பதிவுலகில் நுழைந்த போது, எனக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அதன் டிப்ஸ் & டிரிக்ஸ் தெரிந்து கொண்டேன். இன்று பதிவுலகில் புதிதாக நுழைபவர்கள், வெற்றி நடை போட, எனக்கு தெரிந்த சில விஷயங்களை தருகிறேன்.
http://www.blogger.com/ க்குள் சைன் இன் ஆனவுடன் தெரிவது தான் Dashboard. இதில் பல கிளை சுட்டிகள் உள்ளன. நான் சொல்லும் வழியை பின்பற்றி, நீங்கள் எளிதாக செய்யலாம்.
1.முதலாவதாக, உங்கள் ப்ளாகில் மேலே பட்டையாக இருக்கும் navigation bar ஐ தூக்கி விடுங்கள். இதனால், ஒரு வெப்சைட் போன்ற லுக் கிடைக்கும். இதை செய்ய, Dashboard - Layout - Edit Html போய், Page Structure என்ற செக்ஷனின் கீழ் எதாவது ஒரு இடத்தில் இந்த கோடை பேஸ்ட் செய்து விடவும். இப்போ அந்த பார் மறைந்து விடும்.
/* CSS to hid navigation bar */
#navbar
{
height:0px;
visibility:hidden;
display:none
}
2.உங்கள் பதிவின் தலைப்பையும் முதல் சில வரிகளை கவனமாக தேர்ந்தெடுத்து போடவும். தமிழ்மணத்தில் இணைக்கும் போது முதல் சில வரிகள் தான் அது எடுத்துக் கொள்ளும்.
3.உங்கள் போஸ்டிங் எல்லாம் உங்களுக்கு ஈமெயில் வருமாறு செய்து கொள்ளவும். எதாவது காரணத்தால் ப்ளாக் அழிந்து போனாலும், சுலபமாக போஸ்டிங்கை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு Dashboard - Settings - Email & Mobile - Email Notifications - Blog send address போய் விரும்பும் ஈமெயிலைக் கொடுத்து சேவ் செய்து விடுங்கள்.
4.அதே போல, நமக்கு வரும் கமெண்ட்ஸை நம்முடைய ஈமெயிலிலேயே படித்துக் கொள்ளலாம். இதற்கு Dashboard - settings - Comments - Comment Notification Email போய் உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் பழைய பதிவுக்கு வரும் கமெண்ட்டுகள் உங்கள் கவனத்துக்கு வராமலே போய் விட கூடும்.
5.ரீடரின் மூலம் படிப்பவருக்கு மட்டும் தெரியும் படி ஸ்பெஷல் மெஸேஜ் கொடுக்கலாம். இது ரீடரில், பதிவின் இறுதியில் தெரியும். இதற்கு, Dashboard - Settings - Site Feed - Post Feed Footer ல் போய், அதில் விரும்பும் மெஸேஜ் டைப் செய்து சேவ் செய்து விடுங்கள். அவ்வளவு தான்.
6.முதல் பக்கத்தில், இரண்டு மூன்று பதிவுகளுக்கும் மேல் தெரியாதபடி செய்தால், பக்கம் வேகமாக லோட் ஆகும். இதை செய்ய, Dashboard - Layout - page elements - Blog posts - Edit கொடுத்து, Number of posts on main page என்பதில் விரும்பும் எண்ணை கொடுங்கள். இது default ஆக 7 என்று இருக்கும்.
7.கண்டிப்பாக ப்ளாக் ஆர்ச்சீவ் உங்க ப்ளாகில் போட்டு வையுங்கள். அப்போது தான் பழைய போஸ்ட்டிங்கை புது வாசகர்கள் படிக்க முடியும். அதே போல ஃபாலோவர்ஸ் லின்க்கையும் போட்டு வைத்தால் தான், ப்ளாக் பேர் மறந்து விட்டால் கூட, ஃபாலோ பண்ணுபவர்கள் எளிதாக படிக்க முடியும்.
8.சமீபத்திய பதிவுகள், மற்றும் சமீபத்திய கருத்துக்கள் விட்ஜெட்ஸை சைடு பாரில் போட்டு வையுங்கள். எளிதாக இதை செய்ய, Dashboard - Lay out - Add a Gadget - Feed போய், http://sumazla.blogspot.com/feeds/posts/default என்று கொடுத்தால், சமீபத்திய பதிவுகள் கிடைக்கும். அதே போல, http://sumazla.blogspot.com/feeds/comments/default என்று கொடுத்தால், சமீபத்திய கருத்துகள் கிடைக்கும். கவனம், இதில் sumazla என்று இருப்பதற்கு பதில், உங்க ப்ளாக் பேரை போட்டு விடுங்கள்.
9.நீங்கள் நிறைய ப்ளாக் வைத்திருந்தாலும், உங்க ப்ளாக் ப்ரொஃபைலில் முதன்மையான முக்கிய ப்ளாக் மட்டும் தெரியும்படி செய்தால், புது வாசகர்களுக்கு குழப்பம் இருக்காது. முக்கிய ப்ளாகில் மற்ற ப்ளாகுக்கு லின்க் கொடுத்து விடலாம். இதை செய்ய, Dashboard - edit profile - select blogs to display போய், விரும்பியதை மட்டும் டிக் செய்து சேவ் செய்து விடவும்.
10. கடைசியாக நிறைய கமெண்ட்ஸ் கிடைக்க, Dashboard - Settings - Comments போய், who can comment என்று இருப்பதில் Any one என்று தேர்வு செய்யுங்கள். comment form message என்பதில், ‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’ போல, ஏதேனும் ஒரு மெஸேஜ் டைப் செய்யுங்கள். இது உங்க கமெண்ட் ஃபார்மின் மேல் தோன்றும். அடுத்து, Show word verification for comments என்பதில் No கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் Captcha டைப் செய்ய சொல்லி எரிச்சலூட்டும்.
11. நான் வைத்திருப்பது போல கூகுள் எழுத்துரு மாற்றியை வைத்துக் கொண்டால், புதியவர்கள் தமிழில் கமெண்ட் செய்ய வசதியாக இருக்கும். இதை செய்ய, Dashboard - lay out - Add a gadget போய், html/javascript என்பதின் கீழ், இந்த கோடை பேஸ்ட் செய்து விடுங்கள். இதில், W என்று இருப்பது அகலம், h என்று இருப்பது உயரம். இதை உங்கள் ப்ளாகுக்கேற்றபடி மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.
<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/
103159279678197997651/googleindictransliteration.xml&
synd=open&w=370&h=170&title=Google+Indic+Transliterator&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>
12. நீங்கள் போஸ்டிங் போடும் போதும், போட்டோஸ் அப்லோட் செய்யும் போதும், Edit Html என்று போஸ்டிங் விண்டோவில் தெரிவதை க்ளிக் செய்து, html mode ல் போய் செய்தால், தலையை சுற்றவைக்கும் ஃபார்மட்டிங் பிழைகள் தோன்றாது.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். வேறு விபரங்கள் தேவைப்பட்டாலும், கேளுங்கள். தெரிந்தவரை சொல்கிறேன்.
-சுமஜ்லா.
.
.
Tweet | ||||
50 comments:
மிகவும் பயனுள்ள இடுகை....
புதிய பதிவர்களுக்கு எளிதில் புரியம் வகையில் எழுதயிருக்கிறீர்கள்...
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/
இந்த வலைப்பதிவில் தங்கள் வலையைப் பற்றிய குறிப்பு உள்ளது பார்த்தீர்களா..?
மிகவும் பயனுள்ள பதிவு...
புத்தகத் திருவிழா சென்றீர்களா....
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
சூப்பர் அக்கா புதியவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் தெரிந்து கொள்ளவேண்டியது . நான் ஒட்டு போட்டுவிட்டேன் . அப்படியே கூகிள் விளம்பரம் பெற எழுதுங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்
http://saidapet2009.blogspot.com/
பயனுள்ள பதிவு. +ஓட்டு போட்டாச்சு :)
சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும், நிறைய விஷயங்கள் எனக்குப் புதுசு. அனைவருக்கும் பயனுள்ள பதிவு. வாழ்த்துகள் சுமஜ்லா.
அனுஜன்யா
சுஹைனா பாயிண்ட் டு பாயிண்ட் நச்சுன்னு போட்டு விட்டீர்கள்.
கலக்குங்கள்
அருமையான விசயங்கள்.. புதியவர்களுக்கு எளிதாய் புரியும்படி... அப்புறம். நீங்கள் comment பதில் போடும்போது தனியாக ஒரு box ல் வருகிறதே, அது எப்படி.?
நன்றி, முனைவர், கதிர், கிருஷ்ணா, சென்ஷி, அனுஜன்யா,ஜலீலாக்கா மற்றும் அதிரை அபூபக்கர்.
முனைவர் சார், பார்த்தேன். ஆனால், அலெக்ஸாவில் என் ரேங்க், அவர் குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கிறது. அது குறித்து மெயில் அனுப்பியிருக்கிறேன்.
கதிர், இன்று தான் போக வேண்டும்! ஒவ்வொரு முறையும் மிஸ் பண்ண மாட்டேன். நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது கேமராவுடன் போக வேண்டும் போல் உள்ளது. (ஒரு நிருபர் ரேஞ்சுக்கு ஆயிட்டே, என்று என்னவர், உங்க கமெண்ட்டை பார்த்துவிட்டு கேலி செய்கிறார்)
நண்பர் அபூபக்கர், நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை கமெண்ட்ஸில் சொல்ல முடியாது, இது கொஞ்சம் html ல் கைவைக்க வேண்டும். நேரம் வரும் போது பதிவாக போடுகிறேன்.
நண்பர் கிருஷ்ணாவுக்கு,
கூகுள் விளம்பரம், தற்சமயம் சுலபமாக தருவதில்லை என்று கேள்விப்பட்டேன். அதோடு, ஆங்கில சைட்டுக்கு மட்டுமே தருகிறார்கள். நான் ஒரு வருடத்துக்கும் முன்பு வாங்கி வைத்திருந்தேன். ஒரு முறை வாங்கி விட்டால், எந்த சைட்டில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
www.google.com/adsense ல் போய் முதலில் அப்ளிகேஷன் போடுங்கள். நிறைய பேர் இது பற்றி பதிவிட்டிருக்கிறார்கள். அப்ளிகேஷன் அப்ரூவல் ஆனவுடன், உங்கள் dashboard - monetize டேப் மூலம், விளம்பரம் தெரியும்படி செய்யலாம்.
நேரம் கிடைத்தால் பதிவிடுகிறேன். முயன்று பாருங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
how to convert my current template (minima lefty stretch) to three column web page, with more space for blog posts.
-vidhya
நல்ல பயனுள்ள பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்
vidhya search in google 'three column free blogger templates'! you will get a cluster of it. Go to Dashboard - Lay out - Edit Html and replace the html with your new template's! be careful to back up your widgets, before doing it, because it will get erased while uploading new template.
நன்றி தமிழ்!
நல்ல பயனுள்ள டிப்ஸ்
நல்ல தகவல்கள்
எளிய முறையில் பகிர்ந்துள்ளீர்கள்.
thank you for this blog
பயனுள்ள பதிவு.... நன்றி.
Thanks for the excellent tips. Your blog looks nice too..
என்னது? புது பதிவர்களுக்கு மட்டுதான் டிப்ஸா?
அப்ப, எங்களுக்கு..
நல்லாயிருங்க தாயி..
(ஆமா, டிப்சுன்னா காசுதான..)
அசத்துறீங்க ஆப்பா, பயனுள்ள தகவல்.
எனக்கான தகவலும் இதலேயே கொடுத்துட்டீங்க. நன்றி.
இன்னும் ஒண்ணு;
புதிய இடுகை ரிடரில் வர சிறிது நேரம் ஆகிறது. சில சமயம் மணி நேரங்கள் கூட. போஸ்ட் செய்ததுமே ரீடரில் வர ஏதும் வழி இருக்கா?
நல்ல பயனுள்ள பதிவு சுகைனா.எனக்கு புதிய பதிவு போட்டபின் ரீடரில் வரும் போது போட்டோ வரமாட்டேங்குது.முன்னெல்லாம் வந்தது.தமிழ்மணத்தில் இணைக்கும் போது என் பெயரும்,ரெசிபி போட்டோவும் வரமாட்டேங்குது.ஏன்?
good tips...thank you pa...
பதிவுத்துறையை இலகுபடுத்துவதற்காக பதிவிடுதல் பற்றிய தொழிநுட்ப விடயங்களை கொண்ட பதிவுகளை பூச்சரம் தொகுக்க விழைகிறது. நீங்கள் எழுதிய, நீங்கள் வாசித்த பதிவுகளின் URLஐ எமக்கு சமர்ப்பிய்யுங்கள். சமர்ப்பித்தவர் பற்றிய விபரமும் (பெயர், வலைப்பூவின் பெயர் போன்ற) இதன்போது பிரசுரிக்கப்படும்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி poosaramlk@gmail.com
இம்முயற்சியில் பூச்சரம் அங்கத்தவர் அல்லாதோரும் பங்குபற்றலாம்.
எப்படி உங்கள் மாத்திரம் வேறுபடுத்தி தெரிகிறது
//Blogger SUMAZLA/சுமஜ்லா said...
முனைவர் சார், பார்த்தேன். ஆனால், அலெக்ஸாவில் என் ரேங்க், அவர் குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கிறது. அது குறித்து மெயில் அனுப்பியிருக்கிறேன்.//
மெயில் வரவில்லை. வாசகர் கருத்தில் பார்த்தேன். அந்த தரவரிசைப் பட்டியல் InfoTech / Infotech சார்ந்த பதிவுகளை ---மட்டும்---எழுதுபவர்களுக்கு.
பதிவின் தலைப்பை படியுங்கள்.
வேண்டுமானால் நீங்கள் புதியதாக ஒரு வலைப்பதிவை தொடங்கி InfoTech மட்டுமே எழுதினால் போதுமான ரேங்க் கிடைத்தவுடன் தரவரிசையில் வரலாம்.
நீங்கள் சுற்றுலா போனதையெல்லாம் எழுதுகிறீகள் அல்லவா?
இப்போது இந்த வலைப்பூவில் உள்ள தொழில்நுட்ப பதிவுகளை புது வலைபூவிற்கு மாற்றிக் கொள்ள வழி இருக்கிறதே.
முதல் பதில் சாய்தாசனுக்கு,
உங்கள் தலைப்பு புரியாமல் இல்லை. ஆனாலும், நீங்கள் குறிப்பிட்டிருந்த வலைபூ தொகுப்பில் இருந்த ஒரு வலைப்பூவில், தொழில் நுட்ப பதிவுகள் மட்டும் அல்லாமல் பல விஷயங்களும் இருந்ததை பார்த்து விட்டு தான், நான் தங்களுக்கு பதில் தந்தேன்.
நீங்கள் விரும்பினால் அதற்கான சுட்டியை தருகிறேன்.
அதோடு, தொழில்நுட்ப பதிவுகளுக்காக நான் வலை தொடங்க வில்லை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல, எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், அவ்வளவு தான்.
நன்றி ஸ்டார்ஜன், ஜமால், ருத்ரன், எஸ்கே, புபட்டியன்!
கலையரசன், காசு எனக்கு தர்ரீங்களா? இல்லை உங்களுக்கு தரணுமா?
பீர் சார் (அடுக்கு மொழி) நான் சாப்பிட்டது உடனே ஜீரணமாகிவிடாதல்லவா? அது போல தான் ரீடரும், கிரகிக்க, சில மணிகள் எடுத்துக் கொள்கின்றது.
மேனகா, உங்கள் கேள்விக்கான பதில் எனக்கு தெரியவில்லை, தேடி பார்த்து, தெரிந்தால் சொல்கிறேன். அய்யய்யோ, தமிழ்மணத்தில், முதலில் என் பெயர் வருகிறதானு செக் பண்ணி கொள்கிறேன், இருங்க. posted by என்ற இடத்தில் என்ன கொடுத்திருக்கீங்க?
உண்மையா ரீடர் பற்றி எனக்கே வண்டி வண்டியா சந்தேகம் இருக்கு!
நன்றி, அமுதா, பூச்சரம், ராசிக்!
//எப்படி உங்கள் மாத்திரம் வேறுபடுத்தி தெரிகிறது//
இப்படியெல்லாம் கேட்டா பயமா இருக்குங்க...எதைப் பற்றி கேட்கிறீங்கன்னு, கொஞ்சம் தெளிவா கேட்கக் கூடாதா?
மிக மிக நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். தங்களின் 11 வது பாயிண்ட் எனக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. மிகவும் நன்றி.
- அபூ ஷாகிர்
google indic translator என் வலைப்பூவில் சேர்த்து விட்டேன். நன்றி
சுமா நான் இதில் ஜீரோ ரகம் ஆனால் இத்தனையும் எப்படின்னு மட்டும் மனசுகுள்ள இருந்தது,,,,எல்லாத்துக்கும் விடை கொடுத்திட்டீங்க.. நன்றிடா பயனடைகிறோம்....
ஓக்கே, ஷாகிர், சாய் & அபூ, உங்க எல்லாருக்கும் பயன்படும் ஒன்றை எழுதி இருக்கேனு சந்தோஷமா இருக்கு!
இந்த டிரான்ஸ் லிட்ரேட்டரை பயன்படுத்து, Vidhoosh சோட ஒரு ஹிந்தி ப்ளாக்ல, ஹிந்தியில கூட கமெண்ட் போட்டேனா பார்த்துக்குங்களே!
useful tips thank you suhaina
பல விஷயங்கள் எனக்கும் ரொம்ப உபயோகமானதா இருக்கு சகோதரி. நன்றி
Excellet மிகவும் பயனுள்ள பதிவு...
I think we could get more ideas via your comment's reply better than article, also we wish to get more and more with you
Best Regards Suhaina, God bless
thank you vasanth, kabothi, navas and asfar.
Asfar, I prefer to write articles, rather than replying in comments, because it will be of help to more people.
அனைத்துமே பயனுள்ள தகவலகள்!
நல்ல பயனுள்ள இடுகை!
வாழ்த்துக்கள்!
மிகவும் பயனுள்ள பதிவு. பலவற்றை உபயோகித்துப் பார்த்துவிட்டேன். அருமை.
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சகோதரி அவர்களே.
எப்படி உங்கள் comment மாத்திரம் வேறுபடுத்தி தெரிகிறது?
sorry a word missed.. :D
அன்பு சகோதரி!
என்னுடைய bloggerla transliterator வேலை செய்யறதில்லை. என்ன பண்ணனும் இப்ப !! அது போல "add gadgets" யும் டாஷ்போர்ட்டில் தேடினேன் கிடைக்கவில்லை. உதவுங்களேன்! நன்றி.
திரு.
ராசிக், நீங்கள் கேட்டதற்கான விடையை பின்னூட்டத்தில் எழுத முடியாது. கொஞ்சம் html ல் கை வைக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது அது பற்றி பதிவு போடுகிறேன்.
திரு, add a gadgets டேஷ் போர்டில் இருக்காது, டேஷ்போர்டில் இருக்கும் லே அவுட் என்பதை க்ளிக் செய்து, அதில் page elements என்று இருக்கும் பிரிவை க்ளிக் செய்தால் இருக்கும்.
அதன் மூலம் போய் சொன்னபடி போட்டால், வேலை செய்யும். அதே போல, போஸ்டிங் போடும், விண்டோவிலும் ஒரு ட்ரேன்ஸ்லிட்ரேட்டர் இருக்கும். அதன் மூலமும் டைப் செய்யலாம். நீங்கள் எதை கேட்கிறீர்கள் புரியவில்லை.
மண்ணிக்கவும் அக்கா...
எனது முதல்
போஸ்டில் உங்களை அண்ணே என்று தெரியாமல் எழுதிவிட்டேன் ..
என்னை போன்ற கத்து குட்டிக்கு நல்ல பயனுள்ள தகவல்கள் (நல்ல வேலை இப்போவாது சொன்னியே...)
வாழ்த்துகள் ....டா டா டா ....
மிகவும் பயனுடையதாக இருந்தது, மிக்க நன்றி.
நீங்கள் கூறியபடி நான் எனது வலைப்பூவில் கமெண்ட்ஸ் பக்கத்தில் மாற்றங்கள் செய்தேன் , கமெண்ட்ஸ் விண்டோ காணவில்லை , திரும்ப பழைய நிலைக்கு கொண்டுவந்தும் (default settings), கமெண்ட்ஸ் விண்டோ display ஆகவில்லை ,எப்படி திரும்ப அதை கொண்டு வருவது , தயவு செய்து உதவுங்கள்
http://puthiyavann.blogspot.com
திரு. சுமஜ்லா, எனக்கும் இந்த நேவிகேஷன் பாரை நீக்கிவிட நெடுநாட்களாய் ஆசை... நண்பர் ஒருவர் உங்கள் வலைப்பூவின் உரலியை எனக்கு அனுப்பியிருந்தார்... நீங்கள் சொன்னது போல எடிட் HTML-ல் போய் PAGE STRUCTURE பகுதிக்கு கீழே ஏதேனும் ஒரு இடத்தில் பேஸ்ட் செய்து முயற்சி செய்து பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. (மூன்று முறை வெவ்வேறு இடங்களில் பேஸ்ட் செய்து முயற்சித்தேன்) பின்பு கூகுளில் நானே தேடியதில் வேறொரு உபாயம் கிட்டியது. அதை முயற்சி செய்கையில் கைகூடியது. அந்த உரலியை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்...
http://www.bloggerbuster.com/2007/07/how-to-hide-blogger-nav-bar.html
பயனுள்ள பதிவு.... நன்றி.
நன்றிகள்
Sumazla அவர்களுக்கு......
மிகவும் பயனுள்ள இடுகை....
என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு எளிதில் புரியம் வகையில் எழுதயிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.ப்ளோக்கில் 10 பக்கங்களைத்தான் உருவாக்க முடிகிறது. எமக்கு தேவையான அளவு பக்கங்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை அறியத்தர முடியுமா? எனது மின்னஞ்சல் : abuanultm@yahoo.com
http://abuanu.blogspot.com/
Post a Comment