அதிகாலை, சிஸ்டத்தை ஆன் செய்தால், ஆனந்த அதிர்ச்சி! முகமறியா நண்பர் சோல்ஜர், என்னுடைய மயங்கும் இதயம் கவிதைக்கு மெட்டுப் போட்டு மியூசிக்குடன் பாடி பதிந்து அதற்கான சுட்டியும் கொடுத்திருக்கிறார், பின்னூட்டத்தில்!
என் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. நன்றி சோஜர்! குரல் வளம் மிக அருமை, அதோடு, வாத்திய இசையும், கிராபிக்ஸும், இனிய உணர்வலைகளால் ஸ்தம்பித்து விட்டேன்.
இது பின்னூட்டத்தோடு மறைந்து போய் விடக்கூடாது என்பதால் இப்பதிவு. என் மனதிலும், இந்த கவிதைக்கு ஒரு ட்யூன் இருந்தது. ஆனால், அதை விட சிறந்ததாக, இனிமையாக பாடி பதிந்த நண்பர் பாராட்டுக்குரியவர். வாழ்த்துக்கள் சோல்ஜர், தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க!
நான் பல முறை கேட்டு ரசித்ததை, நீங்களும் ரசியுங்கள். பிடித்திருந்தால், அவரை மனம் திறந்து பாராட்டுங்களேன். அதோடு, நிறைய ஓட்டுகள் தந்து அவரை உற்சாகப்படுத்த மறந்துராதிங்க!
இதற்கான லின்க், http://www.youtube.com/watch?v=R4fN7Oo0_2c
ஏன் பக்கத்தை புரட்ட வேண்டும் என்று, என் கவிதையின் வரிகளை மீண்டும் ஒரு முறை கீழே தருகிறேன்.
மயங்கும் இதயம்
வேப்பமர அசைவில் நான் பார்ப்பதென்ன
.....வேகம்போகும் காற்று காதில் சொல்வதென்ன!
காலம் நல்ல காலம் இனி எந்நாளுமே
.....கடந்துபோன சோகம் யாவும் பறந்தோடுமே!
பறக்கும் காகம் சிறகை ஆட்டி கரைவதென்ன
.....பாடும் குயிலின் பாட்டிலுள்ள அர்த்தமென்ன!
மழையின் தூறல் குளிரும் சாரல் ஊதலென்ன
.....மண்ணின் வாசம் நெஞ்சின் ஆழம் இனிப்பதென்ன!
தூறல் பட்டு பறவை யாவும் தூங்கப் போனதோ
.....மரத்தின்கைகள் மழையின்சுகத்தில் ஆட்டம் கொண்டதோ!
வெள்ளைக்கொக்கு தொல்லையென்று கூட்டைத் தேடுதோ
.....எல்லாம் இனிமேல் இன்பம் இன்பம் ராகம் பாடுதோ!
தென்றல் சுகத்தில் மயங்கும் இதயம் துணையைத் தேடுதே
.....கைகள்கோர்த்து நெஞ்சில்சாய்ந்து கதைகள் பேசுதே!
கன்னத்திலே இதழ்கள் பேசி காதல் செய்யுதே
.....எண்ண மெல்லாம் இனிமைபொங்கி நிரம்பி வழியுதே!
கண்ணில் நிறைந்த காதல்மச்சான் நெஞ்சம் சேருதே
.....காதல்குயிலின் கானம் கேட்டு உள்ளம் மயங்குதே!
சிலுசிலுவென்று தழுவும் காற்று சிந்தை யள்ளுதே
.....சிரிப்பு இனிமேல் நிரந்தரமென்று என் மனம் பாடுதே!
இதன் ஆங்கில ஆக்கம்:
-சுமஜ்லா

In A Rainy Evening...
What
do I see in the swaying neem leaves?
what
message the moving breeze leaves?
Good
time started in all my ways
Gone
are the sorrows of the olden days
The
crows flap theirwings at ease
Why
does the cuckoo sing to appease?
Showers
of rain and the blows of the breeze
And
the smell of the soil surpasses all these.
Why
do all the birds go to rest?
Why
do the branches think rain the best?
Does
the white crane search its nest?
And
sings the happy tune with zest?
Searches
its mate, the love sick heart
with
joined hands the love does start.
The
lips speak with cheeks to date
And
the brimming happiness will stand apart.
Towards
the sweetheart the thoughts do go
The
song of the lovebirds reduces the woe
Mind
is entranced by the breezes’ blow
Blissful
smile now starts to show. -சுமஜ்லா
Tweet | ||||
25 comments:
மீ த பர்ஸ்ட்! இன்று வரை அவர் என் எழுத்தின் ரசிகர்! இன்று முதல், நான் அவர் பாடலின் ரசிகர்! வாழ்த்துக்கள் நண்பர் சோல்ஜருக்கு!
வாழ்த்துகள் உங்கள் இருவருக்குமே!.
--------------------
என் எழுத்துகளுக்கு
இரசிகன் ஆனாய்
உன் இரசனைக்கு
இரசிகை ஆனேன்
இதயம் வருடிய இசை...மெல்லிசை மெலடியாய் பனித்துளியாய் கண்ணீர் துளி....உங்கள் ரசிகர் என்பதையும் உங்கள் எழுத்தின் பால் அவர் கொண்ட ஈடுபாட்டை காட்ட இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் வென்றது உன் எழுத்துக்கள் மட்டுமல்ல சுமா அவர் நட்பும் அதன் மேல் அவர் கொண்ட மதிப்பும் தான்..ஒரு ரீகார்டிங் தியேட்டரில் இருந்த உணர்வு..வாழ்த்துக்கள் சோல்ஜர் உங்கள் குரல் ரொம்ப இனிமையாய் இருக்கிறது...தென்றால் வருடியது இன்றைய என் காலைப் பொழுதை.....
S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நல்லா இருக்கே. மெட்டுப் போட்டு பாடினால் இன்னும் நல்லா இருக்குமோ
August 6, 2009 10:35 AM
நான் போட்ட பின்னூட்டம் உண்மையாயிடுச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.
பாடலை முழுமையாக கேட்கமுடியவில்லை (நெட் ஸ்லோ எனபதல்) குரல் வளம் மிகவும் அருமை.. உங்கள் கவிதைக்கு உயிரோட்டம் தந்தவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நவாஸ், உங்க வாக்கு பலிச்சிடுச்சு, இன்னும் பல (நல்ல) விஷயங்களில் பலிக்கப்போகுது. அது பற்றி, விரிவாக பின்னால் பதிவு போடுகிறேன்.
நன்றி பாயிஜா, நெட் ஸ்லோவாக இருப்பவர்கள், முதன்முறை பாட விட்டு விட வேண்டும். அப்போ அது Buffer ஆகி விடும். பின் உடனே மீண்டும் உடனே பாடவிட்டால், தெளிவாக பிசிறில்லாமல் கேட்கலாம், எத்துணை முறை வேண்டுமானாலும்.
Nice Sumazla.
Superb Soldier.
வாழ்த்துக்கள், என்னால் கேட்க முடியல.
பிறகு முயற்சி செய்து பார்க்கிறேன்.
எல்லோருக்கும் மிகுந்த நன்றி. அன்பு கலந்த வார்த்தைகளுக்கும் பரிவு கொண்ட பாராட்டுகளுக்கும்.
இந்த பாட்டில் என் சுருதி கொஞ்சம் தளம்புகிறது. ஆகையால் கூடிய சீக்கிரம் பன்னிரண்டு நரம்பு வாத்தியத்தில் (12 String Guitar) பாடி அந்த இணைப்பை சுமஜ்லா அவர்களுக்கு அனுப்பிகிறேன்.
நம் எல்லோருக்கும், நாட்கள் நலமாக, வாரங்கள் வளமாக, மாதங்கள் மகிழ்ச்சியாக, வருஷங்கள் அதிஷ்டமாக என்றும் விரும்பும்
அன்புடன் உங்கள் நண்பன்.
ரியலி கிரேட் வாய்ஸ்
கவிதைக்கேற்ற ராகத்துடன் சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் இருவருக்கும்
பாடல் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. அதன் எம்பீத்ரீ அல்லது வேவ் பார்மட் அனுப்பினால் என்னால் அதற்கு ஆர்கெஸ்ட்ரா சேர்த்து த்ரீ டி எபெக்ட் தர முடியும்.
http://kgjawarlal.wordpress.com
kgjawarlal@yahoo.com
நண்பர் ஜவஹர்லாலுக்கு,
என்னிடம் எதுவும் இல்லை. எனக்கு சோல்ஜரின் ஈமெயில் ஐடி கூட தெரியாது.
நண்பர் சோல்ஜருக்கு,
ஜவஹர்லால் கோரிக்கையை பரிசீலியுங்கள். விரும்பினால், உங்கள் குரல் பதிவை அவருக்கு அனுப்பினால், இந்த வீடியோவுடன் அதையும் போடலாம்...
பாராட்டுக்கள் சுமஜ்லாவுக்கு.
பாராட்டுக்கள் சோல்ஜருக்கு.
எளிய வார்த்தைகளில் கவிதை.
வசீகரமான சரீரத்துடன் பாடல்.
பாடலாசிரியர் ஆயிட்டீங்க சுமஜ்லா!
நல்ல பாடகர்தாங்க சோல்ஜர்!
நண்பர்களே,
இந்த அருமையான, இனிமையான கவிதையை ஒரு இயல்பான போலியில்லாத சங்கீதத்திலும் ஒரு எளிமயையான குரலிலும் விட்டு விட்டால், அது ஓர் பெருமை என்று என் பணிவான கருத்துக்கள்.
மிகுந்த நன்றி நண்பர் ஜவஹர்லாலுக்கு,
அன்பு நண்பன்.
இந்த பாடல்களின் சில வரிகளை நீங்கள் மாற்றினால், சின்ன குழந்தைகளும் பாடலாம் ஒரு மழை பெயத பின் பாடும் ஒரு மகிழ்ச்சி பாட்டாகும் . மெட்டு போட்டுவிட்டேன்.
நண்பர் சோல்ஜருக்கு,
இது வாழ்வின் பெருந்துன்பத்துக்கு பின் ஏற்பட்ட அமைதியில், ரசித்து எழுதியது. இது போல இன்னும் நிறைய பாடல் வகை கவிகள் எழுதியுள்ளேன்.
நீங்கள் என் ப்ரொஃபைலின் கீழ் இருக்கும் மின்னஞ்சல் லின்க் மூலம் ஒரு டெஸ்ட் மெயில் தாருங்களேன். விரிவாக பேசலாம்.
சுமஜ்லா அவர்கள் நேற்று என் பின்னூட்டத்தில்
உள்ள ஒரு பிழையை கவனிக்கவில்லை என்று
நினைக்கிறேன்.
தட்ட நினைத்தது: 'சாரீரம்' (குரல்).
தட்டி முடித்தது : 'சரீரம்' (உடல்).
எனவே, பின்வருமாறு மாற்றிப் படிக்கவும்:
"வசீகரமான சாரீரத்துடன் பாடல்."
நிஜாம் அண்ணா, டைப்பிங் எர்ரர் எல்லாம் ப்ளாகில் ரொம்ப சகஜம். என் ப்ளாகாவது பரவாயில்லை. கீ போர்டை பார்க்காமலே அடிக்கும் ஆள் நான். ஆனால், ஒரு சிலருடையதை பார்த்தால் என்ன சொல்வீர்கள்?
இதையெல்லாம் ஒரு விஷயமாக நான் அலட்டி கொள்வதேயில்லை. அதோடு, நான் டைப்புவதற்கு ப்ரூஃப் பார்க்கவும் நேரம் இருப்பதில்லை. படிப்பவருக்கு புரிந்தால் சரி!
மிகவும் இனிமை ....
சொற்கள் எல்லாம் எளிமை ...
வரும் காலம் வசந்தகாலமாகட்டும் எல்லோருக்கும் ... வருந்தும் நெஞ்சங்களுக்கும் ....
கவிதை அருமை.பாடியவிதம் அதைவிட அருமை.வாழ்த்துக்கள்.சோல்ஜருக்கும் ,தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
வாழ்த்துக்கு நன்றி அக்கா. வாய்ப்பு கிடைக்கும் நாள்னு சொன்னீங்க என்ன வாய்ப்புன்னு சொல்லலையே...
பாடல் வரிகள் அருமை சுஹைனா. இசையும் பாடியவர் குரலும் அதைவிட அருமை. இசைக்காக சோல்ஜர் செய்திருக்கும் சின்னச் சின்ன மாற்றங்கள் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
அனைத்தையும் ரசித்தேன்.
இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
Post a Comment