காப்பியடிப்பதால் என்ன தீங்குகள் விளையும் என்று தெரிந்து கொண்டால் இணையத்தில் யாரும் யாருடைய குறிப்புகளையும் காப்பியடிக்க மாட்டார்கள். ஏன் ஒவ்வொரு தளமும் தனக்கென் தனியான உள்ளடக்கத்தை எழுத வேண்டும்? உள்ளடக்கம் எழுத வேண்டும் என்றால் நிச்சயமாக பணம் செலவு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு தளத்தில் இரவு உடைகள் விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இரவு உடைகளைப் பற்றிய செய்திகளையும் நன்மைகளையும் அத்தளத்தில் பட்டியலிட்டிருப்பார்கள். அதை அவர்கள் இன்னொரு தளத்தில் இருந்தே எடுத்திருக்கலாமே? ஏன் தனக்கெனத் தனியாக ஒன்று நேரமும் பொருளும் செலவு செய்து உருவாக்க வேண்டும்? Uniqueness எனப்படும் தனித்தன்மை இருந்தால் மட்டுமே இணையத்தில் வெற்றி காண முடியும். உங்கள் தளத்தின் மதிப்பு இந்த தனித்தன்மையைக் கொண்டு தான் அளவிடப்படுகின்றது.
ஒரு தளத்தை நாம் பார்வையிட வேண்டுமென்றால் அதற்குரிய கீ வோர்ட்ஸ் எனப்படும் சாவிச்சொற்களை கூகுளில் உள்ளீடு செய்வோம். உதாரணமாக நாம் சமையல் குறிப்பில் ஒன்றான செட்டிநாட்டு மீன்குழம்பு என்பதைக் கண்டு பிடித்து செய்ய வேண்டும் என்றால், நாம் கூகுளில் ‘செட்டிநாட்டு மீன்குழம்பு’ என்றோ, ‘மீன்குழம்பு செட்டிநாடு’ என்றோ ’சுவையான மீன்குழம்பு செய்முறை’ என்றோ உள்ளீடு செய்வோம். இவை தான் சாவிச் சொற்கள். இது போல ஒவ்வொரு தளத்துக்கும் சில சாவிச் சொற்கள் இருக்கும்.
ஒருவர் ஒரு தளத்தைத் தொடங்கும் போதே தமக்கான சாவிச்சொற்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது என்ன மாதிரியான சொற்களை மக்கள் கூகுளில் உள்ளீடு செய்தால் நம்முடைய தளம் தெரிய வேண்டும் என்று எண்ணுகிறோமோ அவை தான் சாவிச்சொற்கள். ஒருவர் ஆன்லைன் வியாபாரத்துக்கு என தளம் தொடங்கும் போதே தமக்கான சாவிச்சொற்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சரியான சாவிச்சொற்கள் தேர்ந்தெடுத்துத் தர என்றே பல மென்பொருட்கள் உண்டு.
நாம் கூகுளில் நமக்கு வேண்டியவற்றைத் தேடும் போது மில்லியன் கணக்கான தளங்கள் நம் முன் தோன்றும். எத்துணை தளங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்ற என்பதும் கூகுள் சொல்லிவிடும். ஒரு குறிப்பிட்ட சாவிச்சொற்களுக்கு அதிக அளவிலான தளங்கள் பட்டியலிடப்படும் போது அச்சாவிச்சொற்களுக்கு கிராக்கி அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம். அது அதிக வருவாயைத் தரும் சாவிச்சொல். அதனால் தான் அதிகம் பேர் அச்சொல்லுக்கு போட்டி போடுகிறார்கள். சில சொற்களுக்கு மொத்தத் தளங்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். இப்போது அச்சொல்லுக்கு கிராக்கி குறைவு என்றும் அச்சொல்லால் அதிக வருமானம் பெற முடியாது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நம்முடைய தளமும் அச்சொல்லுக்கு போட்டி போடுகிறது என்று வைத்துக் கொள்வோம். நம் தளம் 100வது இடத்திலோ 250வது இடத்திலோ இருந்தால் யாரும் அதைப் பார்வையிட மாட்டார்கள். நீங்கள் கூகுளில் தேடும் போது முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் தளங்கள் முதல் பக்கத்தில் தெரியும். அதில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் தளங்களையே நீங்கள் க்ளிக் செய்து பார்ப்பீர்கள். அதில் திருப்தி அடையாவிட்டால் மற்ற தளங்களைப் பார்ப்பீர்கள். அரிதாகத்தான் இரண்டாவது அல்லது மூன்றாவது பக்கத்துக்குச் செல்வீர்கள். ஆக உங்கள் தளம் 100வது இடத்திலோ 200வது இடத்திலோ இருந்தால் யாரும் பார்வையிட மாட்டார்கள். ஆக, உங்கள் தளத்தை முதல் பக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும். வியாபார நோக்கத்தில் இணைய தளம் வைத்திருக்கும் அனைவரின் கனவும் இது தான். இதை எப்படி அடைவது?
அதிக கிராக்கி உள்ள சாவிச்சொற்களை நமக்குத் தேர்ந்தெடுத்தால் நல்ல வருமானம் வரும் தான். ஆனால், அதிக கிராக்கி உள்ள சொற்களுக்கு நீங்கள் 100வது இடத்தைப் பெறுவதைக் காட்டிலும், குறைந்த கிரக்கி உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து முதல் பக்கத்தில் இடம் பிடிப்பதையே அனைவரும் விரும்புவார்கள். நமக்கான சாவிச்சொற்களாக ஆறு சொற்களைத் தேர்ந்தெடுக்கிறோமென்றால், அதில் மூன்று சொற்கள் குறைந்த கிராக்கி கொண்டதாகவும் மூன்று சொற்கள் அதிக கிராக்கி கொண்டதாகவும் தேர்ந்தெடுக்கலாம். சுலபமாக மூன்று சொற்களுக்கு தேடல் பொறி உகப்பாக்கம் செய்த பின் மற்ற மூன்று கடினச் சொற்களுக்கு உகப்பாக்கம் செய்ய பாடுபடலாம். தேடல் பொறி உகப்பாக்கம் அதாவது search engine optimization செய்வது எப்படி? அதை பின்னால் பார்க்கலாம்.
இப்பொழுது நம் தளத்தின் சாவிச்சொற்களில் செட்டிநாட்டு மீன்குழம்பு என்பதும் ஒன்று என்று வைத்துக் கொள்வோம். தேடும் நபர் அதை கூகுளில் தேடும் போது வரிசையாக தளங்கள் பட்டியலிடப்படும். அதில் தனித்தன்மையுள்ள தளங்களே முதல் பக்கத்தைப் பிடிக்க முடியும். காப்பி செய்யப்பட்ட உள்ளடக்கம் கொண்ட தளங்கள் எக்காரணம் கொண்டும் தனித்தன்மை உள்ள தளங்களை முந்திச் செல்ல முடியாது. ஒன்று போல் உள்ளடக்கம் கொண்ட் இரு தளங்கள் இருந்தால், நமக்குத் தெரியாது எதில் இருப்பது ஒரிஜினல், யார் யாரைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்று. ஆனால் கூகுளுக்குத் தெரியும். நீங்கள் அந்த உள்ளடக்கத்தைப் பதிப்பித்த தேதியை வைத்து அது அறிந்து கொள்ளும். ஆக, உங்கள் பேஜ் ரேங்க் அத்தளத்தின் பேஜ் ரேங்கை விட உயர்ந்திருக்கும். காப்பியடிக்கும் தளத்தின் பேஜ் ரேங்க் எப்போதுமே குறைவாகத்தான் இருக்கும். பேஜ் ரேங்க் என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படுகின்றது? தேடல் பொறி உகப்பாக்கம் செய்து நம் தளத்தை முதல் இடத்துக்குக் கொண்டு வருவது எப்படி? இவற்றை அடுத்த பதிவில் காணலாம்.
-சுமஜ்லா.

Tweet | ||||
14 comments:
நீண்ட நாள் கழித்து வந்தாலும்(லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான தகவலோடு)நல்ல தேவையான செய்தி தந்து - வருகை புரிந்துள்ள சுமஜ்லா அக்காவே வருக,இன்னும் பல கட்டுரைகள தருக என வேண்டும் உங்கள் சகோதரி
எல்லோருக்கும் தேவையான விஷயத்தை சொல்லியிருகிங்க,
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
நீண்ட இடைவெளிக்கு பின் பதிவிட்டு ஒரு நல்ல பதிவை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி
நல்ல தெளிவான விளக்கம் சுஹைனா! தொடருங்க.. //மாதம் நான்கு பதிவுகள் போடணும் என்று இருக்கிறேன்// இதுபோல் நீங்க நான்கு பதிவுகள் போட்டால் எங்களுக்கு 400 பதிவுகள் மாதிரி யூஸ்ஃபுல்லாதான் இருக்கும் :) வாழ்த்துக்கள்!
தெளிவாகவும் விளக்க்மாகவும் இருக்கின்றது.
தொடருங்கள்.
எல்லாருக்கும் தேங்க்ஸ்ங்க. அஸ்மா தங்கள் அன்பு அளவிட முடியாதது. SEO சம்பந்தப்பட்ட துறையில் தான் நான் வேலை செய்கிறேன்.
தேவையான தகவல்கள் வாழ்த்துக்கள் ....
good.i have read your book.i have still doubts about promoting a blog
அஸ்ஸலாமு அலைக்கும்.
நல்ல பதிவு
சுமார் 7 மாதங்கள்... தேவை புதிய பதிவு.
பிந்தி வந்தாலும் பயனுள்ள தகவல்களைப் பெற்றேன் ரொம்ப நன்றி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
அவ்வப்போது வரலாமே?
சுமஜ்லா மேடம் அவர்களுக்கு ஒரு வருடம் முன்பு "நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்" என்ற உங்களது புத்தகத்தை படித்து அதன்படி sasiboojium.blogspot.com என்ற ஒரு வலைப்பூவை தொடங்கி, நடத்தி கொண்டு உள்ளேன் என்பதை நன்றியோடு தெரிவித்து கொள்கிறேன் - சசி
Post a Comment