Tuesday, August 18, 2009

2025 ல் கம்ப்யூட்டர்

(கம்ப்யூட்டர்னா என்னங்க? - இதை பின்னூட்டத்தோடு படித்து விட்டு படித்தால் சுவையாக இருக்கும்.)

2012ல்

“இப்ப எவ்ளோ சவுகரியம். மோடமே தேவையில்ல. எல்லா இடமும் வை ஃபி ஜோன் ஆயிருச்சு. எந்த இடத்துல வேண்டுமானாலும் லேப் டாப்ல நெட் அக்ஸெஸ் பண்ணிக்கலாம்.”

“யெஸ்! ஜஸ்ட் பாஸ்வோர்டு போதும்!”

2015ல்

தலைப்பு செய்தி: புதிய கண்டுபிடிப்பால், உலகமே மிரண்டு போயிருக்கிறது. எங்கும் சூடான விவாதங்கள்!

“என்ன நம்ம கண்டு பிடிப்பு எப்படி?”

“போர்டு மீட்டிங்ல விளக்கமா சொல்லுங்க!”

“டியர் மெம்பர்ஸ், நாம ஆயிரம் படிகளை ஒன்னா தாண்டி இருக்கிறோம். இது விசுவல் ஸ்மெல்லர் என்ற புது ஆக்கம். அதாவது, கணினியின் மூலமாக இதுவரை, ஒளி ஒலி மட்டும் பரப்பி வந்தது மாறி, இனி வாயுக்களும் பரப்பலாம் என்பது தான் நம் கான்செப்ட்.”

“இது ரொம்ப டேஞ்சர் ஆச்சே?!”

“விஷ வாயுக்கள் பரப்பும் என்பது உங்கள் வாதம். ஆனால், அக்ஸெப்ட் கொடுத்தால் மட்டுமே ஊடுருவும். இதனால், தொலைதூர மருத்துவம் பிரபலமாகும். பல மருந்துகளை வாயுவாக மாற்றி, எத்துணை பைட்ஸ் தேவையோ அதை அங்கிருந்தே மருத்துவர்கள் செலுத்தலாம்.”

“இது எப்படி?”

“இருங்க, நான் இன்னும் முழுசா சொல்லலையே?! ஒளிக்கற்றைகளை அனுப்புவது போல, திரவங்களை வாயுவாக மாற்றி, அதை, நாம் தயாரித்திருக்கும் கன்வெர்ட்டாரில் செலுத்தினால், அது அலைகளாக மாற்றப்பட்டு சர்வரில் இருந்து ஹோஸ்ட்டுக்கு போகும்”

2018ல்

வேலன் குடிசையில் இருந்து வெளியே வந்தான். தன் பாக்கெட்டில் இருந்த கணினியை உயிர்பித்தான். 2 ஈயெம் போதை வாயுக்கு ஆர்டர் கொடுக்க, அதை சுவாசித்து மனம் முழுக்க நிரப்பி கொண்டு, தள்ளாடியபடி கிளம்பினான்.

ராஜேஷ், கணினியில் இருந்து மல்லிகை மணத்தை பரவவிட்டு, ரிசெப்டாரை தன் உடலில் பொருத்திக் கொண்டு, கணினியின் மூலம் நயாகரா நீர்வீழ்ச்சியை காண விர்ச்சுவல் டூருக்கு தயாரானான்.

யூ.கே.ஜி. படிக்கும் பப்லு, தன் கணினியை, தொலைத்தற்காக, மிஸ் திட்டினார் என்று சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தான்.

2020ல்

சுபாஷ், பாக்கெட்டிலிருந்த பென் டார்ச் போன்ற பொருளை எடுத்தான். அதை உயிர்பிக்க, லேசர் திரை கண்முன் உருவானது, திரையில் வேண்டுவதை விரல்களால் செய்து விட்டு, வைரஸை கைவிரலில் பிடித்து நசுக்கி விட்டு, மூடினான்.

ரமா, தன் கணவரை டைவோர்ஸ் செய்தாள். காரணம், ஸ்பீச் ரெகக்ணிஷன் கணினியில் எப்போதும், இரவில் கணவன் பேசிக் கொண்டே இருந்தது தான். ‘திற’, ‘மூடு’, ‘ஒட்டு’, போன்றவற்றால் அவள் தூக்கம் கெடுகிறது என்பது அவள் வாதம்.

சாலைகள் வெறிச்சோடு கிடக்கின்றன. ரியல் எஸ்டேட் படுத்துவிட்டது. எல்லாரும் கணினியின் மூலம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால், ஆபீஸ் என்ற ஒரு சொல்லே புதிதாக தெரிகிறது.

2022ல்

கணினியில் மீண்டும் ஒரு புரட்சி! இனி, லேசர் கம்ப்யூட்டர் கூட கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும். சிறு பொத்தான் அளவே உள்ள ஒரு டிவைஸை, நம் காதுக்கு பின்னால் பொறுத்திக் கொண்டால் போதும். நம் மூளைக்கும் அதற்கும் தொடர்பு ஏற்பட்டு, நாம் நினைப்பதை செயலாக்கும். அதன் அவுட்புட், நம் விழித்திரையில் பிம்பமாய் படியும். அதை பார்த்துக் கொள்ளலாம்.

போர்டு மீட்டிங் கூட விர்ச்சுவல் ஆகிவிட்டது. அவர் உருவம், ஸ்கேனிங் செய்யப்பட்டு, அடுத்தவர் முன்பாய், வெற்றிடத்தில், லேசர் பிம்பமாய் சச்ரூபமாய் தெரிகிறது. அவர் பேசுவது, ரிசெப்டார் மூலம் இவர் கேட்க, மொத்தத்தில், யூ.எஸ்ஸில் இருப்பவரும், இந்தியாவில் இருப்பவரும், நினைத்த நொடியில், நேருக்கு நேராய் பேசிக் கொள்கிறார்கள்.

அமெரிக்கர்கள், ஆன்சைட் வாய்ப்பு தேடி, இந்திய தூதரகத்துக்கு முன் விசாவுக்காக க்யூவில் நிற்கிறார்கள்.

2024ல்

பட்டன் கணினி, காதுக்கு பின்புறம் எல்லாரும் பொருத்தி இருக்கிறார்கள்.

“நிஜாம் அண்ணா, நாம இன்னிக்கு கூகுளையும் மிஞ்சி அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறோம்னா, அதுக்கு அப்பப்ப, நீங்க பிழைகளை திருத்தித் தந்தது தான் காரணம்”

“ஷபி, நாம மைக்ரோசாஃப்ட் கிட்ட ஒரு சப்காண்ட்ராக்ட் கொடுத்தோமே, அதை முடித்துவிட்டார்களானு ஒரு எண்ண அலைய பாஸ் பண்ணுங்க”

“பீஸ் ட்ரைன், எல்லாரும் விர்ச்சுவலா வேண்டும் இடத்துக்கு போய்க்கிறாங்க. ஆயிரம் கிலோ மீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கிறவங்க கூட லேசர் பிம்பமா ஒரு நொடியில நம்ம பக்கத்துல நிற்கிறாங்க. ஆனா, இன்னமும் ரயில் ஓட்டிக்கிட்டிருக்கிற நீங்க தாங்க உண்மையான சாதனையாளர்”

“என்ன எல்லாரும், ஒன்னு சேராமயே இங்க போர்டு மீட்டிங் நடக்குதா? நான் போன வாரம் ஸ்வீட் கார்ன் சூப் வெச்சு, அத எவாபரேட் பண்ணி, சர்வர்ல லோட் பண்ணினேனே, அது கண்டென்ஸாகி, உங்க எல்லாருக்கும் வந்ததா?” ஜலீலா.

“சென்ஷி! இன்னிக்கு நம்ம கம்பெனி பில்லியன் டாலர்*பில்லியன் டாலரா வளர்ந்து, கூகுள், யாஹு எல்லாரையும் தூக்கி முழுங்கி இருக்கோம்னா, அதுக்கு சைனீஸ் மாதிரி நீங்க பேர் வெச்சிருக்கறதும் ஒரு காரணம்”

“அரங்க பெருமாள் அண்ணா, நாம் கணினி துறையில் இன்னும் முன்னேற நல்ல யோசனை சொல்லுங்க, சாரி நீங்க நினைத்தாலே போதும், எம் எல்லாரின் ரிசெப்டாருக்கும் வந்து விடும்.”

“நான் என்னங்க சொல்றது “'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்.....'(20:53) ” அரங்க பெருமாள்.

“சகோதரி, எவ்வளவு அருமையான டீம் ஃபார்ம் பண்ணியிருக்கீங்க! இன்னுக்கு நம்ம, மைண்ட் டு மைண்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் படு பாப்புலர். இத்துணைக்கும் நமக்கு ஒரு ஆபீஸ் கூட கிடையாது, எல்லாம் அவரவர் இருப்பிடத்திலிருந்தே சாதிச்சிருக்கோம். இந்நேரம் இழுத்து மூடியிருக்க வேண்டிய மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், நாம் கொடுத்த சப் காண்ட்ராக்ட்னால ஓட்டிட்டு இருக்காங்க” நவாஸுதீன்.

“வந்து...வந்து....”

“சொல்லுங்க ஜமால், ஏன் தயங்கிறீங்க! நீங்க கையை பிசையறீங்க, பாஸ்கோட் மட்டும் ஆன் செய்திருந்தால், நீங்க சொல்ல தயங்குவதை நானே உணர்ந்திருப்பேன். நட்புடன் சொல்லுங்க!”

“வந்து....இவ்ளோ நாளா என்னோட ஒர்க் எல்லாம் டிலீட் ஆயிரிச்சு, இப்போ என்னா செய்றது?”

“ஓ! அதுவா கவலைப்படாதிங்க. நேற்று ”When all else is lost, future still remains" னு ட்விட்டர்ல நான் நினைத்திருந்த மெஸேஜ் கிடைக்கலையா?”

“அதான் நம்ம, எஸ்.எம்.எல் ட்விட்டரை க்ராஸ் பண்ணிடுச்சே, இப்ப, ட்விட்டர் ஓல்டு பேஷன்னு நா திங்க் பண்ணறதே இல்லைங்க”

“நன்நட்புக்களே, மடிக்கணினி மறைந்து, இன்று பட்டன் கணினியாகி விட்டது. நம்முடைய முயற்சி இதோடு, முடிந்ததென்று நினைக்காதீர்கள். அடுத்த தலைமுறைக்கு இப்போதே தயாராகுங்கள்.”

2025ல்

காதின் பின்புற பட்டன் கணினி பிங் ஆக, மனதில், உருவான பாஸ்கோடை செலுத்தி உயிர்பித்தாள். 3000 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் பேரன், லேசர் பிம்பமாக முன்னால். தொட்டால் அது வெற்றிடம், பார்வைக்கு செல்ல குழந்தை.

“பாட்டி, எப்படி இருக்கீங்க?”

“கண்ணா, நீ எப்படி ராஜா இருக்கே, போன வாரம் போய்ட்டு வந்த மூன் வாயேஜ் நல்லா இருந்துச்சா? அங்க இருந்து என்ன வாங்கிட்டு வந்த?”

“சாதாரண விஷயம்லாம் பேசி போரடிக்காதிங்க பாட்டி! உங்க கைவலி பரவாயில்லையா?”

“ம்...பரவாயில்ல. பிரிட்டன் டாக்டர் ஜேம்ஸ் கிட்ட தான் டிஸ்டண்ட் தெரபி எடுத்துக்கிட்டேன். ஒரு நிமிஷம் இரு, நான் வெளிய இருக்கேன். வீட்டுக்கு போயிட்டு கூப்பிடுறேன்”

வீட்டில் இருக்கும் சென்சாரோடு தொடர்பு ஏற்படுத்தி, வீட்டில் இருக்கும், ஓவன் ஹீட்டை குறைக்கிறாள். அடுத்த பத்தாவது நிமிடம் வீடு வந்து சேர்ந்து, தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச, தன் எண்ண அலைகளை பாய்ச்சுகிறாள். ஓய்வாக சாய்ந்தபடி மீண்டும் தன் பேரனை தொடர்பு கொள்கிறாள்.

“பாட்டி நீங்க என் கண் முன்னாடி நிற்கிறீங்க, ஆனா மடியில போட்டு கொஞ்ச மாட்டேங்கிறீங்க. எப்ப பாட்டி அதுக்கு ஒரு வழி கண்டு பிடிப்பாங்க?”

“அதனால் என்ன இங்க இருந்தே, நான் பாடுறேன், நீ தூங்கு!”

“பாட்டெல்லாம் வேண்டாம், கதை சொல்லுங்க, பொட்டி மாதிரி ஒரு கம்ப்யூட்டர் இருக்கும்னு ஒரு நாள் சொன்னிங்களே, அந்த கதை சொல்லுங்க!”

“ஆமாம்டா, ஒரு பொட்டி, அதுல ஒரு பக்கம் மட்டும் வெளிச்சமா, எழுத்து தெரியும். அப்புறம், கட்டங்கட்டமா, பிளாஸ்டிக் பட்டன்ஸ் வெச்ச கீ போர்டு, அப்புறம் சோப்பு டப்பா சைஸ்ல ஒயரோட ஒரு மவுஸ்”

“யப்பா, எப்படி பாட்டி போற எடத்துல எல்லாம் இத தூக்கிட்டு போவிங்க?”

“நாங்க எங்கடா தூக்கிட்டு போவோம். அது இருக்கற எடத்துல தான் நாங்க உட்கார்ந்து ஒர்க் பண்ணுவோம்”

“எவ்ளோ கஷ்டம், அதோட எடத்துக்கு நாம போகணுமா?”

“ஆமாண்டா, ராத்திரி நேரத்துல நான் உட்கார்ந்து டைப் செஞ்சிக்கிட்டே இருப்பேன். தாத்தா, எம்பக்கத்துல உட்காராம, கம்ப்யூட்டர் பக்கத்துல உட்காருரியேனு சில டைம் கோச்சுக்குவார். இப்ப மாதிரி வசதியெல்லாம் அப்ப நினைச்சு கூட பார்க்க முடியாது...”

“எப்படி பாட்டி எல்லா எழுத்தையும் ஒவ்வொன்னா தட்டுணுமா? கை வலிக்காது???????”

“அப்ப வலிக்காத கை, இப்பத்தாண்டா வலிக்குது...வயசாயிடுச்சுல்ல?”

“எல்லாம் சரி பாட்டி, ஆனா, இன்னும் அந்த ப்ளாக்ல பதிவு போடறத மட்டும் நிறுத்த மாட்டேங்கிறிங்களே, ஏன்?”

“கண்ணா, மரம் எவ்ளோ வேணா வளரலாம். வானத்தை கூட தொடலாம். ஆனா, வேர் எப்பவும் மண்ணுக்கு தாண்டா சொந்தம். அதே மாதிரி தான் என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும், நம்ம கலாச்சாரத்தை - ஒரு சில பழக்க வழக்கத்த விட்டுட முடியுமா?”

“சரி, சரி, புரியுது, போரடிக்காதிங்க! அப்புறம், அதிகமா பின்னூட்டமிட்டவங்கள மட்டும், உங்களோட கம்பெனியில டைரக்டர்ஸா இணைச்சுக்கிட்டிங்க, பின்னூட்டம் போடற மத்தவங்கல்லாம்.........அப்புறம் ஓட்டு போடறவங்க.......அப்புறம் ஃபாலோ பண்ணும் ஐயாயிரத்தி சொச்சம் பேர் எல்லாரும்?.........”

“விட்டுட முடியுமா...எல்லாரும் தான் ஷேர் ஹோல்டர்ஸ்...ஆனா, பாரு,இப்ப முன்ன மாதிரி கள்ள ஓட்டெல்லாம் இல்ல, அவரவரோட எண்ண அலைவரிசையின் ஃப்ரீக்வென்ஸி, பதிவாயிரும், தமிழிஷ்ல. சோ இப்ப எல்லாமே நல்ல ஓட்டு தான்”

“வெரி இண்ட்ரெஸ்டிங் பாட்டி”

“அது மட்டுமில்ல கண்ணா, இந்த பதிவ போட்டவுடனே, கவிக்கிழவன்(இப்போ உண்மையா கிழவன்) சொல்வாரு, நீங்க, 2050ல் கம்ப்யூட்டர் எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க அப்படீனு! அதுக்கு பீர் வழிமொழிவாரு!”

“ஹா....ஹா....”

-சுமஜ்லா.
.
.

41 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

:)
:)
:)

பீர் | Peer said...

//“வெரி இண்ட்ரெஸ்டிங் பாட்டி”//

:)))

அரங்கப்பெருமாள் said...

// திரவங்களை வாயுவாக மாற்றி,//

//அத எவாபரேட் பண்ணி, சர்வர்ல லோட் பண்ணினேனே, அது கண்டென்ஸாகி,//

//எவ்ளோ கஷ்டம், அதோட எடத்துக்கு நாம போகணுமா//

ஆன் - லைன் ஆர்டரின் அடுத்தப் பதிப்பு,பொருள்களே அதன் வழியாக.. அருமை

ரொம்ப நல்ல கற்பனை.இது போல நடக்க வாய்ப்பில்லைன்னு சொல்லமுடியாது.

அப்பறம்..(அதான் நீங்களே சொல்லீட்டீங்க..)

நட்புடன் ஜமால் said...

அமெரிக்கர்கள், ஆன்சைட் வாய்ப்பு தேடி, இந்திய தூதரகத்துக்கு முன் விசாவுக்காக க்யூவில் நிற்கிறார்கள்.]]


ஹா ஹா ஹா

அதிக இந்தியர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும் போல ...

நட்புடன் ஜமால் said...

கற்பனையெல்லாம் பலமா இருக்குங்க

2025 என்பதற்கு பதிலாக 3025 என்றிந்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும் ...

Jawahar said...

முழுவதும் கற்பனை என்று லைட்டாக எடுத்துக் கொண்டு விட முடியாது. இதற்கு மேலும் கூட நடக்கலாம். அருமையான ப்யூச்சரிஸ்டிக் திங்கிங்.

http://kgjawarlal.wordpress.com

இப்னு அப்துல் ரஜாக் said...

வாவ்,கலக்கல்.இறைவன் நாடினால் நீங்க சொன்ன எல்லாமும் நடக்க வாய்ப்பு இருக்கு.இறைவன் அறிவுக்கு முக்கியம் கொடுத்துள்ளான்,பார்க்க குரான் வசனங்கள்.
----------------------------


யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (96:1)

'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (96:2)

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. (96:3)

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96:4)

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96:5)
--------------------------
//“பீஸ் ட்ரைன், எல்லாரும் விர்ச்சுவலா வேண்டும் இடத்துக்கு போய்க்கிறாங்க. ஆயிரம் கிலோ மீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கிறவங்க கூட லேசர் பிம்பமா ஒரு நொடியில நம்ம பக்கத்துல நிற்கிறாங்க. ஆனா, இன்னமும் ரயில் ஓட்டிக்கிட்டிருக்கிற நீங்க தாங்க உண்மையான சாதனையாளர்”//

இந்த ரயிலுக்கு முன்னாடி இருக்கிற அமைதி இருந்த தானே,உலகம் நல்லா இருக்கும்.அந்த ரயில ஓட்டுறதுல சந்தோசம் சகோதரி.

என்னதான் விர்சுவல்ன்னாலும்,நம்ம ஊரு கரி எஞ்சின் உள்ள ரயில்ல போற சுகம் வேற எந்த இதுலயும் கிடைக்காதுங்களே!
இன்னா நா சொல்றது?ஹி ஹி!!!

கவிக்கிழவன் said...

யாதவன் & பீர்,
இது ஒரிஜினல் அனுபவம், கூட்டவோ குறைக்கவோ இல்லை. ஸ்கூல் சம்பவம் நான் 9த் படிக்கும் போது நடந்தது.

நீங்க சொன்ன மாதிரி ஒரு நாள் எழுதிப்பார்க்கிறேன். நல்லா வந்தா ப்ளாக்ல இல்லாட்டி ரிசைக்கிள் பின்ல!

நன்றி எங்கள் பின்னூட்டத்துக்கு மதிப்பளித்து உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டதற்கு.
கற்பனையின் கடலே நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள். உங்கள் படைப்புக்கள் என்றும் சோடை போனதில்லை. எங்கள் நாட்டடில் இலங்கையில் ஆதர் சி கிளார்க் எனும் விஞ்ஞான புனைகதை எழுத்தாளர் இருந்தார். ஆவர் கற்பனையில் எழுதியவை இப்பொழுது நியமாகிக்கொண்டு வருகிறது.( சந்திரனுக்கு மனிதன் செல்வது பற்றிகற்பனையில் எழுதியிலுந்தார். இன்னும் பல). ஊங்கள் கற்பனையும் ஒரு நாள் நியமாகும் வாழ்த்துக்கள்
இலங்கையில் இருந்து யாதவன்

Jaleela Kamal said...

சுஹைனா எல்லோரையும் 2025 வரை கொண்டு போய் விட்டீர்கள், என்ன ஒரு கற்பனை.

SUFFIX said...

//“எல்லாம் சரி பாட்டி, ஆனா, இன்னும் அந்த ப்ளாக்ல பதிவு போடறத மட்டும் நிறுத்த மாட்டேங்கிறிங்களே, ஏன்?”//

ஹா..ஹா..பாட்டியோட லூட்டி தாங்கலை!!

SUFFIX said...

Very interesting!! அசத்திட்டீங்க போங்க!!

S.A. நவாஸுதீன் said...

கற்பனைக்குதிரை என்னமா வேகமா போகுது உங்களுக்கு. அசத்தலான கற்பனை சகோதரி.
*******************************************
நான் போன வாரம் ஸ்வீட் கார்ன் சூப் வெச்சு, அத எவாபரேட் பண்ணி, சர்வர்ல லோட் பண்ணினேனே, அது கண்டென்ஸாகி, உங்க எல்லாருக்கும் வந்ததா?” ஜலீலா.

இந்நேரம் இழுத்து மூடியிருக்க வேண்டிய மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், நாம் கொடுத்த சப் காண்ட்ராக்ட்னால ஓட்டிட்டு இருக்காங்க” நவாஸுதீன்.

அது மட்டுமில்ல கண்ணா, இந்த பதிவ போட்டவுடனே, கவிக்கிழவன்(இப்போ உண்மையா கிழவன்) சொல்வாரு, நீங்க, 2050ல் கம்ப்யூட்டர் எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க அப்படீனு! அதுக்கு பீர் வழிமொழிவாரு!”

சூப்பர். சூப்பர். சூப்பர்

Anonymous said...

சூப்பர், சான்ஸ்சே இல்ல, சுஜாதா நாவல்களில் வருவது போல் ....

சூப்பர்.சூப்பர் சூப்பர். எல்லாமே நடக்க வாய்ப்புகள் உள்ளது.

அமுதா கிருஷ்ணா said...

உங்க இலவச டெம்ப்ளேட்டை நான் யூஸ் செய்கிறேன் சில மாற்றங்களுடன், இன்னும் நேரம் கிடைக்கும் போது நிறைய மாற்றம் செய்யனும். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.நன்றி

SUMAZLA/சுமஜ்லா said...

பிரியமுடன்...வசந்த் said...
:)
:)
:)
ஹி...ஹி...
(:
(:
(:

SUMAZLA/சுமஜ்லா said...

////“வெரி இண்ட்ரெஸ்டிங் பாட்டி”//

பின்ன, 2025 எனக்கு 49 வயசாயிடுமே?!

அப்ப நீங்க மட்டும்?

SUMAZLA/சுமஜ்லா said...

//அப்பறம்..(அதான் நீங்களே சொல்லீட்டீங்க..)//

உங்களுக்கும் எனக்கும் உங்க பின்னூட்டத்தை தொடர்ந்து படிக்கிறவங்களுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம் அது.

SUMAZLA/சுமஜ்லா said...

//அதிக இந்தியர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும் போல ...//

அட, போன வாரம் உங்க ப்ளாக் டிலிட் ஆனதை சந்தடி சாக்குல உள்ள நுழைத்திருக்கேன் கவனிக்கலையா?

//2025 என்பதற்கு பதிலாக 3025 என்றிந்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும் ...//

ஏன் ஜமால், ஒரு பதினைந்து இருபது வருடம் முன்னால், நாம் செல்போன் பற்றி நினைத்திருப்போமா? இருந்திருந்தால், திருமணத்துக்கு முன், நானும் என்னவரும் எவ்வளவு நிம்மதியாக போன் பேசியிருப்போம்?!:-)

SUMAZLA/சுமஜ்லா said...

//முழுவதும் கற்பனை என்று லைட்டாக எடுத்துக் கொண்டு விட முடியாது. இதற்கு மேலும் கூட நடக்கலாம். அருமையான ப்யூச்சரிஸ்டிக் திங்கிங். //

நன்றி ஜவஹர்லால். நம் சொத்தே இந்த கற்பனை தானே?!

SUMAZLA/சுமஜ்லா said...

//என்னதான் விர்சுவல்ன்னாலும்,நம்ம ஊரு கரி எஞ்சின் உள்ள ரயில்ல போற சுகம் வேற எந்த இதுலயும் கிடைக்காதுங்களே!
இன்னா நா சொல்றது?ஹி ஹி!!!//

கரி எஞ்சின் இன்னமும் இருக்கா என்ன? ஊட்டி மலை ரயில் கூட இப்ப மாறிடுச்சே?!

SUMAZLA/சுமஜ்லா said...

//கற்பனையின் கடலே நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள். உங்கள் படைப்புக்கள் என்றும் சோடை போனதில்லை. //

நன்றி யாதவன். நீங்கள் என் மேல் ரொம்பவும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். இதனால் தான், என்றாவது ஒரு நாள் மொக்கை போட்டால் கூட, என் தம்பி போன் போட்டு, உன் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று போன் போட்டு திட்டுகிறான்.

SUMAZLA/சுமஜ்லா said...

//சுஹைனா எல்லோரையும் 2025 வரை கொண்டு போய் விட்டீர்கள், என்ன ஒரு கற்பனை.//

ஆனா, அங்கேயும் ஜலீலா என்னும் சமையல் ராணியின் தர்பார் நடந்து கொண்டே தானே இருக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

//Very interesting!! அசத்திட்டீங்க போங்க!!//

நன்றி ஷபி, நீங்களும் நம்ம கம்பெனியில பார்ட்னராயிட்டீங்க, பார்த்தீங்களா? (விர்ச்சுவலையும் ரியாலிஸத்தையும் கலந்தால் தானே சுவையாக இருக்கும்)

SUMAZLA/சுமஜ்லா said...

//சூப்பர். சூப்பர். சூப்பர்//

நன்றி நவாஸுதீன். இந்த வரிகள் எனக்கும் மிகவும் பிடித்திருக்கு. அதோடு, நான் ரசித்த சில வரிகள்:

//யூ.கே.ஜி. படிக்கும் பப்லு, தன் கணினியை, தொலைத்தற்காக, மிஸ் திட்டினார் என்று சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தான்.//

//திரையில் வேண்டுவதை விரல்களால் செய்து விட்டு, வைரஸை கைவிரலில் பிடித்து நசுக்கி விட்டு, மூடினான்.//

//அமெரிக்கர்கள், ஆன்சைட் வாய்ப்பு தேடி, இந்திய தூதரகத்துக்கு முன் விசாவுக்காக க்யூவில் நிற்கிறார்கள்.//

//“சென்ஷி! இன்னிக்கு நம்ம கம்பெனி பில்லியன் டாலர்*பில்லியன் டாலரா வளர்ந்து, கூகுள், யாஹு எல்லாரையும் தூக்கி முழுங்கி இருக்கோம்னா, அதுக்கு சைனீஸ் மாதிரி நீங்க பேர் வெச்சிருக்கறதும் ஒரு காரணம்”//

//“வந்து....இவ்ளோ நாளா என்னோட ஒர்க் எல்லாம் டிலீட் ஆயிரிச்சு, இப்போ என்னா செய்றது?”//

//கண்ணா, மரம் எவ்ளோ வேணா வளரலாம். வானத்தை கூட தொடலாம். ஆனா, வேர் எப்பவும் மண்ணுக்கு தாண்டா சொந்தம்.//

//அப்புறம் ஃபாலோ பண்ணும் ஐயாயிரத்தி சொச்சம் பேர் எல்லாரும்?.........”//(ரொம்ப ஓவர் கான்ஃபிடன்ஸ் இதானோ?)

SUMAZLA/சுமஜ்லா said...

//சூப்பர், சான்ஸ்சே இல்ல, சுஜாதா நாவல்களில் வருவது போல் ....//

நன்றி மயில். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிய பாராட்டு! நான் சுஜாதா எழுத்துக்களின் தீவிர ரசிகை!

SUMAZLA/சுமஜ்லா said...

அமுதா கிருஷ்ணன், உங்களுக்கு உங்கள் ப்ளாக்ல பின்னூட்டம் தந்திருக்கிறேன்.

Unknown said...

//
அமெரிக்கர்கள், ஆன்சைட் வாய்ப்பு தேடி, இந்திய தூதரகத்துக்கு முன் விசாவுக்காக க்யூவில் நிற்கிறார்கள்.

//

nice :)

superb imagination...

Recruitment Officer said...

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு, சுமஜ்லா! வாசனை பத்திரிக்கைகள் இப்போதே வந்துவிட்டன. எங்கே உங்கள் கற்பனைகள் நனவாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. - நந்தவேரன்

Menaga Sathia said...

ஹா ஹா நல்ல கற்பனை சுகைனா,கலக்கிட்டீங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி கொல்வின், மஸ்தான், நந்தவேரன் & மேனகா!

நான் பாட்டுக்கு ஏதோ கிறுக்கி விட்டு, எல்லாரும் என்ன சொல்ல போகிறார்களோ என்று பயந்து கொண்டு இருந்தேன். நல்லவேளை தப்பித்தேன்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அந்த ஐந்தாயிரம் ஃபாலோவர்ஸ்-ல்
நானும் ஒருவன் என்பது எனக்கு மகிழ்ச்சி.

ம்ம்ம்... நகைச்சுவையாத்தான் எழுதியிருக்கீங்க,
ஆனா... நம்ம சகோதர நட்புக்களையும் கொஞ்சமா
வம்புக்கு இழுத்திருக்கீங்க. ஆனாலும் ச்சும்மாதானே!

//"நிஜாம் அண்ணா, நாம இன்னிக்கு கூகுளையும் மிஞ்சி அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறோம்னா, அதுக்கு அப்பப்ப, நீங்க பிழைகளை திருத்தித் தந்தது தான் காரணம்”//
-இப்ப இதுக்கெல்லாம்ம்ம்ம்கூட(?) கம்பெனியில டைரக்டர்
பதவி தர ஆரம்பிச்சுட்டீங்களா?
(நீங்க செஞ்சா சரியாத்தான் இருக்கும்.)

SUMAZLA/சுமஜ்லா said...

வம்பாவது தும்பாவது எல்லாரையும் பார்ட்னர்ஸா சேர்த்திருக்கேனே போதாதா?

எல்லாரும் கோடிகளில் புரளும் போது, வம்பு தானா தேடி வருமே?!

பிழைகள் இருந்தா ஒரு கம்பெனி உருப்படுமா? நீங்களே சொல்லுங்க!

Gifariz said...

கொஞ்ச நேரம் இந்த உலகத்தையே மறந்துட்டேன்.

நல்ல கற்பனை (நிஜம்)

//'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்.....'(20:23) ”//

20:23 இல்ல 20:53

சென்ஷி said...

வாவ்.. கலக்கலா இருந்தது. 2 நாளா எப்படி மிஸ் செஞ்சேன்னு தெரியலை!

நல்லா யோசிச்சதும் அதுக்கான செயல்திட்டமும் அருமையா இருக்குது. முடியாதது அப்படின்னு ஒண்ணும் இல்லைங்கறதுக்கு அத்தாட்சியா நீங்க எழுதுனதை அஞ்சு வருசம் கழிச்சு டெக்னாலஜி எந்த அளவு இம்ப்ரூவ் ஆகியிருக்குன்னு ஒப்பிடும்போது புரிஞ்சுக்க முடியும்.

ஹேட்ஸ் ஆஃப் டு யு....!

சென்ஷி said...

////“சென்ஷி! இன்னிக்கு நம்ம கம்பெனி பில்லியன் டாலர்*பில்லியன் டாலரா வளர்ந்து, கூகுள், யாஹு எல்லாரையும் தூக்கி முழுங்கி இருக்கோம்னா, அதுக்கு சைனீஸ் மாதிரி நீங்க பேர் வெச்சிருக்கறதும் ஒரு காரணம்”////

அவ்வ்வ்வ்வ்.. டைரக்டர்ன்னு சொல்லிட்டு டேமேஜர் ஆக்கிட்டீங்களே :)

ரொம்ப ரசிச்சேன்.. மிக்க நன்றி சுமஜ்லா..

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி கிபாரிஸ் மாற்றி விட்டேன்.

சென்ஷி நீங்க டைரக்டராயிட்டீங்க! அதான் வெத்தலை பாக்கு வெச்சு அழைத்தவுடன் வர்ரீங்க! :-)

டைரக்டரானவுடனே இவ்ளோ கெத்தா?!!!(சும்மா லுலுலாயிக்கு)

சென்ஷி said...

//
சென்ஷி நீங்க டைரக்டராயிட்டீங்க! அதான் வெத்தலை பாக்கு வெச்சு அழைத்தவுடன் வர்ரீங்க! :-)//

உங்க பதிவை படிக்கணும்னு நினைச்சுக்கிட்டே விட்டுட்டேன் போலருக்குது. உங்க கமெண்ட் பார்த்தப்பிறகுதான் ஞாபகம் வந்தது.

/டைரக்டரானவுடனே இவ்ளோ கெத்தா?!!!(சும்மா லுலுலாயிக்கு)//

ஒரு வேளை டைரக்டா டைரக்டர் ஆனதால இருக்குமோ :-)

சீமான்கனி said...

ஹ....ஹ....
இருந்தாலும் உங்களுக்கு
இவ்ளவு
இவ்ளவு
இவ்ளவு
இவ்ளவு
ஆகாது...

SUMAZLA/சுமஜ்லா said...

//ஹ....ஹ....
இருந்தாலும் உங்களுக்கு
இவ்ளவு
இவ்ளவு
இவ்ளவு
இவ்ளவு
ஆகாது...//

கம்பெனியின் ஷேர் ஹோல்டரே இப்படி சொன்னால் எப்படிங்க?!!

"உழவன்" "Uzhavan" said...

அட்டகாசமான கற்பனை. இதுவே நிஜமானால் மிக மகிழ்ச்சி.
 
//அமெரிக்கர்கள், ஆன்சைட் வாய்ப்பு தேடி, இந்திய தூதரகத்துக்கு முன் விசாவுக்காக க்யூவில் நிற்கிறார்கள்.//
 
ஆஹா.. முடியல.. :-)) இப்படி ஒரு நினைப்பா. நடந்தா சந்தோசம்பா
 
ஆக மொத்தத்தில் ரொம்ப இன்ரஸ்டிங் பாட்டி :-)

SUMAZLA/சுமஜ்லா said...

//ஆக மொத்தத்தில் ரொம்ப இன்ரஸ்டிங் பாட்டி :-)//

எத்துணை பேர் இப்படி பேசி வெச்சிட்டு கிளம்பி இருக்கீங்க? 2025ல சொல்லுங்க இத! இப்ப நான் காலேஜ் கேர்ளாக்கும்!