆயினும் முரண்பட்ட கருத்துக்கள் உள்ள புத்தகங்களை நான் எப்போதும் படிப்பதில்லை!

Asiya Omar said...

சுஹைனா உங்கள் அரபுச்சீமையிலே பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.பாராட்டுக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோதரி. இந்த வாரம் மீண்டும் உங்களுடையது.
கதம்ப மாலை

http://penaamunai.blogspot.com/2010/02/blog-post_14.html

mohamedali jinnah said...

“If anyone travels on a road in search of knowledge, Allah will cause him to travel on one of the roads of Paradise.” -
Sunan of Abu Dawood, Hadith 1631

All humans are dead except those who have knowledge …
and all those who have knowledge are asleep except for those who do good deeds…
and those who do good deeds are deceived except those who are sincere…
and those who are sincere are always in a state of worry.

Imam Shafi, Muslim jurist (767 CE – 820 CE)