இதே ஆங்கிலத்தில் போட்டால் ஒரு ஒழுங்காக வரும், இடுகையின் தலைப்பே url ல் வரும். இப்போ நம் தமிழ் பதிவுக்கும் இது போல செய்யலாம். ஜஸ்ட் ப்ளாகரை கொஞ்சூண்டு ஏமாத்தினா போதும்...
இப்போ என்னோட, இந்த பதிவுகளின் url பாருங்க...
சொப்பன சுந்தரன் : http://sumazla.blogspot.com/2009/08/dream.html
ஐ யெம் எ காலேஜ் கேர்ள் : http://sumazla.blogspot.com/2009/08/collegegirl.html
கசாமுசானு வராம நீட்டா வருதல்லவா?
இது போல வர செய்ய, முதலில், உங்க போஸ்ட் தலைப்பை, ஆங்கிலத்தில் கொடுங்கள்...
அடுத்து, பதிவு போட்டோ போடாமலோ, PUBLISH POST கொடுங்கள். உடனே, EDIT POST கொடுத்து, SAVE NOW கொடுத்து விடுங்கள். இப்போ, உங்க இடுகை Draftsல் சேவ் ஆகி விடும்.
பின், நீங்கள், என்ன தலைப்பு வேண்டுமானாலும் தமிழில் மாற்றி, பதிவுகளை விரும்பிய வண்ணம் போட்டு மீண்டும், பப்ளிஷ் செய்தால்....இப்போ, முதலில் கொடுத்த ஆங்கில தலைப்பை ஒட்டி, நீட்டான url கிடைக்கும்!
பப்ளிஷ் செய்து பின் மீண்டும் சேவ் செய்வதற்குள் யாரேனும் பார்த்து விட கூடிய சாத்தியம் இருப்பதாக நினைத்தால், பழைய டேட் கொடுத்து பப்ளிஷ் செய்யலாம். பிறகு, மீண்டும் சரியான தலைப்பிட்டு பப்ளிஷ் செய்யும் போது, Post Options ல் போய் தேதி மாற்றி கொள்ளலாம்.
பாருங்க, இந்த பதிவின் url கூட http://sumazla.blogspot.com/2009/07/url.html என்பதாக உள்ளது. நான் SAVE செய்யும் போது, ஜூலை மாதத்தை தேர்ந்தெடுத்தேன், அதனால், 2009/07/url.html என்பதாக காட்டுகிறது. அதனால், பழைய தேதி தருவதிலும் சற்று கவனமாக இருங்கள்.
இதனால் என்ன பயன்?
ட்விட்டரில் நீங்கள் உங்கள் இடுகையை அப்டேட் செய்யும் போது, தமிழ் தலைப்பு போஸ்டிங்கானால், என்னவோ புரியாத மொழி போல், http://bit.ly/VmXxD என்பது போல காட்டும்.
இதுவே, நான் சொன்னபடி ஆங்கில தலைப்பிட்டு, பின் மாற்றம் செய்தால், ஒழுங்காக உங்கள் ப்ளாக் url காட்டும். இதை நானே தற்செயகாக கண்டு பிடித்தேன்.
இதை செக் பண்ண இங்கே சொடுக்கவும் : http://twitter.com/sumazla
-சுமஜ்லா
.
.
Tweet | ||||
13 comments:
இடுகை முகவரி url அழகாக வர ..அருமையாக சொல்லிவுள்ளீர்கள்...
ஆஹா!
பயனுள்ள தகவல்
மிக்க நன்றிங்கோ ...
Thanks
http://kavikilavan.blogspot.com
பயனுள்ள தகவல்
done
அட...யூஸபுல்லா இவ்ளோ மேட்டர் கிடைக்குதே உங்க வலைப்பூவில் !? நன்றி சுமஜ்லா .
:)
ஆஹா...அருமையான தகவல்....
நன்றி அக்கா...
அருமை,
நல்ல ஐடியா!
உங்கள் ‘பின்’னூட்டம் மூலம் ‘ஊக்கு’வித்ததற்கு அனைவருக்கும் நன்றி!!
ட்விட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்பதால், நாம் கொடுக்கும் சுட்டியை அது சுருக்கி தருகிறது என்று நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.
தெளிவுபடுத்தவும்.
மற்றபடி பயனுள்ள இடுகை.
ஆங்கிலமோ தமிழோ, ஹைஃபன் அல்லது அண்டர்ஸ்கோர், urlக்கு இடையில் வந்தால், அது உருமாற்றி விடுகிறது.... அது 140க்கு குறைவாக இருந்தாலும்... நான் கவனித்தவரை இது தான்.....
பயனுள்ள தகவல்
தகவலுக்கு நன்றி
Post a Comment