Wednesday, June 24, 2009

பிரயத்தனம்


நீ கோபமாய் இருப்பதை
எனக்குக் காட்ட
பகீரத பிரயத்தனம் செய்வது
புரிகிறது புருஷா!

தட்டி எழுப்பாமல்,
காதருகே
அலாரம் வைக்கப்பட்ட
‘செல்’லை விட்டு செல்வதும்,

காப்பி போடும் சாக்கில்,
அடுப்பங்கரையில்
அசால்ட்டாக பாலை சிந்துவதும்,

எதையோ தேடும் சாக்கில்,
எல்லாவற்றையும் இழுத்து
நடு ஹாலில் போடுவதும்,

ஹோட்டலில் மொக்கிவிட்டு,
பட்டினி கிடப்பதாய்
என்னை நம்பவைத்து
என் உள்ளத்தின் தவிப்பை
நானறியாமல் ரசிப்பதும்,

உன்னுடன் பயணிக்கையில்,
ஸ்பீடு பிரேக்கரில்
பிரேக்கடிக்காமல்
என்னைக் கலங்கடிப்பதும்,

சீரியல் பார்க்கவிடாமல்,
டி.வி. முன் அமர்ந்து
அழிச்சாட்டியம் செய்வதும்,

ஒரு வாய் நீர் குடிக்கப்பட்ட,
பிரிட்ஜ் பாட்டில்களை
மூடி திறந்த நிலையில்
ஆங்காங்கே அநாதையாக்குவதும்,

இரவில் நான் தூங்கும்வரை
வெகுநேரம் டி.வி. முன் அமர்ந்து,
இலக்கின்றி சலிக்காமல்
சேனல் மாற்றிக் கொண்டே இருப்பதும்,

பக்கத்தில் படுத்திருந்தாலும்
வேண்டுமென்றே நடுவிலொரு
தலையணை வைத்துக் கொள்வதும்,

நீ கோபமாய் இருப்பதை
கடும் பிரயத்தனப்பட்டு
எனக்குக் காட்ட,
நீ செய்யும் அலப்பரை
புரிகிறது என் புருஷா!

-சுமஜ்லா.

இதன் தொடர்ச்சி: http://sumazla.blogspot.com/2009/06/blog-post_27.html

23 comments:

Menaga Sathia said...

சூப்பரான கவிதை,நச்சுனு இருக்கு!!

அப்துல்மாலிக் said...

எல்லோரும் எல்லாயிடத்துலேயும் அப்படித்தானோ??

நல்லாயிருக்கு

S.A. நவாஸுதீன் said...

தட்டி எழுப்பாமல்,
காதருகே
அலாரம் வைக்கப்பட்ட
‘செல்’லை விட்டு செல்வதும்,

பாவம், நல்லா தூங்கட்டும்னு விட்டுருப்பார்

S.A. நவாஸுதீன் said...

பாவம் உங்களவர். அவருக்கு கோபம் வரவச்சிட்டு அதை கவிதையாவும் கொடுத்துட்டீங்க. சரிதான்
யாராவது இதுக்கு எதிர் கவிதை போட்டே ஆகணுமே. Shafi Where r u? ஸ்டார்ட் மியூசிக்

Barari said...

anubavaththin velippaado?

SUFFIX said...

இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் சொல்ரத நேரா சொல்ல மாட்டாங்க....பொம்பளைங்க மாதிரி!! (ஜூட்....)

SUFFIX said...

//சீரியல் பார்க்கவிடாமல்,
டி.வி. முன் அமர்ந்து
அழிச்சாட்டியம் செய்வதும்,//

இதுவாவது பரவாயில்லை சில பேர் ரிமோட்டை ஒழிச்சு வச்சுடுவாங்களாம் (அது யாரோ சில பேர்!!)

SUMAZLA/சுமஜ்லா said...

அய்யய்யோ இது என்னோட அனுபவம்னு எந்த இடத்திலும் சொல்லலைங்க!

//பாவம், நல்லா தூங்கட்டும்னு விட்டுருப்பார்.//

தொட்டு எழுப்பிட்டா விரதம் கலைந்துவிடுமே?!

//யாராவது இதுக்கு எதிர் கவிதை போட்டே ஆகணுமே//

போடுங்கப்பா யாராவது, பெண்ணினத்தை எந்த அளவுக்கு புரிந்து வெச்சிருக்கீங்க பார்க்கலாம்...

//இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் சொல்ரத நேரா சொல்ல மாட்டாங்க....பொம்பளைங்க மாதிரி!! (ஜூட்....)//

அவ்வளவு பயம் இருக்குதுல்ல?!

//இதுவாவது பரவாயில்லை சில பேர் ரிமோட்டை ஒழிச்சு வச்சுடுவாங்களாம் (அது யாரோ சில பேர்!!)//

அது என்ன யாரோ சிலர்? நீங்க ரொம்ப நல்லவர்னு காட்டிக் கொள்ளும் முயற்சியோ?!

SUMAZLA/சுமஜ்லா said...

மேனகா, நம்மினத்தின் சார்பா எதாவது எழுதாட்டா எப்படி?

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஊடல் சண்டைகளை கண்முன் காட்சியாக கவிதையாக வடித்து விட்டீர்கள்.

//
ஹோட்டலில் மொக்கிவிட்டு,
பட்டினி கிடப்பதாய்
என்னை நம்பவைத்து
என் உள்ளத்தின் தவிப்பை
நானறியாமல் ரசிப்பதும்,

உன்னுடன் பயணிக்கையில்,
ஸ்பீடு பிரேக்கரில்
பிரேக்கடிக்காமல்
என்னைக் கலங்கடிப்பதும்,

பக்கத்தில் படுத்திருந்தாலும்
வேண்டுமென்றே நடுவிலொரு
தலையணை வைத்துக் கொள்வதும்,
//

மிகவும் ரசிக்க வைத்த வரிகள்.

//
நீ செய்யும் அலப்பரை
புரிகிறது என் புருஷா
//

அழகாக முடித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

mycollections said...

நல்லா இருக்கு உங்க கவிதை
உங்களில் இருக்கிற அன்பில் தான் உங்க புருஷன் அமைதி யுத்தம் செய்கிறார்

கவிக்கிழவன் said...

நல்லா இருக்கு உங்க கவிதை
உங்களில் இருக்கிற அன்பில் தான் உங்க புருஷன் அமைதி யுத்தம் செய்கிறார்

asiya omar said...

அனைவரும் ரசிக்கும்படி எதையும் எழுதும் திறமை தான் அருமை.என்ன எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி தெரிகிறது.

Biruntha said...

ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவியிடம் பேசாமலிருக்கும்போது நடந்து கொள்ளும் விதத்தை அழகான கவிநடையில் வரைந்துள்ளீர்கள். எல்லா வரிகளுமே அழகாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளன.
பொண்டாட்டிகிட்ட கோபமா இருக்கும்போதுதான் ஆண்கள் ரொம்ப திமிரா நடந்துக்குவாங்க. நான் அப்பொழுதுதான் என்னவர் என்னை வெறுப்பேற்றுவதற்காகச் செய்யும் செயல்களை அவர் கவனிக்காத வண்ணம் ரசிச்சு எனக்குள் சிரிப்பேன். அதிலும் ஒரு தனி சுகம் இருக்கும்.

அன்புடன் பிருந்தா

நசரேயன் said...

சண்டை முடிஞ்சு போச்சா ?

SUMAZLA/சுமஜ்லா said...

//எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஊடல் சண்டைகளை கண்முன் காட்சியாக கவிதையாக வடித்து விட்டீர்கள்.//

ஊடல் - ஊடிய பின்னே
வாடல் - அதன் முடிவில்
கூடல்!

இது எல்லார் வீட்டிலும் நடப்பது தானே!

//சண்டை முடிஞ்சு போச்சா ?//

ஆஹா, அடுத்தவர் கதையை தெரிந்து கொள்வதில் எவ்வளவு ஆர்வம்.

//என்ன எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி தெரிகிறது.//

அட, உங்க வீட்டிலுமா?

//என்னவர் என்னை வெறுப்பேற்றுவதற்காகச் செய்யும் செயல்களை அவர் கவனிக்காத வண்ணம் ரசிச்சு எனக்குள் சிரிப்பேன். அதிலும் ஒரு தனி சுகம் இருக்கும்.//

நிச்சயமாக அந்த சுகத்துக்காகவே சிலசமயம், ஊடலை வளர்த்துவது உண்டு தானே?!

Jaleela Kamal said...

எல்லாத்தையும் கரெக்டா புட்டு புட்டு வைத்து இருக்கீங்க‌
அதுவும் கவிதை வடிவில்.. ரொம்ப ஜோர்

"உழவன்" "Uzhavan" said...

கோபத்தில் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிக அழககாக சொல்லியுள்ளீர்கள்.. அவர் செய்யும் ஒவ்வொன்றையும் நன்கு ரசித்திருக்கிறீர்கள்..
அழகு அருமை அட்டகாசம் :-)

ம்ம்ம்.. அதுமட்டுமில்ல.. இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணலாம்னு எங்களுக்கு ஐடியாவேற குடுத்துருக்கீங்க...:-)

SUMAZLA/சுமஜ்லா said...

//அவர் செய்யும் ஒவ்வொன்றையும் நன்கு ரசித்திருக்கிறீர்கள்..//

நான் எழுதியது பொது விஷயம்; இதில் ஒரு சிலது அவர் செய்ய மாட்டார், ஆனால், சொல்லாத சிலதை செய்வார். அதெல்லாம் பர்ஸனல்.

//இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணலாம்னு எங்களுக்கு ஐடியாவேற குடுத்துருக்கீங்க...:-)//

மிஸஸ் உழவன், பூரிக்கட்டையைத் தூக்கிக்கிட்டு, என்னைத் தேடிக்கிட்டு இருக்காங்களாம்.

SUFFIX said...

ஆம்பிள சிங்கங்கள் சார்பா ஒரு எதிர்க்கவிதை போட்டாச்சு...வாங்க‌ அக்கா!!
http://shafiblogshere.blogspot.com/

SUMAZLA/சுமஜ்லா said...

ஷஃபி, உங்க ப்ளாக்ல கொடுத்திருக்கற கமெண்ட்டப் பாருங்க.

SUFFIX said...

இதோ இருக்கு அக்கா லின்க், இன்னும் தெளிவா சன்டை போடலாம் http://shafiblogshere.blogspot.com/2009/06/blog-post_27.html

சிநேகிதன் அக்பர் said...

எளிமையான வரிகள். இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.

அதெப்படி, பதில் கோபம் கூட உங்களுக்கு கவிதையா வருது.

உங்களுக்கு கோபம் வந்தா என்ன செய்வீங்க.