பள்ளி இறுதி நாட்களில் எழுதியது!
காலங்கள் கைவிட்டு நழுவிவிடும்
கோலங்கள் உருமாறி மறந்து விடும்!
நம்பாடம் இஃதோடு மறைந்து விடும்,
தம்வீடு போதுமென்ற நினைப்பு வரும்!
பாடங்கள் மனதினின்று அகன்று, பல
வேடங்கள் கண்டு மனம் மயங்கி நிற்கும்!
தாகத்தில் உணர்விழந்து அறிவு மங்கி,
வேகங்கள் விளையாட்டு ஆரம்பிக்கும்!
சோகங்கள் கைகொட்டி சிரிக்கும் போது,
மோகங்கள் விலகிநின்று முதிர்ச்சிதரும்!
உண்மைகள் எழுந்து வந்து பேசும் பின்பு,
கண்ணிமைகள் கனவினின்று மீண்டு வரும்!
நிழலையும் நிஜத்தையும் பகுத்தறிந்தால்,
விழலிலே விழாத விதையாகலாம்!
பண்பாடும் என்மனதின் கேள்வியிது,
அந்நாளில் இந்நாட்கள் மறந்திடுமோ?!
-சுமஜ்லா.
Tweet | ||||
9 comments:
//பாடங்கள் மனதினின்று அகன்று, பல
வேடங்கள் கண்டு மனம் மயங்கி நிற்கும்!//
உண்மைதாங்க.
அந்தக் காலத்திலயே நல்ல சிந்தனைதான்.
நிழலையும் நிஜத்தையும் பகுத்தறிந்தால்,
விழலிலே விழாத விதையாகலாம்!]]
அருமை.
//நிழலையும் நிஜத்தையும் பகுத்தறிந்தால்,
விழலிலே விழாத விதையாகலாம்!
பண்பாடும் என்மனதின் கேள்வியிது,
அந்நாளில் இந்நாட்கள் மறந்திடுமோ?!//
wonderful
//நிழலையும் நிஜத்தையும் பகுத்தறிந்தால்,
விழலிலே விழாத விதையாகலாம்!
பண்பாடும் என்மனதின் கேள்வியிது,
அந்நாளில் இந்நாட்கள் மறந்திடுமோ?!//
கனவுகள் நினைவாகி நிலைத்திட வாழ்த்துகள் அக்கா....
என்ன சுஹைனா பொங்கல் ஸ்பெஷல் எதுவும் இல்லையா?பார்வையிடும் அனைவருக்கும் பொங்கல் புது வருட வாழ்த்துக்கள்.
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்: அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை: இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன: அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் - 11 ஸூரத்துல் ஹூது - 15 மற்றும் 16ஆம் வசனங்கள்).
இன்ஷா அல்லாஹ்
இறையவன் உங்களுக்கு தந்தருளிருக்கும் இந்த திறமையை வெறும் அலங்காரத்திற்கும் சுய விளம்பரத்திற்கும் பயன்படுத்தாமல், இறை பெருமை எடுத்துரைத்திட பயன்படுத்திடவேண்டும் என்பது என் போன்றவர்களின் விருப்பம். தங்களின் கடமையை உணர்ந்து இறைபணியில் இனி உங்களை ஆழ்த்திக்கொள்வதற்கே அல்லா உங்களுக்கு வழி வகைகள் செய்து கொடுத்துள்ளார். முறைப்படி அதை செய்து இறைப்பணி ஆற்றுங்கள்.
ஹமீதுல்லா
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! கொஞ்சம் ஒர்க் அதிகம்...அதான் பிஸி! இன்னும் ஒரு வாரத்தில் சற்று ஃப்ரீ ஆகி விடுவேன்.
பள்ளி இறுதி நாட்களை மறக்க முடியுமா?
பள்ளி இறுதி நாட்கள் பற்றின பதிவு அருமை
அருமையான கவிக்கு நன்றி
Post a Comment