Wednesday, March 10, 2010

பாடி வாழ்க்கை - 5

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் முடியும் தருவாயில் ஏனோ ஒரு வித சோகம் மனதைக் கவ்விக் கொள்கிறது. எனக்குக் காலில் வலி வேறு...! ஆனாலும் எப்படியும் போயே தீர்வது என்று, கேம்ப் கடைசி நாளன்று, பெயின் கில்லர் எடுத்துக் கொண்டு போய் விட்டேன்.

காலையில், மனவளக்கலை புரபசர், திரு.பரமசிவன் ஐயா அவர்கள் வந்திருந்தார்கள். அவருடன் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றி கலந்துரையாடல் நடந்தது. சீஃப் கெஸ்ட்டாக, திரு.ரங்கசாமி ஐயா அவர்களும், திரு.சுவாமிநாதன் ஐயா அவர்களும் பங்கேற்றனர். இடையில் தேநீர் மற்றும் உளுந்து வடை தரப்பட்டது.


மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் தயிர் பச்சடி, தயிர் சாதம் வழங்கப்பட்டது.

மதியம் நடனப் போட்டி மற்றும் கல்சுரல்ஸ்! நடனப்போட்டியில் பங்கேற்றோர்:

குமாரி.பிரியா

குமாரி.சசிரேகா

திருமதி.மேகலா.

குமாரி.நித்யா.

நாங்க, ஒரு நாலுபேர் சேர்ந்து, அஞ்சலி படத்தின், ‘இரவு நிலவு உலகை’ பாடல் பாடினோம். அடுத்ததாக, ஒரு காமடி நாடகமும் பின், குழு நடனமும் நடை பெற்றது.

காலேஜ் சேர்மன் அவர்கள் தனது மகளுடன் வந்திருந்து பரிசுகள் விநியோகித்தார்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

எனக்குக் கிடைத்த பரிசுகள் விபரம்:

முதல் பரிசு
1.பேச்சுப் போட்டி
2.உடனடிப் பேச்சு

இரண்டாம் பரிசு
3.மிமிக்ரி
4.கண்ணைக் கட்டி வால் வரைதல்
5.ஓரங்க நாடகம்

மூன்றாம் பரிசு
6.ரங்கோலி
7.உடனடி சமையல்
8.பழமொழி கண்டுபிடித்தல்

எனக்குக் கிடைத்த அதிகப்பட்ச பரிசுகளைப் பார்த்து, பிரின்சிபால் ‘சுஹைனா, பரிசுகளைக் கொண்டு போக டெம்போ எதாவது கொண்டு வரச் சொல்லி இருக்கியா?’ என்று கிண்டலடிக்க, வெட்கத்துடனும், பெருமையுடனும் தூக்க முடியாமல் தூக்கி வந்தது வாழ்நாள் பூராவும் மறக்க முடியாத சிறுபிள்ளைத்தனமான சந்தோஷ நினைவுகள்.

மாலை பப்ஸுடன் ஐஸ்கிரீம் விநியோகிக்கப்பட்டது.

‘கனமான பரிசு கையில்
சுகமான சோகம் மனதில்’ கொண்டு பிரியா விடை பெற்றோம்.

இனி, அடுத்த வாரம், காலேஜ் டூர் 2 நாட்கள்(கேரளா) போகிறோம். போய் வந்தவுடன், சுடச்சுட உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

-சுமஜ்லா.

14 comments:

ஹுஸைனம்மா said...

ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு வருடமே என்றாலும், சந்தோஷமான கல்லூரி வாழ்க்கையையும் அனுபவித்து விட்டீர்கள். படிக்கும்போது பிள்ளைகள் வாங்கிய பரிசுகளைப் பெற்றோரிடம் காட்டுவோம்; உங்கள் பிள்ளைகளிடமே காட்டி மகிழும் பாக்கியம் உங்களுக்கு!!

வாழ்த்துக்கள்!!

நட்புடன் ஜமால் said...

பரிசுகளுக்கு வாழ்த்துகள்!

-------------

நேந்திரத்தோடு வந்து பகிருங்கோ

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜமா பரிசுகளைக் கொண்டு வந்து என் பிள்ளைகளிடம் காட்டிய போது அடைந்த சந்தோஷம் ரொம்ப ரொம்ப பெரிசுங்க!

//நேந்திரத்தோடு வந்து பகிருங்கோ//

நேரத்தோடா? நேந்திரத்தோடா?

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//பரிசுகளைக் கொண்டு போக டெம்போ எதாவது கொண்டு வரச் சொல்லி இருக்கியா?’

மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள் கேரளா சுற்றுலாவுக்கும் ......

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சுஹைனா, பரிசுகளைக் கொண்டு போக டெம்போ எதாவது கொண்டு வரச் சொல்லி இருக்கியா?’ //

ஹா... ஹா...
ஒரு டெம்போவையும்
பரிசாகத் தந்திருந்திருக்கலாம்.

SUMAZLA/சுமஜ்லா said...

//ஹா... ஹா...
ஒரு டெம்போவையும்
பரிசாகத் தந்திருந்திருக்கலாம்.//

சூப்பர் அண்ணே! அவங்க காதுல விழுகறாப்ல கொஞ்சம் சத்தமா சொல்லுங்க!

hayyram said...

உங்கள் முகத்தை யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று நினைக்கும் நீங்கள் மற்ற பெண்களை இப்படி இனையத்தில் உலவ விட்டிருப்பது அத்துமீறல் இல்லையா. இந்த முகங்களை யாரேனும் தவறாக உபயோகப்படுத்த மாட்டார்களா? நீங்கள் அவர்களது அனுமதியுடன் தான் இங்கே பிரசுரித்தீர்கள் என்றாலும் அதனால் ஏதேனும் பின்விளைவுகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்றாவது அந்த இளம் பெண்களுக்குத் தெரியுமா? உங்கள் முகத்தில் நீங்கள் காட்டும் அக்கரை மற்றவர்கள் விஷயத்திலும் இருக்க வேண்டும். மதங்களுக்கு அப்பால்!

anbudan
ram

www.hayyram.blogspot.com

SUMAZLA/சுமஜ்லா said...

நண்பர் ராமுக்கு,

அவர்கள் அனுமதியுடன் என்பது தவறு! அவர்கள் விருப்பத்துடன் கேட்டுக்கொண்டதால் என்பது சரி! நாம் பொதுவாக, நம் புகைப்படம் செய்தித்தாளில் வருவதை விரும்புவோமல்லவா? அதைப் போல, இணையத்தில் வெளியிட என்றே போஸ் கொடுத்தார்கள். தங்கள் அன்புக்கு நன்றி!

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்

Asiya Omar said...

வாழ்த்துக்கள் சுஹைனா,அப்படியே பரிசுப்பொருட்களின் போட்டோவை இணைத்திருந்தால் நாங்களும் கண்டு மகிழ்ந்து இருப்போம்.இதற்குள் ஒரு வருடம் முடியப்போகிறதா?எவ்வளவு வேகமாக நாட்கள் செல்கிறது?

SUMAZLA/சுமஜ்லா said...

//அப்படியே பரிசுப்பொருட்களின் போட்டோவை இணைத்திருந்தால் நாங்களும் கண்டு மகிழ்ந்து இருப்போம்.இதற்குள் ஒரு வருடம் முடியப்போகிறதா?எவ்வளவு வேகமாக நாட்கள் செல்கிறது?//

தங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா!

அட, ஆமா, ஏன் இது எனக்குத் தோணல? ஒரு வேலை, இந்த தட்டு முட்டு சாமானுக்கா, இந்த குதிகுதிக்கிறாங்கன்னு யாரும் நினைச்சிரக்கூடாதுன்னா??? மே 26 அல்லது 27 எக்ஸாம் ஆரம்பித்து, ஜூன் 10 வரை நடக்கும் போல் உள்ளது. அது வரை காலேஜ் இருக்கும்.

கிரி said...

வாழ்த்துக்கள் சுமஜ்லா .. இவ்வளோ பரிசா! நானெல்லாம் ஒண்ணு கூட வாங்கினதில்ல

ஜெய்லானி said...

டாப் டென் நில் நீங்களும் ஒருவர்தான். பார்க்கவும், என் வலைமனை
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_14.html.

இப்னு அப்துல் ரஜாக் said...

என்ன மிமிக்ரி பண்ணுனீங்க,அக்கா