Sunday, January 10, 2010

குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்...

இரண்டரை ஆண்டுகளுக்கு முன், என் தம்பிமகன் தைசீர் அஹமது பிறந்த போது, நான் பாடிய தாலாட்டு!

அன்புடன் ஆட்சி செய்ய
ஒரு கண்மணி வந்ததடா...
பாசத்தைக் குழைத்தெடுத்து
ஒரு பைங்கிளி பூத்ததடா...

உன்முகத்தைப் பார்க்கையில்,
உள்ளம் கொள்ளை போகுதே - தேனின்
சுவையைப் போலவே
கண்ணன் குரலும் இனிக்குதே...
அத்தை பாடிடும்
ஒரு பாடல் தான்
அதைப் பாடப் பாட
பிஞ்சு மனது குளிர்ந்திடுமே!

(அன்புடன்)

கண்ணுக்கு கண்ணாக
நீ பிறந்து வந்தாயே!
முகத்தோடு முகம் சேர்த்து,
கனிமுத்தம் தந்தேனே!
பூஞ்சிட்டை பார்த்திட,
மனம் பரவசமானதே!
தம்பியின் முகத்திலே
அட, பெருமை பொங்குதே!!
தொட்டில் நானும் ஆட்டுகிறேன்,
ஆரீ ராரி ராரோ!
விழிகள் மூடி கனவுடனே,
நீயும் தூங்கிடுவாய்!!
அத்தை பாடல் கேட்டு
தாளம்போடு இளமகனே!!

(அன்புடன்)

சந்தன சிலை போல,
இளவரசன் கண்டேனே!
உயிருக்கு உயிராக,
உனைக் கொஞ்சி ரசித்தேனே!!
பெற்றவர் வாழ்க்கையில்
தனி அர்த்தம் சேர்ந்தது!
உன்முகம் ரசிப்பதே
புது வேலை ஆனது!!
செல்லக் கண்ணன் தூங்கிடவே,
ஆரீ ராரி ராரோ!!
மெல்ல மெல்ல பாடுகிறேன்,
கண்கள் மூடிடுவாய்!
அத்தை பாடல் கேட்டு,
தாளம் போடு இளமகனே!!

(அன்புடன்)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே

(இன்னிசை)

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே

(இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே

(இன்னிசை)

11 comments:

Anonymous said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

நட்புடன் ஜமால் said...

nice :)

அரங்கப்பெருமாள் said...

//அத்தை பாடல் கேட்டு
தாளம்போடு இளமகனே!//

இந்த இடத்தில்தான் வித்தியாசம் காட்டியிருக்கிறீர்கள்.

நாட்டுப்புறப் பாடலிலே
“அத்தை அடித்தாரோஅல்லிப் பூச்செண்டாலே”

“மாமன் அடித்தாரோ மல்லிப் பூச்செண்டாலே”

என்றுதான் சொல்லப் பட்டிருக்கிறது. நாத்தினாரை பற்றி இப்படி சொல்லியிருக்கையில் நீங்கள் சொன்னது வித்தியாசம்.(உள்குத்து இருந்தால் சொல்லிவிடுங்கள்)

சீமான்கனி said...

வழக்கம் போல் அருமை அக்கா...
மாமி பாட்டுக்கு நல்ல தலை ஆட்டி இருப்பாரே???

Mohamed G said...

அருமை,அருமை,அருமை.

SUMAZLA/சுமஜ்லா said...

//நாட்டுப்புறப் பாடலிலே
“அத்தை அடித்தாரோஅல்லிப் பூச்செண்டாலே”

“மாமன் அடித்தாரோ மல்லிப் பூச்செண்டாலே”

என்றுதான் சொல்லப் பட்டிருக்கிறது. நாத்தினாரை பற்றி இப்படி சொல்லியிருக்கையில் நீங்கள் சொன்னது வித்தியாசம்.(உள்குத்து இருந்தால் சொல்லிவிடுங்கள்)//

அண்ணா, குட்டிப்பையன் கையால் தாளம் போட்டால் ஓக்கே! ஆனால் காலால் அத்தையின் நெஞ்சில் உதைத்தால், முன்பு மல்லியாலும் அல்லியாலும் வாங்கிய அடிக்கு திருப்பிக் கொடுக்கிறார்னு அர்த்தம்.

SUMAZLA/சுமஜ்லா said...

//வழக்கம் போல் அருமை அக்கா...
மாமி பாட்டுக்கு நல்ல தலை ஆட்டி இருப்பாரே???//

தலையை தலையை ஆட்டினாலும், அவருக்கு கட்டி கொடுக்கிறாப்புல மாமிகிட்ட பொண்ணு இல்லை.

Asiya Omar said...

சுஹைனா நீங்கள் ஏன் எதாவது ஒரு சினிமா பாடல் மெட்டில் உங்கள் பாடல்களைஎழுத வேண்டும் ?நீங்களே பாடல் எழுதி மெட்டிட்டு யாரையாவது பாடச்சொல்லி வெளியிட்டால் சினிமாத்துறையின் பார்வை உங்கள் பக்கம் நிச்சயம்.பாருங்கள் வாளை மீன் உலக நாதன் ஒரு பாட்டி பெரிய ஆளாகி விட்டார்,

SUMAZLA/சுமஜ்லா said...

//சுஹைனா நீங்கள் ஏன் எதாவது ஒரு சினிமா பாடல் மெட்டில் உங்கள் பாடல்களைஎழுத வேண்டும் ?நீங்களே பாடல் எழுதி மெட்டிட்டு யாரையாவது பாடச்சொல்லி வெளியிட்டால் சினிமாத்துறையின் பார்வை உங்கள் பக்கம் நிச்சயம்.பாருங்கள் வாளை மீன் உலக நாதன் ஒரு பாட்டி பெரிய ஆளாகி விட்டார்,//


அட, நீங்க வேற அக்கா! மெட்டெல்லாம் எனக்கு வராது!

Jaleela Kamal said...

அட மொட்டு பாட்டில் தாலாட்டு ரொம்ப சூப்பர்.

Jaleela Kamal said...

http://suvaiyoesuvai.blogspot.com/

எங்க இதுக்கு கீழ் இருந்த சுவையோ சுவை பதிவு போட்டு இருந்தாங்க கானும்,

என் பிலாக், தமிழ் குடும்பம எல்லாத்தையும் காப்பி செய்து ஒரு தளம் அமைத்து இருந்தாங்களே/