Sunday, January 24, 2010

தமிழ் குடும்பத்துக்கு நன்றி!

எதிர்பாராத சில விஷயங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. தமிழ் குடும்பத்தின் அன்பளிப்பும் அது போலத் தான்.

திறமையுள்ள யாவரையும் ஊக்கப்படுத்தி, அவர்களின் படைப்புகளை வெளியிட்டு வரும் தமிழ்குடும்பம்.காம் இணைய தளம், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, அத்தளத்தில் நல்ல முறையில் பங்கெடுத்து தம் ஆக்கங்களைப் பதிந்த ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கியது. அதில், சாயபு வீட்டு சரித்திரம் என்னும் உண்மை சம்பவத் தொடரை 30 பாகங்களாக எழுதி நிறைவு செய்திருந்த என்னையும் பரிசு வழங்கத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அதற்கு முதலாவதாக தமிழ்குடும்பத்துக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரிசாக வழங்க, ருபாய் 500 மதிப்புள்ள புத்தகங்களைத் உடுமலை.காம் என்னும் புத்தக விற்பனைத் தளத்தில் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு மின்னஞ்சல் அனுப்பு இருந்தார்கள். அத்தளத்தில் கிட்டத்தட்ட, அனைத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களும் இருந்தன. எதைத் தேர்ந்தெடுப்பது என்று சற்றே குழம்பினாலும், நான் முதலில் தேடியது, பழம்பெரும் பெண் எழுத்தாளர் லட்சுமி எழுதிய பெண்மனம் என்னும் புத்தகத்தைத் தான்.... இது, என்னுடைய டீன் ஏஜ் நாட்களில் படித்து ரசித்து பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்த புத்தகம். கிட்டத்தட்ட ஒரு 25 முறையாவது படித்திருப்பேன். எப்படியோ தொலைந்து போயிற்று. ஒவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சியில் அதைத் தேடி அலைவேன். ம்...! ஆக, முதலில் அந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

அடுத்து, வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம். சாயபு வீட்டு சரித்திரம் எழுத எனக்கு இன்ஸ்ப்பிரேஷனே அந்த காவியம் தான். நானும், அது போல வட்டார மொழியில் எழுத ஆரம்பித்து, இடையில், படிப்பின் காரணமாக நேரமின்மையால், சாதாரண நடைக்கு மாற்றி கதையை ஒரு வழியாக முடித்தேன். விகடனில் தொடராக வந்த போது அதைப் படித்திருந்தாலும், ஒரு சில அத்தியாயங்கள் விடுபட்டுப் போயிற்று. ஆக, என்னுடைய இரண்டாம் சாய்ஸ் கருவாச்சி காவியம்.

இப்போது, பி.எட் படிப்பில், என்னுடைய பாடம் சம்பந்தமாக, ராஜேஸ்வரி எழுதிய TEACHINGS OF GENERAL ENGLISH என்ற புத்தகத்தைப் படித்து வந்தாலும், ரெஃபெரென்ஸுக்காக இவாஞ்சலின் அருள்செல்வி எழுதிய TEACHINGS OF GENERAL ENGLISH புத்தகத்தையும் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போ, எதேச்சையாக, அந்த புத்தகமும் அத்தளத்தில் பார்க்க, அட......! அதையும் சேர்த்துக் கொண்டேன்.

நாலாவது சாய்ஸ், என் மகள் மற்றும் கணவருக்கு.....! பொது அறிவு புத்தகங்கள்....., தன்னம்பிக்கைத் தலைப்புகள்....., என்று பலதையும் ஆராய்ந்தார்கள்.... இறுதியில் அவர்கள் தேர்ந்தெடுத்தது..... வீட்டில் தோட்டம் போடுவது பற்றிய புத்தகம். எங்கள் வீட்டைச் சுற்றிலும், அருமையான தோட்டம் இருந்தாலும், அதைச் சரிவர பராமரிக்கத் தெரியவில்லை. “தோட்ட நிர்வாகப் பொறுப்பாளர்கள்” என் மகளும் கணவரும் தான். ஆக, அந்த புத்தகமும் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது.தமிழ்குடும்ப நிர்வாகி, தமிழ்நேசன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஒரே வாரத்தில் புத்தகங்கள் வீட்டுக்கு வந்து விட்டன. மீண்டும் அவர்களுக்கு என் நன்றிகள்!

புத்தகங்கள் வந்து நான்கு நாட்கள் ஆகி விட்டன. ஆனால், அதைப் புரட்டக்கூட நேரமில்லை....! எம்.ஏ.எக்ஸாம்ஸ் நேற்றோடு முடிந்ததால், இன்று தான் கொஞ்சம் ஃப்ரீயாக, ஒரு வாரமாக எழுத நினைத்த இந்தப் பதிவை எழுத முடிந்தது!எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது...! தமிழ் குடும்பத்தின் இந்த ஊக்கத்தால், என் மனதில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.....! இனி, மெதுவாக, அந்த புத்தகங்களை படித்து சுவைக்க வேண்டும்..... இல்லை..... இல்லை..... சுவைத்துப் படிக்க வேண்டும்.

-சுமஜ்லா.

37 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் அக்கா.....

கிரி said...

வாழ்த்துக்கள் சுமஜ்லா

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.

gulf-tamilan said...

வாழ்த்துகள்!!!

asiya omar said...

நீங்கள் தேர்வு செய்த புத்தகங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஊர்சுத்தி சாதிக் said...

வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

நல்ல விசயம்

வாழ்த்துக்கள்

தற்போது எழுதிய தேர்விலும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

jailani said...

வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள்.

அபுல் பசர் said...

சாயபு வீட்டு சரித்திரம்.
அழகான,அருமையான பதிவு.
தமிழ் குடும்பம் பரிசு பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

பரிட்சைகள் நல்லபடியா எழுதுனீங்களா? சந்தோஷம்.

இப்பல்லாம் பதிவுகளைப் பார்த்து வாக்களிப்பதைவிட, பதிவரை வைத்துத்தான் ஓட்டு போடுகிறார்கள் போல. சிலருக்கு மைனஸா குவியுது, சிலருக்கு நம்பமுடியாத அளவுக்கு பிளஸ் ஓட்டுக்கள்!!

ம்ம்.. நடக்கட்டும்..நல்லதே நடக்கும்...

seemangani said...

பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துகள் அக்கா...
all the best for ue exams..

அரங்கப்பெருமாள் said...

வாழ்த்துக்கள் சகோதரி.

முனைவர்.இரா.குணசீலன் said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!!

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் சகோதரி!

chidambararajan said...

naala annam! nalla parisu!!!

Hyder said...

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

SUMAZLA/சுமஜ்லா said...

அன்போடு எனக்கு வாழ்த்து சொன்ன அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. பரிட்சை நல்லா எழுதி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..

Anbu Thozhan said...

கலகிட்டீங்க போங்க.... தொடர்ந்து கலக்க கனிவான வாழ்த்துக்கள்....

nidurali said...

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் -குத்திக்
காட்சி கெடு த்திடலாமோ ?
பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம்
பேதமை அற்றிடும் காணீர்.

------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய பெண்ணுக்கு (தங்களுக்கு) இறைவன் இந்த
ஞானத்தினை தந்தமைக்கு என்றும் தாங்கள் அவனைத்
தொழுது வர துவா செய்கின்றேன்.
-அன்புடன் -
அன்பு சகோதரர் முகம்மது அலி ஜின்னா,

தங்களுக்கு இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா,

இஸ்லாமிய ”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
து

aashiq said...

Assalaamu Alailkum sister,

My heart felt congrats...

SUFFIX said...

மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி!!

அதிரை அபூபக்கர் said...

தமிழ் குடும்பம் உங்களுக்கு வழங்கிய பரிசுக்கு ...வாழ்த்துக்கள்.. மாசா அல்லாஹ்..

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

Jaleela said...

வாழ்த்துக்கள் சுஹைனா, மேன் மேலும் நிறைய பரிசுகள் வாங்க என் வாழ்த்துக்கள்.

அக்பர் said...

வாழ்த்துகள் சுமஜ்லா.

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் சுஹைனாக்கா

பேனாமுனை said...

வாழ்த்துக்கள் அக்கா.....

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

பாத்திமா ஜொஹ்ரா said...

வாழ்த்துகள்.

மாதேவி said...

வாழ்த்துகள் சுமஜ்லா.

vijis kitchen said...

வாழ்த்துக்கள் சுமஜ்லா. பரிட்ஷை எல்லாம் முடிந்துவிட்டதா?

சுந்தரா said...

வாழ்த்துக்கள் சுமஜ்லா!

'ஒருவனின்' அடிமை said...

வாழ்த்துக்கள் சகோதரி!

NIZAMUDEEN said...

சில புத்தகங்கள் படிச்சுவைக்கலாம்;
சில புத்தகங்கள் படிச்சு - சுவைக்கலாம்.

பரிசு பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!