Saturday, June 26, 2010

இணையத்தில் பணம் சம்பாதிக்க...

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால், அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது.

உங்களுக்கு ஆங்கில அறிவு இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே!

இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். ‘தொலைக்காட்சியின் பயன்கள்’ என்ற தலைப்பு என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தெரிந்தால் எழுதித் தருவீர்கள், அல்லது தெரிந்தவர்களிடம் எழுதி வாங்குவீர்கள். அப்படி யாருக்குமே தெரியாவிட்டால் என்ன செய்வீர்கள்???

ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, எம்டர்க் டாட் காம் சென்று கட்டுரையின் தலைப்பு, தேவைப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதற்கு நீங்கள் தர சம்மதிக்கும் தொகை சுமாராக ஒரு நூறு ருபாய்கள் என்று கொடுத்து, க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டால் போதும், உலகின் எந்த மூலையில் இருந்தாவது யாராவது ஒருவர் அதை உங்களுக்காக எழுதித் தந்து விடுவார்கள். பணம் அவருடைய் கணக்கில் சேர்ந்து விடும். இதற்கு ஒரு சிறு தொகையை நீங்கள் அத்தளத்துக்கு கமிஷனாக செலுத்தினால் போதும்.

இப்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல், ப்ராடக்ட் ரிவ்யூ, ஆடியோ ட்ரான்ஸ்க்ரிப்ஷன், இமேஜில் குறைகள் கண்டுபிடிப்பது, வெப்சைட் பற்றி கமெண்ட் எழுதுவது என்று பல விதமான ஒர்க் வரும். ஒவ்வொரு நாளும் புதுவிதமன ஒர்க்களைப் பார்க்கலாம். சும்மா க்ளிக் செய்வதற்குக் கூட சிலர் பணம் கொடுக்கிறார்கள். காரணம், கூகுள் சர்ச் இன்ஞின் போய் அவர்களுடைய தளத்தைக் க்ளிக் செய்தால், அவர்களுடைய ரேங்க் ஏறும். இதற்கு நமக்கு பணம் தருகிறார்கள்.

சரி இப்போது கணக்கு துவங்குவது எப்படி என்று பார்ப்போம். www.mturk.com போய் worker என்ற லின்க்கில் நம் விவரங்களைக் கொடுத்து கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். துவங்கிய உடனே hits என்ற லிங்க்கை அழுத்தி எந்த விதமான வேலைகள் இருக்கின்றன என்று பார்த்து நமக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து செய்ய ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஒர்க்குக்கும் ஒவ்வொரு விதமான தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதோடு, எவ்வளவு மணி நேரத்துக்குள் அதை முடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருப்பார்கள்.

நாம் ACCEPT என்று இருப்பதைக் க்ளிக் செய்து ஒர்க் முடித்தவுடன் SUBMIT கொடுக்க வேண்டும். நாம் செய்து முடித்த வேலையை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து ஓக்கே கொடுத்தால் மட்டுமே நம் கணக்கில் பணம் சேரும். REJECT செய்து விட்டால் பணம் கிடைக்காது. அவர்கள் எதிர்பார்த்தது இல்லாவிட்டாலோ, ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப்பிழை இருந்தாலோ மட்டுமே REJECT செய்வார்கள்.

நாம் செய்து முடித்த ஒர்க்களை HIT என்று சொல்கிறோம். HIT APPROVAL RATE என்பது, நூற்றுக்கு எத்துணை ஒர்க்கள் நாம் சக்ஸஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறோம் என்று காட்டும். அதை 95 சதவீதத்துக்கும் மேல் இருக்கும்படி வைத்துக் கொண்டால், நல்ல ஒர்க்கள் நிறைய வரும். நாம் எடுத்த ஒர்க்கை நம்மால் செய்ய முடியாமல் போனால், அதை ரிடர்ன் செய்து விடலாம். அப்படி ரிடர்ன் செய்யாமல், அதை அப்படியே விட்டு விட்டால், அது ABANDONED என்று காட்டும்.

சரி, ஒர்க் எல்லாம் நல்லபடியாக நிறைவு செய்து ஓரளவுக்கு கணக்கில் பணம் சேர்ந்து விட்டது. அந்தப் பணத்தை எப்படி எடுப்பது? எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய ருபாயிலேயே செக் வந்து விடும். ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் ப்ராஸசிங் கட்டணமாக 4 டாலர் பிடித்துக் கொள்வார்கள். ஆனால், பணத்தை முதல்முறை எடுக்கும் முன்பாக, நாம் பாஸ்போர்ட், வோட்டர்ஸ் ஐடி, பேன் கார்டு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். அந்த நபர் நாம் தான் என்பதற்கு நாம் தரும் அத்தாட்சி இது. அதோடு, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்ய இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள்.

இப்ப எங்களுக்கு புரிந்தது...ஆனால், நீ இதுவரை எவ்வளவு சம்பாதித்து இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா??? எனக்கு இது பற்றி முன்பே தெரியும் என்றாலும், நேரமின்மையால் இதில் இறங்கவில்லை. தற்போது ஒரு பதினைந்து நாட்களாகத்தான் கணக்குத் துவங்கி செய்து வருகிறேன். என் பெயரில் ஒன்றும் என்னவர் பெயரில் ஒன்றுமாக இரண்டு கணக்குகளில் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தினமும் ஓரிரு மணி நேரம் மட்டுமே செய்வதால், மொத்தமாக 80 டாலர்கள் சேர்ந்துள்ளன. கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்...
இதில், Total Earning, Your Hit Status, Hits Total, Hits Available to You ஆகியவற்றைப் பார்த்தால், நான் சொன்ன கான்செப்ட் சுலபமாகப் புரியும். இதில் affiliation எல்லாம் கிடையாது. நேரடியாக அத்தளத்துக்கு சென்று கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். எங்கள் ஊரில் ருபாய் 3000 பெற்றுக் கொண்டு இதில் கணக்குத் துவங்கித் தருகிறார்கள். அது போன்ற ஆட்களை நம்பி யாரும் ஏமாந்து விடக் கூடாது. எம்டர்க்கில் நீங்களும் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்!

-சுமஜ்லா.

23 comments:

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி... நல்ல பகிர்வு

SUFFIX said...

Welcome back!! இது போன்ற நிறைய விளம்பரங்கள் பார்த்ததுண்டு, உண்மையாக இருக்குமோ என சந்தேகம் வரும். தங்களின் இந்தப் பதிவு சந்தேகத்தை தெளிவு படுத்திவிட்டது, இன்னும் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜெய்லானி said...

ஷாஃபியின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். சில பயங்களும் இருந்தன. முயற்சிக்கிரேன். மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

ஆனால், நீ இதுவரை எவ்வளவு சம்பாதித்து இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா??? ]

இது இதுதான் உடனே தோன்றிற்று

:)

hamaragana said...

மிக்க நன்றி நண்பரே என் போன்ற வர்களுக்கு நல்ல தகவல்

Chitra said...

This is post is very interesting to read. Thank you for giving us some good suggestions. :-)

சி.பி.செந்தில்குமார் said...

அட,புதுசா இருக்கே,குட்,வாழ்த்துக்கள்

Riyas said...

//இது போன்ற நிறைய விளம்பரங்கள் பார்த்ததுண்டு, உண்மையாக இருக்குமோ என சந்தேகம் வரும். தங்களின் இந்தப் பதிவு சந்தேகத்தை தெளிவு படுத்திவிட்டது, இன்னும் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.//

நானும்தான்..

Asiya Omar said...

நல்ல செய்தி,சம்பாதிக்கிற அளவிற்கு எல்லாம் நமக்கு திறமை கிடையாதுங்க.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

என்னுடைய மேடம் மெஹ்ராஜுன்னிஸா என்பவர் நான் சொல்லி ஒர்க் செய்து, இதுவரை 318 டாலருக்கான செக் பெற்று விட்டார். அவரும் எங்க ஊர் தான்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீங்களேதான் 80 டாலர்கள் சம்பாதித்து
விட்டீர்கள், மெஹ்ராஜ் மேடம் அவர்களும்
318 டாலர்கள் செக் பெற்றுவிட்டார்கள்.
ஆக, நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான்
என்பதற்கு இன்னும் சான்று தேவையில்லை.
நல்ல (வருமான) இடுகை!

சீமான்கனி said...

உபயோகமான இடுக்கைதான் கூகுள் ஆட்சென்ஸ் பற்றி ஒண்ணுமே புரியாம இருந்தேன் இப்போ புரிய வச்சுடீங்க...நன்றி...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நல்லதகவல் ....வேலையில் சேர்ந்தாச்சா அக்கா? ..

வால்பையன் said...

பயனுள்ள பதிவு, ஆங்கிலம் தெரியாததால் தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்!

ரீடரில் ஷேர் பண்ணிவிட்டேன்!

தமிழ் பொண்ணு said...

எல்லாம் நல்ல எழுதி இருக்கீங்க .இதுல Qualification test and return hit பத்தி சொல்லாம்.

ok naan solren ethula sila hits ku namaku appprove erukathu.because naama oru qualification test amazon conduct pannum.athula naama 100 ku evolo nu sollum.athu thaan nammaloda score.athu pass or not qualify nu sollum.pass means hit pannalam.not qualify means no chance to work on this hit.ethula return hit means namaku antha work pidikalana return hit kudukalam.and rejection rate kammiyachuna accout close panniruvanga.

தமிழ் பொண்ணு said...

etula worker halted for 5minutes and sort by,dash board ,accept captcha ,qualifications join panni solli erukalam

லதானந்த் said...

அன்புடையீர்!
நேரம் கிடைக்கும்போது என்னுடைய மாநாட்டுரையைப் படிக்கவும். தங்களைப் பற்றிய ஒரு குறிப்பு அதில் உள்ளது

Unknown said...

Don't believe this. Check for youreself at the following URL
http://www.consumercomplaints.in/?search=mturk

Admin said...

மிகவும் பயனுள்ள பதிவு. முயற்சி செய்து பார்க்கிறேன்.

இதையும் பாருங்க:
ப்ளாக்கர் டிப்ஸ்

GENUINE ONLINE DATA ENTRY said...

Sir,I have opened an account in mturk.but most of them reward me just 0.01 cents.please tell me which job should i select.

naliya said...

thankyou very much 4 ur information. i am nw working in online. i have got some rewards. but i dont know what i have 2 do 2 receive my money.pls can u explain me?

Unknown said...

தோழி நன் இப்போது எனது பெரியம்மா பெயரில் கணக்கு துவங்கி mturkil வேலை செய்து வருகிறேன்.இப்போது பிரச்சனை என்னவென்றால் நான் அட்ரஸ் location us என்று போட்டுளேன். ஏனெனில் இந்திய என்று கொடுத்தால் not qualified என்று வருகிறது.எனவே தான் location us என்று மாற்றியுள்ளேன்.இனி ஓரளவுக்கு பணம் செய்தவுடன் அதை நமது addressku மாற்றினால் நாம் mturkil செய்த பணத்தை பெற முடியுமா?
மேலும் எனக்கு ஓரளவுக்கு தான் ஆங்கிலம் தெரியும்.அப்படி இருந்தும் 40 ஹிட்ஸ் submit செய்து 3usd வரை சம்பாதித்துள்ளேன் .எனவே நண்பர்களே ஒரு டாலர் or ரெண்டு டாலர் மதிப்புள்ள ஹிட்ஸ் வொர்க் எல்லாம் எப்படி செய்வது என்று யூடுபில் மூலமாக சொல்லுங்களேன். என்னை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.எனக்கும் தெரிந்த ஹிட் எல்லாம் உபயோகத்தில் இருக்கும்போதே youtube மூலமாக சொல்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

யூ.எஸ். என்று கொடுத்துவிட்டால் இந்தியாவில் பணம் பெறமுடியாது. முகவரி மாற்றம் செய்யலாம் நாடு மாற்ற முடியாது. இது பற்றி விவரம் எனக்குத் தெரியாது. இப்போது நான் இதில் செய்வதில்லை. எனக்கு நேரமும் இல்லை. அது என் வேலையும் இல்லை.