ஆறாவதில் நான் பெரிய மனுஷி ஆன போது, அத்துடன் என் படிப்பை நிறுத்த முயன்றார். என் அன்புக்குறிய பிரின்ஸிபாலின் நற்போதனையாலும், என் பிடிவாதத்தாலும் பத்து வரை படித்து, மெட்ரிக் எக்ஸாம் எழுத அனுமதி கிடைத்தது. இத்துணைக்கும் என் அப்பாவும் ஒரு கிராஜுவேட் தான். சென்னை நியூ காலேஜில் படித்தவர்.
படிப்பில் முதல் இரு இடத்தில் இருந்த நான், அவர் சொன்னதால், கொஞ்சம் அசால்ட்டாகவே படித்தேன். மெட்ரிக் எக்ஸாம் காலையில் பள்ளியில், எல்லாரும் பரபரப்பாக படித்து கொண்டிருக்க, ஜாலியாக அந்த சூழ்நிலையை ரசித்தவாறு கேட்வாக் போய் கொண்டிருப்பேன்!!
மதிப்பெண் வந்தது! 927/1100 .......வருடம் 1993! ஆனால், ஆங்கில பாடத்தில் மட்டும், பள்ளியில் முதலிடம், மாவட்டத்தில் இரண்டாம் இடம்...எடுத்து என்ன பிரயோசனம். அதற்காக பரிசு வாங்கிய போது எடுத்த புகைப்படத்தை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுவதை தவிர்த்து என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை!
எங்க பிரின்சிபாலும் வைஸ் பிரின்சிபாலும் என் நிலை கேள்விபட்டு, எங்கள் வீட்டுக்கே வந்து விட்டார்கள். என் தந்தையிடம் எடுத்து சொல்லி, என்னை படிக்க வைக்க சொன்னார்கள். ஆனால், எனக்கு அனுமதி கிடைத்ததோ, கரெஸ்ஸில் படிக்க மட்டும்!
அப்பாவுக்கு சீக்கிரம் எனக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்ற எண்ணம். அதனால், கொஞ்சம் வீட்டு வேலைகளை பழக வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்! ஆக, என் படிப்பு தபால் வழியில் தொடர்ந்தது!
எனக்கு நானே ஆசான்! ப்ளஸ் ஒன் படிக்காமல் நேரடியாக ப்ளஸ் டூ! ட்யூசன் கூட கிடையாது. பத்தாவது முடித்து கண்டிப்பாக ஒரு வருடம் இடைவெளி விட்டு தான் ப்ளஸ் டூ பரிச்சை எழுத வேண்டும் என்பது அன்றைய விதி! பைத்தியம் போல் இரவெல்லாம் படித்து கொண்டிருப்பேன்....
ஆங்கிலமும், தமிழும் தவிர்த்து, அக்கவுண்டன்ஸி, எகனாமிக்ஸ், காமர்ஸ், அட்வான்ஸ்டு இங்கிலீஷ் ஆகியவை என் பாடங்கள். என் பள்ளி ஆசிரியைகளை மானசீக குருவாக கொண்டு ஏகலைவன் கதை தான் என்னுடையதும்...
எல்லாம் முடிந்தது, பரிச்சைக்கு பணமெல்லாம் கட்டியாகிவிட்டது, இன்னும் ஒரு மாதம் தான் பரிச்சைக்கு! அப்போது, எனக்கு திருமணம் பேசி முடித்து விட்டார்கள்.
அவ்வளவுதான், என் மனதிலிருந்த, கீட்ஸும் பைரனும் ஷெல்லியும் மறைந்து, முகமறியாத மஜ்ஹர்(என்னவர்) வந்து ஆக்ரமித்து கொண்டார்! என் காமர்ஸ் எக்ஸாம் அன்று மாலை எனக்கு நிச்சயதார்த்தம்...என்னால் படிக்கவே முடியவில்லை!
நான் பரிச்சை எழுத போவதில்லை, எழுதினால் ஃபெயிலாகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது என்று என் அப்பாவிடம் சொன்னேன். ஆனால், அதுவரை என் படிப்பு பற்றி அக்கறை கொள்ளாத என் தந்தை, அப்போது, ‘ஃபெயிலானாலும் பரவாயில்லை, இவ்வளவு கஷ்டபட்டு படித்து விட்டாய், போய் எழுதி வா’ என்றார்!
எழுதினேன்...லெட்டர் ரைட்டிங்கில், டூ அட்ரஸ் எல்லாம் அவர் பெயர் போட்டு...பரிச்சை பேப்பரில் முதல் காதல் கடிதம்(!) எழுதியது நானாகத்தான் இருப்பேன்!
சரியாக திருமணத்தன்று (25 மே, 1995) ரிசல்ட்! ஆனால், நான் நாலு நாள் கழித்து அவருடன் சென்று தான் மதிப்பெண் பட்டியல் வாங்கினேன். முதன் முதலாக சுஹைனா மஜ்ஹர் என்று கையெழுத்திட்டு வாங்கினேன். எப்படியோ 75% வாங்கியிருந்தேன். ஆனால் ஆங்கிலத்தில் மட்டும் 184/200...மாநிலத்தில்(மாவட்டத்தில் அல்ல) மூன்றாவது இடத்தை விட கூடுதல்..., ஆனால்...கரெஸ்ஸில் படிப்பவருக்கு அங்கீகாரம் கிடையாதாம்!
அன்று தான் திருமணத்துக்கு பின், முதன் முதலாய் வெளியே போகிறோம், அதனால் போய் ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டு விட்டு, பாஸானதுக்கு இருவீட்டாருக்கும் முந்திரி கேக் வாங்கி போனது தனி கதை! (இதை எழுதும் போது, கூட கூட படித்த என்னவர், எத்துணை மணி, என்ன டிரெஸ் போன்ற டீடெயில்ஸ் எல்லாம் விட்டு விட்டாயே என்று கமெண்ட் அடிக்கிறார்...!)
அப்புறம் மூன்று வருடங்களுக்கு பின், என்னவர் உடல்நிலை சரியில்லாமல் போய் மீண்டதால், மீண்டும் B.A.ஆங்கில இலக்கியம் மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் கரெஸ்ஸில் படித்தேன், முடித்தேன். அடுத்து, அவருடைய பிஸ்னெஸுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில், M.Com அழகப்பாவில்...கரெஸ்ஸில்...
ஆனாலும், என் சிறு வயது கனவு ஒரு ஆசிரியை ஆக வேண்டும் என்பது...இதற்கு காரணம் எனக்கு கிடைத்த அற்புதமான டீச்சர்ஸும் அருமையான பள்ளியும்...என் திறமைகளை உரமிட்டு வளர்த்த பாசறை அது!
“We grow in the image of those we love" என்பது ஆங்கில பழமொழி, அதாவது, நம் அன்புக்குரியவர் போல ஆக வேண்டும் என்ற ஆசையில் நாம் வளர்கிறோம்...இப்போ, என் அன்புக்குரிய ஆசிரியைகள் போல ஆக வேண்டும் என்ற ஆர்வத்தால், மீண்டும் படிப்பை ஆரம்பித்தேன்.
தற்சமயம் கரெஸ்ஸில், M.A. ஆங்கில இலக்கியம் படித்து வருகிறேன். அதோடு, ஆசிரியர்குரிய படிப்பான B.Ed ம் சேர்ந்துள்ளேன். ஆம், பத்தாவதோடு, பள்ளி செல்வதை நிறுத்திய எனக்கு, இந்த 32 வயதில் மீண்டும் காலேஜ் லைஃப்!
என்னுடைய நியாயமான ஆசையை எப்போதும் நிறைவேற்றும் என்னவர், இப்போது, என்னுடைய இந்த ஆசையை (பி.எட்) நிறைவேற்றியுள்ளார். அதோடு, என் மாமனாரும் இதற்கு உறுதுணையாக உள்ளார். இந்த ஒரு வருட படிப்புக்கான கட்டணம் 45,000 ஆகும்.
எனக்கு காலேஜ் வரும் புதன் கிழமை அதாவது செப் 2. அன்று துவங்குகிறது. என் வயதையும், திறமையையும்(!) முன்னிட்டு, எனக்கு சில சலுகைகள் வழங்கி இருக்கிறார்கள். காலேஜில் நெட் அக்ஸெஸ் செய்ய எனக்கு அனுமதி தருவதாக சொல்லி இருக்கிறார்கள்...........எப்படியோ தெரியவில்லை?!
மொத்தத்தில் இனி காலேஜ் கலாட்டாக்களும் என் பதிவில் படிக்கலாம்.
காலேஜ் போக ஆரம்பித்தால்...எப்படி பதிவிடுவது என்று தான் புரியவில்லை...எப்படியும் தூங்கும் நேரத்தை குறைத்தாவது நெட்டுக்கு வருவேன்...பதிவிடுவதும் பதிலிடுவதும் குறைந்தாலும், என்னை மறந்து விடாதீர்கள்... நண்பர்களே....
-சுமஜ்லா.
.
.
Tweet | ||||
58 comments:
வீட்டில் போன் ஃபால்ட்! அதனால் நெட்டும்... எப்போ சரியாகுமோ தெரியவில்லை...அம்மா வீட்டிலிருந்து இந்த பதிவு... சரியானவுடன் என் பதில் இருக்கும்....
வருங்கால ஆசிரியருக்கு வாழ்த்துகள்..
கல்விக்கேது வயது. இப்போது கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க இருக்கும் உங்களை நினைத்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது.
Hi! Sister
I am your fan, your articles are very good and getting intrest to read. please write, everybody can write but not write the way to people read.
regards,
Rajababu.
உங்கள் பகிர்வு அருமை....
கல்லுரி மாணவியே:)))))))
அப்போ சிகிரமே ஒரு டீச்சரம்மாவ ... பாக்கலாம்னு சொல்லுங்க.....
வாழ்த்துகள்.....அக்கா...
வருங்கால ஆசிரியர் சுஹைனாவிற்க்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சுஹைனா, ரொம்ப ஆச்சரியமா இருக்கு , எப்படி இப்படி படிக்க முடிகிறது என்று, மீண்டும் வாழ்த்துக்கள்.
ஏன்னென்றால் இரண்டு மாதம், ஹிந்தி கிளாஸ், இரண்டு மாதம் கம்புயுட்டர் கிளாஸ் இடையில் தையல் போகவே படாத பாடு பட்டேன் நான்.
பிள்ளைகலையும் வீட்டையும் கவனித்து கொண்டு போவது ரொம்ப கடினம்,எல்லாம் ஈசியாக உங்கள் எண்ணம் பொல் அமைய என் வாழ்த்துக்கள்.
ரொம்ப சந்தோஷம்.B.Ed..regular-ல் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்.வெற்றி பெற வாழ்த்துகள்.வயது ஒரு தடையே இல்லை. சாதிக்க வாழ்த்துக்கள்.
உங்கள் கதையை கண்டு அசந்து விட்டேன்
தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களுடன் என்றுமிருக்க வாழ்த்துக்கள்
சகோதரி
வருங்கால ஆசிரியைக்கு என் உளமாற வாழ்த்துக்கள்
நெட் ஓக்கே! ஆனா ரொம்ப ஸ்லோவா இருக்கு!
//கல்விக்கேது வயது. இப்போது கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க இருக்கும் உங்களை நினைத்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது.//
ஹா...ஹா...என் மகள் எனக்கு ஏகப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்திருக்கிறாள், அதில் ஒன்று, க்ளாஸில் அமர்ந்து கொண்டு என்ன பதிவிடுவது என்று யோசிக்கக் கூடாது...
ம்ம்ம்ம்.இப்படி கல்யாணத்திற்கு பின் கல்லூரி சென்று படிக்கும் வாய்ப்பு பெண்களுக்கு மட்டுமே சாத்தியம்.
என் மனைவி பேராசிரியையாக வேலை பார்க்கும் கல்லூரி பக்கம் கூட என்னை வரவிடமாட்டார். :(
வாழ்த்துக்கள் சகோதரி.
Congratulations,College girl.Keep it up
////நெட் அக்ஸெஸ் செய்ய எனக்கு அனுமதி தருவதாக சொல்லி இருக்கிறார்கள்...........///
வாழ்த்துக்கள்...
Pereseverance always pays. Keep up the good effort. Praying for ur success.
//I am your fan, your articles are very good and getting intrest to read. please write, everybody can write but not write the way to people read.//
thank you brother! this is my 187th post, however, i have nearly 240 posts total saved as drafts in my blogger account. i will write definitely!
//அப்போ சிகிரமே ஒரு டீச்சரம்மாவ ... பாக்கலாம்னு சொல்லுங்க....//
படிக்கணும்னு ஆசைப்பட்டேன், படிக்கிறேன். ஒர்க் பண்ணனும்னு ஆசை இருக்கு, ஆனா, அது பற்றி இன்னும் முடிவு எடுக்கலை.........
//வருங்கால ஆசிரியர் சுஹைனாவிற்க்கு வாழ்த்துக்கள்//
நன்றி வசந்த்!
//பிள்ளைகலையும் வீட்டையும் கவனித்து கொண்டு போவது ரொம்ப கடினம்,எல்லாம் ஈசியாக உங்கள் எண்ணம் பொல் அமைய என் வாழ்த்துக்கள்.//
நன்றி அக்கா.........எப்படி எல்லாம் மெயிண்டெயின் பண்ண போறேனோ என்ற சிறு கவலை மனதில் இருக்கு! ஆனாலும், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை எக்கச்சக்கமாக இருக்கிறது!
//ரொம்ப சந்தோஷம்.B.Ed..regular-ல் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்//
ஆ.......ஒரு டீச்சரே இப்படி சொல்லும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு! சார்ட் ஒர்க் எல்லாம் என் மகள் செய்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்...
//உங்கள் கதையை கண்டு அசந்து விட்டேன்//
நன்றி சக்தி, எல்லாம் இறைவன் செயல்!
//என் மனைவி பேராசிரியையாக வேலை பார்க்கும் கல்லூரி பக்கம் கூட என்னை வரவிடமாட்டார். :(//
ஒருவேளை அழகான பெண்கள் நிறைய இருப்பதால் இருக்குமோ?! :)
பஷீர், சப்ராஸ் அபுபக்கர் மற்றும் பெயர் தெரியாத சகோதரருக்கும் நன்றி!
//என் மகள் எனக்கு ஏகப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்திருக்கிறாள், அதில் ஒன்று, க்ளாஸில் அமர்ந்து கொண்டு என்ன பதிவிடுவது என்று யோசிக்கக் கூடாது...//
ம்...நல்ல இன்ஸ்ட்ரக்ஷன் தான். ஆனால் மற்ற நேரங்களில் யோசிக்க அனுமதி உண்டு இல்லையா? ஏன் என்றால் உங்களின் சுவாரஸ்யமான பதிவுகள் கிடைக்காமல் போய் விடுமே என்ற கவலை தான். ஹி..ஹி...
அப்போ இனிமே காலேஜு கலாட்டாவையும் நாங்க படிக்கலாம்,வாழ்த்துக்கள் டீச்சர்.
//ஆனால் மற்ற நேரங்களில் யோசிக்க அனுமதி உண்டு இல்லையா? //
ம்...கைபாட்டுக்கும் எழுதிக்கிட்டு இருக்கையில் மூளை வேற யோசிச்சிட்டு இருக்கும்! இது தான் மல்டி டாஸ்க்கிங் என்பது...
அவள் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷன் எல்லாம் அவள் ப்ளாகில் ஒரு பதிவாவே போட சொல்கிறேன்.
நன்றி பீஸ் ட்ரைன்.........உங்க வாழ்த்துக்கு!!!!
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
அன்புடன்
பிருந்தா
மனமார்ந்த வாழ்த்துக்கள் சுமஜ்லா, கல்யாணமான பின் புகுந்த வீட்டு ஆதரவுடன் மேற்கல்வி கற்கும் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.
வருங்கால ஆசிரியருக்கு வாழ்த்துகள்!!!
வாழ்த்துகள்...தங்கள் விடாமுயற்சி வியக்க வைக்கிறது! :-)
மொத்தத்தில் இனி காலேஜ் கலாட்டாக்களும் என் பதிவில் படிக்கலாம்.]]
ஹையா ஜாலி - போடுங்க போடுங்க
------------
வாழ்த்துக்கள் சகோ! குடும்ப சூழ்நிலைகளால் படிப்பை கோட்டைவிட்டவர்களுக்கு உங்கள் முயற்சி ஒரு படிப்பினை. எனக்கு மிகவும் பிடித்ததும் ஆசிரியர் பணிதான்.
வருங்கால அருமையான ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
வாழ்த்துகள்..
http://kavikilavan.blogspot.com
கல்லூரி படிப்பு இனிதாய் தொடர வாழ்த்துக்கள்... நீங்கள் இப்பொழுதும் ஆசிரியைத்தானே..ஏனெனில் நிறைய விசயம் சொல்லித்தருகிறிர்கள்..ஆகவே நிகழ்கால+வருங்கால ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்.
//உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
அன்புடன்
பிருந்தா//
நன்றி பிருந்தா...எப்போதும் என் உற்ற தோழியாக இருந்து வருகிறீர்கள்.
// சின்ன அம்மிணி said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் சுமஜ்லா, கல்யாணமான பின் புகுந்த வீட்டு ஆதரவுடன் மேற்கல்வி கற்கும் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.//
புகுந்த வீடு என்று இல்லாமல், இங்கே நானே ராஜா நானே மந்திரி...அந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவள்
// gulf-tamilan said...
வருங்கால ஆசிரியருக்கு வாழ்த்துகள்!!!//
// சந்தனமுல்லை said...
வாழ்த்துகள்...தங்கள் விடாமுயற்சி வியக்க வைக்கிறது! :-)//
நன்றி கல்ஃப் தமிழன்; நன்றி சந்தனமுல்லை!!!
//மொத்தத்தில் இனி காலேஜ் கலாட்டாக்களும் என் பதிவில் படிக்கலாம்.]]
ஹையா ஜாலி - போடுங்க போடுங்க//
ஆனா, பி.எட் கோர்ஸ் காலேஜ் மாதிரி இருக்காது, ஸ்கூல் மாதிரி இருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க..... எல்லாருக்கும் யூனிஃபார்ம் சாரி கூட உண்டு!
//வாழ்த்துக்கள் சகோ! குடும்ப சூழ்நிலைகளால் படிப்பை கோட்டைவிட்டவர்களுக்கு உங்கள் முயற்சி ஒரு படிப்பினை. எனக்கு மிகவும் பிடித்ததும் ஆசிரியர் பணிதான்.
வருங்கால அருமையான ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி தமிழ் நாடன்....அறிவு இருந்தும் அதை மேம்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது என் விஷயத்தில் முழுக்க முழுக்க உண்மை!
நன்றி யாதவன்!
நன்றி அதிரை அபூபக்கர், என்னை தற்போதே ஆசிரியை ஆக்கி விட்டீர்கள் :)
சுமஜ்லா வாழ்த்துக்கள். சும்மா பயப்படாம போயிட்டு வாங்க, வீட்டு வேலை பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க அதெல்லாம் செய்யவெச்சிடலாம்:)
என்னையும் என் வீட்டுக்காரர் MBA பண்ணச்சொல்றார்'அதுக்கு நான் சொன்னேன் நாந்தான் படிச்சு முடிச்சுட்டேன்!!! இன்னும் எதுக்கு படிக்கனும்னு!!!!
பார்ப்போம் அடுத்த வருஷம் பையனை ஸ்கூல்ல சேர்த்திட்டு நானும் சேரலாம்னு இருக்கேன்:)
//என்னை மறந்து விடாதீர்கள்... நண்பர்களே....//
மறக்கமாட்டோம்.. மறக்கமாட்டோம்..
போய் நல்லா படிச்சிட்டு வாங்க டீச்சர்!!
உங்கள பாத்த பிறகு.. நானும் ஸ்கூல்ல சேர்லாமுன்னு இருக்கேன்!
பின்ன.. நான் பச்சபுள்ளைங்க!!
//வீட்டு வேலை பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க அதெல்லாம் செய்யவெச்சிடலாம்//
அப்படீங்கறீங்க.... பார்க்கலாம்....
அவரே சொல்லும் போது, M.B.A பண்ணுங்களேன்... இப்ப, மேரேஜ் ஆகி படிப்பதும், படிக்கும் போதே, ரகசியமா மேரேஜ் பண்ணுவதும் பேஷன் தானேப்பா :)
நன்றி கலையரசன்,
இதே பச்சபுள்ள டயலாக்கை இன்னொரு இடுகையில் கீழும் பார்த்தேன். எத்துணை பேர் கிட்ட இப்படி டுபாக்கூர் விட்டுட்டு இருக்கீங்க??????
//உங்கள பாத்த பிறகு.. நானும் ஸ்கூல்ல சேர்லாமுன்னு இருக்கேன்!//
வாத்தியாராவா?
அக்கா, அப்புடியே ஒரு கலர் குடை , முடிஞ்சா ஒரு கண்ணாடி வாங்கிகோங்க ..
முடிஞ்சா எங்க காலேஜ் வாங்க ,
பேசாத ,படி அப்புடிலா இனிமே எழுதுவீங்க ....
http://saidapet2009.blogspot.com/2009/08/blog-post_7632.html
பெண்கள் மனதில் இடம் பிடிக்க எவ்வளவு செலவாகும்
//மொத்தத்தில் இனி காலேஜ் கலாட்டாக்களும் என் பதிவில் படிக்கலாம்.//
ஆமாமா அதோட எஃபக்ட் நீங்க அப்பொபோ மொக்கை போடும்போதே தெரிஞ்சுடுச்சு!! ஹி..ஹி
வாழ்த்துக்கள் சகோதரி!! தொடருட்டும் சாதனைகள்.
All the Best Sister... See you soon as a Teacher...
அன்பு சகோதரி
தங்கள் பணி சிறக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
நெல்லைமுகேஷ்.
//ஆமாமா அதோட எஃபக்ட் நீங்க அப்பொபோ மொக்கை போடும்போதே தெரிஞ்சுடுச்சு!! ஹி..ஹி//
மொக்கை இல்லாட்டி வாழ்க்கை சக்கையா போயிடும்...இந்த மொக்கை பஞ்ச் எப்படி இருக்கு?
//அக்கா, அப்புடியே ஒரு கலர் குடை , முடிஞ்சா ஒரு கண்ணாடி வாங்கிகோங்க ..
முடிஞ்சா எங்க காலேஜ் வாங்க ,
பேசாத ,படி அப்புடிலா இனிமே எழுதுவீங்க ....//
காலேஜ் போறதுக்கு முன்னாடியே கலாட்டா ஆரம்பிச்சிட்டீங்களா?
பாருங்க...நான் என் பிரின்சிகிட்ட...ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்வேன், பாருங்க...எனக்கு எவ்ளோ ஃபேன்ஸ்.... அதுவும், அந்த பேன்ஸ் எவ்ளோ கலாட்டாஸ் பண்ணியிருக்காங்கன்னு.......:)
பி.கு. உங்க காலேஜ் எங்கேனு சொல்லலையே? வந்திருவேனு பயமா?
//பெண்கள் மனதில் இடம் பிடிக்க எவ்வளவு செலவாகும்//
மனைவியா இருந்தா...ஒரு முழம் பூ போதும்!
அன்புடன் வாழ்த்திய, கிருஷ்ணா, ஷபி, முகேஷ், டிட்டோ, எல்லாருக்கும் மனங்கனிந்த நன்றிகள்!!!
//ஒரு வருட படிப்புக்கான கட்டணம் 45,000 ஆகும்.//
இவ்வ்வ்ளோவா?
//காலேஜ் கலாட்டாக்களும் என் பதிவில் படிக்கலாம்.//
நீங்களும் கலாட்டா செய்வீங்களா? ராக்கிங் இருக்கும், பயந்துறாதீங்க.
வாங்கம்மா வாத்தியாரம்மா...
வரவேற்பு தந்தோமம்மா...
//இவ்வ்வ்ளோவா?//
ஒர்க் பண்ணுவது பற்றி இன்னும் முடிவெடுக்கல. படிக்கணும்னு ஆசைப்பட்டேன் படிக்கிறேன். அவ்வளவு தான்....சோ, ரிடர்ன்ஸ் பற்றியெல்லாம் கவலை பட கூடாது!
//நீங்களும் கலாட்டா செய்வீங்களா? ராக்கிங் இருக்கும், பயந்துறாதீங்க.//
ராக்கிங்கா...என்கிட்டயா? நான் யாரு? ரவுடி ராக்கம்மா ரேஞ்சுக்கு ஆடிட மாட்டேன். (இது ஒரு வருட கோர்ஸ் என்பதால், நோ சீனியர்ஸ்)
//வாங்கம்மா வாத்தியாரம்மா...
வரவேற்பு தந்தோமம்மா...//
நன்றி...பாட்டின் மூலம் உங்க வயதை சொன்னதற்கு!!!!!
வாழ்த்துக்கள் சகோதரி. கல்லூரி நாள்கள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
தந்தை தவறிழைத்திருந்தாலும் கணவர் உறுதுணையாய் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களின் பெண் பிள்ளைகளை அவர்கள் எவ்வளவு உயரம் படிக்க விரும்புகிறார்களோ அவ்வளவு உயரம் படிக்க வைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். வாழ்க முஸ்லிம் பெண் கல்வி.
வாழ்த்துக்கள் சுஹைனா.
மலைப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது உங்கள் கல்விப் பயணம்.
படிக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் தீராமலிருக்கிறது கண்டு மகிழ்ச்சி.
தொடருங்கள்.
Post a Comment