எந்த இடம்...எந்த இடம்...? கண்கள் தேடியபடி நோக்க, தூரத்தில் சிரித்தது பேனர். சர்ரென்று என் ஸ்கூட்டியை கொண்டு நிறுத்தி, பார்த்தால், ஏகப்பட்ட பேர், டீ குடித்தபடி நின்றிருந்தனர். ஆஹா...இத்துணை பேரா? நம்மை தெரிந்து கொள்வார்களா? என்ன மாதிரி வரவேற்பு இருக்கும்??? திக் திக் என்று மனம் அடித்துக் கொண்டது. அதோடு, பெண்கள் யாரையும் காணோம்...கம்பெனிக்கு ஆள் இல்லாமல், நாம் மட்டும் மாட்டிக் கொண்டோமோ?
நல்லவேளை என் பர்தாவை வைத்தே அடையாளம் கண்டு விட்டனர். படியேறினால், எல்லாரும் பேட்ஜ் குத்திக் கொண்டு...!மணி அப்போது 4.15.
உள்ளே போனால், அங்கு பதிவர் ரம்யாவும், முருக.கவியும் அமர்ந்திருந்தனர். ஆஹா, இரண்டு பெண் வலைஞர்களாவது வந்திருக்கிறார்களே...சந்தோஷமாக அவர்கள் அருகில் போய் அமர்ந்தேன்.
சரியாக 4.30க்கு பங்ஷன் துவங்கியது. கதிர், வலைச்சரம் சீனா, பழமைபேசி, தமிழ்மணம் காசி, செந்தில், அகநாழிகை வாசுதேவன், பரிசல்காரன், வால்பையன், தண்டோரா, ஆரூரான், க.பாலாசி, கோடீஸ்வரன், வானம்பாடி, நாகா, ஜெர்ரி ஈசானந்தா, கேபிள் சங்கர், பட்டர்ப்ளை சூர்யா, லதானந்த், நாமக்கல் சிபி, வெயிலான், தேவராஜ் விட்டலன், எம்.எம்.அப்துல்லாஹ் இன்னும் பெயர் விடுபட்ட நிறைய பதிவர்கள் வந்திருந்தனர்.
கிட்டத்தட்ட ஹால் நிரம்பி விட்டது. சிறிது நேரத்தில், என் கணவரும் மகன் லாமினுடன் வந்து, நல்லதொரு பார்வையாளராக கடைசியில் அமர்ந்து கொண்டார்.
ஆரூரான் தலைமை தாங்கி நடத்தித் தர, ஈரோட்டைச் சேர்ந்த முருக.கவி என்னும் பெண்பதிவரின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கியது. ஒரு சிலரை ஸ்டேஜுக்கு அழைத்தனர். நானும் அழைக்கப்பட்டேன். ஆளுக்கு ஐந்து நிமிடங்கள் பேச அழைத்தனர். என்னிடம் ப்ளாக் தொழில் நுட்பம் பற்றி பேசச் சொன்னார்கள்.
நான் சொல்ல நினைத்ததை ஐந்து நிமிடத்தில் சொல்ல முடியவில்லை. ஆனாலும், ஒரு சில கருத்துக்களை மட்டும் முன்வைத்து பேசினேன். அடுத்தடுத்து ஒரு சிலர் பேசியதும், ‘ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்’ தொடங்கப்பட்டது. அதற்கான பேனர் ஸ்டேஜில் ஒட்டப்பட்டது.
அதன்பின், கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு தலைமை தாங்க, ஒரு நான்கு ஐந்து பேர் அழைக்கப்பட்டனர்(பெயர் மறந்து போச்சு...எதுக்கைய்யா வம்பு? அதான் நாலைந்து பேருன்னு பொத்தாம்பொதுவா போட்டுட்டேன்)
அனானி கமெண்ட்ஸ் பற்றியே ஒரு அரைமணி நேரம் விவாதம் நடந்தது. அடுத்தது, ப்ளாகில் கருத்து சுதந்திரம் பற்றி பேசினார்கள், பிறகு விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவது(ஆட்சென்ஸ்) இன்னும் சில விஷயங்கள் அலசப்பட்டன.
இறுதியாக, கதிர் அவர்கள், இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்னணி பற்றி அருமையாக சொன்னார். அதோடு, பின் நடக்க இருக்கும் விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.
முடிந்தபின், எல்லாரும் ஒருவருக்கொருவர் அளவளாவி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம். எல்லோர் முகத்திலும், சிரிப்பு, வியப்பு, ஆச்சரியம், கலவையான உணர்வுக் குவியல்கள்.
சைவ, மற்றும் அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இட்லி, தோசை, சிக்கன் ப்ரை, சிக்கன் கிரேவி, ப்ரைட் ரைஸ், சில்லி கோபி, ஆம்லெட், புரோட்டா, தயிர் சேமியா, காளான் கிரேவி, பாயாசம், பழம், பீடா என்று பிரமாதமான பஃபே டின்னர்.
ஒருவருக்கொருவர் போன் நம்பர் பரிமாறிக் கொண்டு, பிரியா விடை பெற்று பிரிந்தோம். என்றென்றும் மனதில் நிற்கும்படியான ஒரு அருமையான சந்தோஷம் தந்த சந்திப்பு இது!
சில ஹைலைட்ஸ்:
* நிறைய பதிவர்கள் நான் நினைத்ததை விட ரொம்பவும் சின்னப் பசங்களாக இருந்தார்கள். அதில் முக்கியமானவர்கள், பரிசல்காரன், பழமைபேசி ஆகியோர்.
* வாலு, மப்பில் வந்து எடக்குமடக்காக கேள்விகள் கேட்டு, அதகளம் செய்து, தன் இமேஜைக் குறைத்துக் கொண்டார்.
* எல்லா ப்ளாகரும், அவரவர் பெயருடன் ப்ளாக் பெயரையும் சொல்லி அறிமுகம் செய்து கொண்டனர்.
* அறிமுகத்தின் போது, என் பையன், மைக் வாங்கி, ‘என் பெயர் லாமின் முஹமது. என் ப்ளாக் பெயர் சுட்டீஸ் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் காம்’ என்று மழலையில் கூறி அப்ளாஸ் வாங்கிக் கொண்டான்.
* ஈரோடு பதிவர் குழுமத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பரிசல்காரன் கேள்வியை முன்வைத்தார்.
* ‘நான் மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருக்கேன். ப்ளாக் படிக்கறது தான் எங்க வேலையே!, அதுக்காதத்தான் எங்களுக்கு சம்பளம் தர்ராங்க’ இப்படி சொன்னார் ஒருவர்.
* நான் பர்தாவுடன் சென்றேன். கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன். என்னை வீடியோவிலோ, போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்
* அமீரகத்து நண்பர்கள் இருவர், என்னிடம் பேசியபோது, அங்கு என்னுடைய ப்ளாக் நன்கு ரீச் ஆகி இருப்பதாக சொன்னார். சந்தோஷமாக இருந்தது.
* என் மகன் சுற்றி சுற்றி வந்து, ஒருவர் விடாமல் போட்டோவில் சுட்டுத் தள்ளி விட்டான். இங்கு இருப்பது எல்லாம் அவன் எடுத்த போட்டோக்கள் தான்.
* நிகழ்ச்சியின் இறுதியில், ஈரோடு மாவட்ட வரலாறு என்னும் நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
* ‘வேர்களைத் தேடி’ குணசீலன், நல்லதொரு நண்பர். பதிவு ரொம்ப மெச்சூர்டாக இருந்தாலும், சின்னப் பையன் தான். சந்தித்தது மகிழ்ச்சி!
* அகநாழிகை. வாசுதேவன் அவர்களின் அகநாழிகை என்னும் பத்திரிக்கை (விலை ருபாய் 30) வாங்கினேன்.
* பதிவர் தேவராஜ் விட்டலன் அவர்கள், தான் எழுதிய கவிதை நூல், ‘கைக்குட்டை கனவுகள்’ என்னும் நூலை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
* ஈரோடு கதிர் அவர்களின் மனைவியும், குட்டி மகளும் வந்திருந்தார்கள். அவர் மனைவி ரொம்ப நல்ல டைப்!
*போனதும் அனைவருக்கும் பேட்ஜ் வழங்கினார்கள். அதை சந்தோஷமாக எல்லாரும் குத்திக் கொண்டோம்.
* தமிழ்மணம் விளம்பரம் ஸ்பான்சர் செய்ததால், தமிழ்மணத்தின் பேனர் வைத்திருந்தனர்.
* தமிழ்வெளி திரட்டியைச் சேர்ந்தவர், இது போன்ற சந்திப்புகள் பற்றி தகவல் தந்தால், தாமும் பங்கெடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.
* ப்ளாக் தொழில்நுட்பம் பற்றி பேசும் போது, ஜலீலாக்காவுடைய ப்ளாகை ஒருங்கிணைத்து ஒரே ப்ளாகாக மாற்றித் தந்தது பற்றி குறிப்பிட்டேன்.
* அனானி கமெண்ட்ஸை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு இல்லை என்று பரிசல்காரன் குறிப்பிட்டார். நானும் அதே கருத்தை முன்வைத்தேன்.
* ஒரு சில ‘வாலு’த்தனமான அதிகப்பிரசங்கிக் கேள்விகளும், தன்னை எல்லாரும் கவனிக்க வேண்டும் என்று சற்று ஓவராக ‘வாலா’ட்டியவர்களும் தவிர ரொம்ப அமைதியாக, டீசண்ட்டாக சந்திப்பு நடந்தது.
* லதானந்த், என்னிடம் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, என் கணவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
* எனக்குத் தெரியாத வேறு சிலரும், என்னைத் தெரிந்து வந்து பேசியபோது, சற்று பெருமையாகக் கூட இருந்தது.
* தீவிபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ரம்யா, அனைவரிடமும் அன்பாக பேசினார். அவர் சாஃப்ட்வேர் ஃபீல்டில் வேலை பார்க்கிறார்.
* கதிரின் நண்பர் ஒருவர் வீடியோ கவரேஜ் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
* நல்லதொரு சந்திப்பு! மனம் முழுக்க இனிப்பு! சுவையான விருந்து! திட்டமிட்ட ஏற்பாடுகள்! விழாக் குழுவினரையும், இதற்கு முதன்முதலாக விதை போட்ட கதிரையும் மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.
பி.கு. என் மகனின் அனுபவங்களை அவனுடைய ப்ளாகில் படிச்சிக்கோங்க: http://sutties.blogspot.com/2009/12/blog-post.html
-சுமஜ்லா.
Tweet | ||||
41 comments:
நன்றி சுமஜ்லா. கிட்டத்தட்ட முழு விவரங்களை தந்து விட்டீர்கள்.
”என் பர்தாவை வைத்தே அடையாளம் கண்டு விட்டனர்.”
”போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்”
அப்புறம் எப்புடி பாப்புலர் ஆவறது? ஆட்டோகிராப்பா போட்டு தள்றது?
சூப்பர் கவரேஜ்...
வாழ்த்துக்கள், ஈரோடு வலைப்பதிவர் குழுமத்திற்கு.
உங்களின் இந்த சந்திப்பை பற்றிய இடுகையை படித்ததும் நானும் விழாவில் பங்கேற்ற ஒரு உணர்வு,மிகசிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கீர்கள்..நன்றி !!
நேரில் கலந்துகொண்டதுபோல் இருந்தது அக்கா.
வாழ்த்துக்கள் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்திற்கு.
புதியதொரு தொடக்கம்....இனிதே யாவரும் இணைந்தே இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்...
அனுபவ பகிர்வு அருமை அக்கா இதைத்தான் எதிபார்த்தேன்...
வாழ்த்துகள் அக்கா...
வாழ்த்துக்கள், ஈரோடு வலைப்பதிவர் குழுமத்திற்கு.
நல்லதொரு முன்னேற்றம் வலைஞர்களிடம்.
ஆரோக்கியமான பாதையில் சென்றால் மிக்க சந்தோஷமே.
ஈரோடு பதிவர் வாசகர் சந்திப்பின் முதல்
பதிவு. நானுந்தான் வந்திருந்தேன்.
வாழ்த்துக்கள்.
அருமையா தொகுத்து சொல்லியிருக்கீங்க! நன்று சகோதரி...
பிரபாகர்.
வெல்லத்தில், அதன் இனிப்பைக் குறைக்கிற மாதிரி அல்லது இனிப்பின் மீது கவனம் செலுத்தவொட்டாமல், சில துரும்புகள் சிறிதாகவோ பெரிதாகவோ இருப்பது இயல்புதான்!
/,,,எடக்குமடக்காக கேள்விகள் கேட்டு, அதகளம் செய்து, தன் இமேஜைக் குறைத்துக் கொண்டார்./
கேள்விகள் கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டுமே என்பதை உணர்ந்து கற்றுக் கொள்ளும் காலம் வரும்வரை, இப்படி மப்பில் தன்னுடைய நல்ல விஷயங்களையே இழந்துவிடுகிற நிலையும் நம்மில் பலபேருக்கு வந்து விடுகிறது.
பதிவர் சந்திப்பைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக, அதே நேரம் மையக் கருத்து எதையும் விட்டு விடாமல் சொன்னதற்கு வாழ்த்துக்கள்!
//நான் பர்தாவுடன் சென்றேன். கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன். என்னை வீடியோவிலோ, போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்
//
மாஷா அல்லாஹ்,உங்கள் பண்பு என்னை கவர்கிறது.பெண்கள் உங்கள் இக்கருத்தை படிக்கவேண்டும்.
ஒரு பதிவரின் பார்வையில் சந்திப்பைக் குறித்த விமர்சனம் கண்டு மகிழ்ச்சி. அமீரகத்திலும் இது போன்ற ஒரு (சிறிய அளவிலான) சந்திப்பில் நான் கலந்துகொண்டேன். அதனால் உங்கள் நெகிழ்ச்சி எனக்கும் புரிகிறது.
என்ன பேசினீர்கள் என்பதையும் விளக்கமாக எழுதுங்கள் சுஹைனா.
பதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொண்டது போல் இருந்ததது - உங்களின் இந்த பதிவு.. மகிழ்ச்சி..
//ஈரோடு கதிர் அவர்களின் மனைவியும், குட்டி மகளும் வந்திருந்தார்கள். அவர் மனைவி ரொம்ப நல்ல டைப்!
//
அப்போ , கதிர் கெட்ட டைப்னு சொல்ல வரிங்களா? :)
சும்மா..
2 பதிவுக்கு ஒரே தலைப்பு வைத்தால் குழப்பம் வரும். மாற்ற முயற்சிக்கவும்.
இதுவரை ஐந்து பதிவர் சந்திப்பு பிலாக்கில் பார்த்தேன்,
ஆனால் இந்த ஈரோடு பதிவர் சந்திப்பு தனித்தன்மையுடன்,சந்தேகங்கள் கேட்டும் தெளிவடைந்தது ஒரிஜினலா இருக்கு சுஹைனா.
ரொம்ப அருமையான் கலந்துரையாடல்கள், பரிமாற்றங்கள். எல்லாமே நீங்கள் சொன்ன விதத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.
//ஆமாம் என் பிளாக்கில் ஒரு இரவில் எல்லாவற்றையும் ஒருகினைந்து ஆச்சரியப்பட வைத்து விட்டீர்கள் சுஹைனா.//
இரண்டு வருடமாக பிலாக் பற்றி அறிந்திருந்தும், இப்ப ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. ரொம்ப செம்மையாக போய் கொண்டு இருக்கு.
வாழ்த்துக்கள்.....
அன்பின் சுமஜ்லா
மிக நல்லதொரு பகிர்வுக்கு நன்றி
அருமையான தொகுப்பு
நல்ல பகிர்வு. நன்றி.
நான் இதுவரை எந்த பதிவர் சந்திப்பும் கலந்துகொண்டது இல்லை. இது போன்ற சந்திப்புகள் பெருமூச்சை வர வைக்குது.
உங்களையும்,உங்களவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரி. குட்டிப் பையனுக்கும் என் வாழ்த்துக்கள்..
முதல் தடவையாக உங்கள் பிளாக்கை வாசிக்கிறேன். நல்லா எழுதுறீங்க.நல்லா கவரேஜ் பன்னிருக்கிங்க.
உங்க மகன் பிளாக்கும் நல்ல இருக்கு
வாழ்த்துக்கள்.
நேர்முக வர்ணனைபோல அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
தாங்களும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தமைக்கும், இடுகைக்கும் நன்றிகள்...
விழா சிறப்பாக நடந்தது சந்தோசம்.
நிகழ்ச்சியைப்பற்றியான உங்கள் தொகுப்பு அழகாக இருந்தது.
நேரம் கிடைக்கும் போது அப்படியே எங்க வலைப்பூவையும் கொஞ்சம் பாருங்களேன்...
http://sangkavi.blogspot.com/
சூப்பர் :-)
எனக்கு ஏதுங்க இமேஜு!
விரிவான பதிவிற்கு நன்றி!
//
கேள்விகள் கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டுமே என்பதை உணர்ந்து கற்றுக் கொள்ளும் காலம் வரும்வரை, இப்படி மப்பில் தன்னுடைய நல்ல விஷயங்களையே இழந்துவிடுகிற நிலையும் நம்மில் பலபேருக்கு வந்து விடுகிறது.//
ஆச்சர்யம் பாருங்களேன், பள்ளிகளில் நம்மிடம் கேள்வி கேட்க்கப்டுகிறது, அப்படினா வாத்தியார்களுக்கு தெரியாமல் நம்மகிட்ட கேக்குறாங்களா?
(வாலுன்னா வால்தனம் இருக்கனும்)
சிறப்பான தொகுப்பு.
சுமஜ்லா விரிவா தகவல் தந்து இருக்கீங்க!..ஊரில் இருந்து இருந்தால் கலந்து கொண்டு இருப்பேன்
//அப்புறம் எப்புடி பாப்புலர் ஆவறது?//
நாம எழுதறது, நம்ம ஆத்ம திருப்திக்கு தான்! எதுக்குங்க பாப்புலர் ஆகணும்?!
என் பதிவை ரசித்து படித்த யாவருக்கும் என் நன்றிகள்!
சஞ்சய், இதுக்கு பேரு தான் போட்டுக் கொடுக்கிறது? இப்படி எத்துணை பேருங்க கிளம்பி இருக்கீங்க???
ரொம்ப வாலாட்டினா ஒட்ட நறுக்கிடுவேன்னு எதுக்கு பெரியவங்க சொல்றாங்கன்னு இப்ப தான புரியுது!
தலைப்பு வேற குழுப்பமா போச்சா? ‘தரும்’ என்பதை ‘தந்த’ என்று மாற்றி இருக்கிறேன், இருந்தாலும், கொஞ்சம் குழுப்பம் தான். அதோடு, ஈரோடு பதிவர் சந்திப்பு என்று கூகுளில் தேடுபவருக்கு என் பதிவு எளிதில் கிடைக்காது!
மனம் திறந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள் சுஹைனா.
அருமையான பகிர்வு சகோதரி.
வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.
சுமஜ்லா, நல்ல தொகுப்பு. மனதில் பட்டதை வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!!
பாத்திமா ஜொஹ்ரா said...
//நான் பர்தாவுடன் சென்றேன். கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன். என்னை வீடியோவிலோ, போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்
//
மாஷா அல்லாஹ்,உங்கள் பண்பு என்னை கவர்கிறது.பெண்கள் உங்கள் இக்கருத்தை படிக்கவேண்டும்//
muslim girls endru irukkavendum.partha podatha matra mathathu penkal panpu kettavargala? manasaatchiyai ketu sollungal.
ivaikal thanippatta viruppam enpathu en karuthu.
pinnootam iduvathu en nokkam illai. summaa vilakkave
என் அறிமுகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதாி,,
அழகான வர்ணனை .........பாராட்டுக்கள்.
அன்பின் சுமஜ்லா
அருமையான இடுகை - சந்திப்பின் முக்கிய அம்சங்களை அழகாகத் தொகுத்து வெளியிட்டமை நன்று
நல்வாழ்த்துகள் சுமஜ்லா
அட, உங்களை நான் இலால்பேட்டையில்
எதிர்பார்த்திருக்க...
நீங்களோ பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு
விட்டீர்கள்.
இருப்பினும் சுவையான தொகுப்பு.
நிஜாம் அண்ணா,
நான் ஏன் இலால்பேட்டை வர நினைத்தும் முடியவில்லை என்பது என்னுடைய அடுத்த பதிவை படித்தால் புரிந்திருக்குமே?!!
அதோடு அன்று காலை இங்கு ஒரு முக்கியமான திருமணம். அதுவும் என் பதிவில் இருக்குமே?!
உங்க மறுமகன் திருமணம் நல்லபடியாக முடிந்ததா???
அல்ஹம்துலில்லாஹ், நல்லவிதமாய்
திருமணம் நிகழ்வுற்றது. மணமக்களின்
நல்வாழ்விற்காக துஆ செய்யுங்கள்.
அல்ஹம்துலில்லாஹ், நல்லவிதமாய்
திருமணம் நிகழ்வுற்றது. மணமக்களின்
நல்வாழ்விற்காக துஆ செய்யுங்கள்
Post a Comment