எப்படி இவ்வளவு இடுகைகள் இவ்வளவு வேகமாக போடுகிறீர்கள் என்று பலபேர், பின்னூட்டத்திலும் மெயிலிலும் கேட்டிருக்கின்றனர். அதற்கு என்ன பதில் என்று சொல்ல தெரியவில்லையென்றாலும், எனக்கு தோணியதை பதிவாக எழுதுகிறேன், அவ்வளவு தான்! சப்பை மேட்டரை கூட, எழுதும் விதத்தில் எழுதினால், ரசிப்பார்கள்!
நிறைய எழுத ஆசை...நேரம் கிடைக்காததனால், என்ன எழுத வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை தலைப்பாக போட்டு, டிராஃப்டாக சேமித்து கொள்வேன். பின் நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக டைப் செய்வேன். இது தான் நான் பின்பற்றும் முறை! இப்படி செய்யாவிட்டால், என்ன எழுத நினைக்கிறோமோ, அது மறந்து போய் விடுகிறது!
இப்ப கூட பாருங்கள், என் ப்ளாகின் டேஷ் போர்டு படத்தை! மொத்தம் 256 இடுகைகள் என்று காட்டும். ஆனால், இது 200வது இடுகைதான்.
என்றாலும், நான் ஒரு ஃபார்முலா வைத்திருக்கிறேன். அதாவது, ஒரு கவிதை, ஒரு பாடல், ஒரு டெக்னிக்கல், ஒரு சிறுகதை என்பது போல...அனைத்து ரசனைக்காரர்களும் விரும்பி படிக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோள்! அதற்காக கொஞ்சமல்ல, நிறைய மெனக்கெட்டிருக்கிறேன்!
கற்பனை என்றுமே வற்றியதில்லை, ஆனால், காலம் பற்றுவதில்லை! என்ன செய்வது, இப்போது, காலேஜ் போய் வந்தால், ரொம்ப அலுப்பாக இருக்கிறது. கம்ப்யூட்டரில் உட்காரவே நேரமிருப்பதில்லை. இரவு தூக்கம் முழித்தால், காலேஜில் தூக்கமாக வருகிறது. அதிலும் என்னை வகுப்பு லீடராக போட்டுள்ளார்கள். லீடரே தூங்க முடியுமா? லீடர் பதவியால் கூடுதல் பொறுப்பு வேறு.
அடுத்த வாரம் எலக்ஷன் காலேஜில்...அதில் சேர்மன், செக்ரேட்டரி எல்லாம் தேர்ந்தெடுப்பார்களாம்... அதோடு, மதியம் உணவு இடைவேளையில், தமிழ் மீடியத்தில் படித்த வந்த ஒரு பத்து, பதினைந்து பேருக்கு, நான் ஆங்கிலம் சரளமாக பேச கற்று கொடுத்து வருகிறேன்.
பி.எட் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஏகப்பட்ட ரெகார்ட்ஸ், அசைன்மெண்ட்ஸ், கேம்ப், டீச்சிங் ப்ராக்டிஸ் எல்லாம் இருக்கிறது. லேப் டாப் ஒன்று வாங்கி காலேஜ் எடுத்து போகணும், அதில் டேட்டா கார்டு போட்டு நெட் அக்ஸஸ் பண்ணனும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால், இப்போ, பார்த்தால், அங்கே ஃப்ரீ டைமே கிடைக்காது போலிருக்கிறது. ரெகார்டு நோட் மட்டும் 20, அதோடு சார்ட் மற்றும் மாடல்ஸ் 40, அசைன்மெண்ட்ஸ் என டைட் செட்யூல்!
விஷயத்துக்கு வருகிறேன். என் ப்ளாகின் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்டிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்! இதை உங்கள் ரிப்போர்ட்டுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். இது எல்லாம் உண்மையான ரிப்போர்ட்ஸ். எந்த ஒளிவு மறைவுமில்லை!
என் ப்ளாகுக்கு, SUMAZLA என்ற பிக்சரின் மூலம் லின்க் கீழ் கண்ட நண்பர்கள் தந்திருக்கிறார்கள்.
http://maran.0fees.net/Tamil_Index.php
http://tamizhkadalan.blogspot.com/
http://adiraipost.blogspot.com/
http://dpraveen03.blogspot.com/
http://www.masusila.blogspot.com/
அதோடு, தங்கள் ப்ளாக் லிஸ்ட்டில் எனக்கு இடம் தந்திருக்கும், பாசத்திற்குரிய நட்புள்ளங்கள்:
http://www.vadakaraivelan.com/
http://lawforus.blogspot.com/
http://sshathiesh.blogspot.com/
http://chinthani.blogspot.com/
http://arurs.blogspot.com/
http://faizakader.blogspot.com/
http://srivaimakkal.blogspot.com/
http://majinnah.blogspot.com/
http://fromtamil.blogspot.com/
http://kavikilavan.blogspot.com/
http://espalani.blogspot.com/
http://edakumadaku.blogspot.com/
http://buafsar.blogspot.com/
http://mathurjaleel.blogspot.com/
இவர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்...இவர்களுள் http://vadakaraivelan.blogspot.com/ என்ற லின்க் மூலமாக அதிக நபர்கள் வந்திருக்கிறார்கள். நன்றி வேலன்! விடுபட்டவர்கள், சொன்னால், இதில் சேர்த்துக் கொள்கிறேன்.
இது எல்லாவற்றையும் விட, ஒரு நபர், படு புத்திசாலித்தனமாக, தன் ஈமெயில் போஸ்டிங் லின்க்கை என் ஃபீட் பர்னர் ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷனில் கொடுத்திருக்கிறார்... அவருடைய இந்த ப்ளாகில், http://asainayagi.blogspot.com/ என்னுடைய எல்லா போஸ்டிங்கும் அப்படியே போஸ்ட் ஆகிறது... அது மட்டுமல்ல, அவருடைய ஈமெயில் போஸ்ட்டிங் லின்க் எனக்கு தெரியும் என்பதால், ஓரிரு முறை அதன் மூலம் அவருடைய ப்ளாகில், அவர் செய்வது சரியல்ல என்று பதிவிட்டேன். ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷனை நான் டீ-ஆக்டிவேட் செய்யலாம். சற்று பொறுப்போம், என்று விட்டு வைத்துள்ளேன். இப்படியும் சிலர்!
என் ப்ளாகுக்கான ட்ராஃபிக்கில், முதல் ஐந்து இடங்களில் இருக்கும் சைட்டுகளையும், அதன் மூலம் வந்தவர் எண்ணிக்கையையும் கீழே படத்தில் பார்க்கலாம். இது கடந்த ஒரு மாதத்துக்கான ரிப்போர்ட் ஆகும்!
அதோடு, கடந்த ஒரு மாதத்தில்(Aug 8 - Sep 7), எந்த நாட்டிலிருந்து எத்துணை நபர்கள் வந்திருக்கிறார்கள், அவர்கள் சைட்டில் செலவிட்ட ஆவரேஜ் நேரம் என்ன போன்ற விவரங்களில், டாப் 10 மட்டும் கீழே உள்ள படத்தில் உள்ளது!
மேலே படத்தில் பார்க்கும், 11,654 விசிட்களில், எத்துணை பேஜ் வியூஸ், எவ்வளவு பேர் புதியவர்கள் போன்ற விவரங்களை, கீழே பார்க்கலாம். இதுவும், ஆகஸ்ட் 8 துவங்கி, செப்டம்பர் 7 வரையிலான ஒரு மாதத்துக்கானது!
மொத்தம் 18,650 பேஜ் வியூஸ் என்றாலும், அனாலிடிக்ஸில் இணைத்ததில் இருந்து இது வரைக்கும் மொத்த பேஜ் வியூஸ் 50,000க்கும் மேல்! அதிகப்பட்ச பேஜ் வியூஸ், ஆகஸ்ட் 19 அன்று(1094)!
அதிகம் படிக்கப்பட்ட முதல் பத்து இடுகைகள், கீழே:
1.இது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்க!
2.பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்
3.அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்ய
4.அந்தரங்கம் - எப்படி ஹலாலானாள்?
5.உங்கள் வலைப்பூவை புத்தகத்தில் இணைக்க
6.கொடைக்கானல் போகிறீர்களா?
7.ப்ளாக் எழுதுபவர்களுக்கு
8.ஐ யெம் எ காலேஜ் கேர்ள்
9.அந்தரங்கம் - முஸ்லிம் முர்தத் ஆனால்
10.புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்
ஓரிரு மாதங்களுக்கு முன், எட்டு லட்சத்தி சொச்சத்தில் இருந்த என் ப்ளாகின் அலெக்ஸா ரேங்க்கிங், இன்றைய நிலவரப்படி, 394,355 ஆக முன்னேறி உள்ளது, இதை http://www.popuri.us/ என்ற தளத்தின் மூலம் யார் வேண்டுமானாலும், எந்த சைட்டுடையதையும் பார்த்துக் கொள்ளலாம்.
என் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 150 என்றாலும், சீக்ரெட் ஃபாலோவர்ஸ் 11 பேர், அதோடு நான் block செய்த ஃபாலோவர் ஒருவர் ஆக, மொத்தம் 162 பேர். இதை கீழ் காணும், கூகுள் ப்ரெண்ட் கனெக்ட் ரிப்போர்ட்டில் காணலாம்.
ஃபீட் பர்னர் ஈமெயில் மூலம் என் இடுகைகளுக்கு சப்ஸ்க்ரைப் செய்திருப்பவர்கள், 35 பேர்!
இந்த பதிவின் நோக்கம், புதியவர், அனாலிடிக்ஸ் தரும் வசதிகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதோடு, என் ப்ளாகை தம் ப்ளாகோடு, ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்ளலாம்!
என் நூறாவது இடுகையின் போது நான் சொன்னேன், இனி தினம் தினம் பதிவு போட முடியாது என்று...ஆனால், தொடர்ந்து போட்டேன்! இனிமேல் அப்படி முடியாது..., வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவு போடுவதே கஷ்டம்! குறைவாக பதிவு போட்டாலும், தொடர்ந்து, என் நண்பர்கள் படிப்பார்கள், என்ற நம்பிக்கை இருக்கிறது!
நட்புடன்
-சுமஜ்லா.
.
.
Tweet | ||||
44 comments:
பெண்கள் பற்றி பொறியாளர்கள் விளக்கம்
http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_3120.html
200வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சுஹைனா தொடர்ந்து எழுதி பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்
உங்கள மாதிரியே கதை கவிதை எழுத நானும் ட்ரைபண்றேன் முடியலை சட்டியில இருந்தாதானே அகப்பையில் வரும்...
ஃபீட் பர்னர் பத்தி சொல்லுங்களேன்..எனக்கு புரியலை
அதிகம் படிக்கப்பட்ட இடுகைகளை எப்படி தெரிந்து கொள்வது?
வாழ்த்துக்கள்... (இது வரை எத்தனை வாழ்த்துக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்ற விபரம் மிஸ்ஸிங்...)
இதில் நிறைய சந்தேகம் இருக்கிறது, (எப்படி செய்வது என்பது தொடர்பாக) ஆனால் அவற்றை எப்படி கேட்பது என்பதே பெரிய சந்தேகமாக இருப்பதால், இப்போதைக்கு வேண்டாம்.
பிறமிக்க வைக்கிறீர்கள் :)
வாழ்த்துக்கள்
நன்றி வசந்த்!
நான் என்ன நினைத்தாலும், உங்களைப் போல ஹாஸ்யம் வருவதில்லை; சிலருக்கு சிலது!
கவிதை எழுதுவது எப்படின்னு சீக்கிரம் ஒரு இடுகை போடுகிறேன்!:)
//ஃபீட் பர்னர் பத்தி சொல்லுங்களேன்..எனக்கு புரியலை// கீழே இருக்கும் இடுகையை படித்து பாருங்கள்...
http://tvs50.blogspot.com/2009/06/guide-to-use-feedburner-in-blogger.htm
//அதிகம் படிக்கப்பட்ட இடுகைகளை எப்படி தெரிந்து கொள்வது?//
கூகுள் அனாலிடிக்ஸில் வருமே! அதில் Content Overview என்று இருக்கும்! இல்லாவிட்டால், செட்டிங்ஸில் போய் கொண்டு வரலாம்!
//உங்கள மாதிரியே கதை கவிதை எழுத நானும் ட்ரைபண்றேன் முடியலை சட்டியில இருந்தாதானே அகப்பையில் வரும்...//
நண்பா, காதல் வந்தால், கவிதை தானாக வரும்...ஹா...ஹா...!
//இது வரை எத்தனை வாழ்த்துக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்ற விபரம் மிஸ்ஸிங்//
இது அனாலிடிக்ஸில் வராதே! ஆனால், மொத்த பின்னூட்டம் சைடு பாரில் தெரியும்!
//ஆனால் அவற்றை எப்படி கேட்பது என்பதே பெரிய சந்தேகமாக இருப்பதால், இப்போதைக்கு வேண்டாம். //
தமாஷாக எழுதி உள்ளீர்கள்! சந்தேகத்தை கேட்டால் தானே, நான் தொழில் நுட்ப இடுகைகள் எழுதி பிழைக்க முடியும்!:)
வாழ்த்துக்கு நன்றி!
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுகைனா!!
இன்னும் நிறைய தொழில்நுட்ப பதிவுகள் எழுதுங்க..
மீண்டும் வாழ்த்துக்கள்!
நெத்தியடி போல
புள்ளி விவரங்களை
சொல்லி அடித்துள்ளீகள்!
இப்ப மட்டுமா,
நீங்க எப்பவுமே பிஸிதானே!
அப்படியும் தினமும் பதிவு
போடுவீங்க, எனக்குத் தெரியும்.
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!
200-வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
புள்ளிவிபரங்கள் அருமை.
('கேப்டன்' ரசிகையா ??!!.) :))
200வது பதிவிற்கு வாழ்த்துகள் சுமஜ்லா. தொடருங்கள்.
அசத்தலான புள்ளிவிவரங்களுடன் அழகான 200ம் பதிவு. :))
வாழ்த்துக்கள் மேடம்!
200 பதிவுக்கு வாழ்த்துக்கள்....
சாதனைமேல் சாதனை
நிறைய எழுதுங்கள்
தொடரட்டும் உமது பணி
ahaa.. oru vishayam kettu answer kidaicha udane unga blogku update paniduvingla? class='fullpost' sollaren.. supernga! idhuku neenga pesama engineeringe serndhu irukalam pola irukke! jollya bench ku adila paduthu thoongalam! :D
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
புள்ளிவிபரங்களுடன் அசத்திடீங்க போங்க....இப்படியே போனா இந்த வருட கடைசிக்குள் 1000 எதிர்பார்க்கலாம் போல...
idnah stats ellam epdi collect panninga enna tools use panninga adhellam sollave illiye? erkanave solli irukingla engayavadhu?
வாழ்த்துக்கள்...!!!
வாழ்த்துக்கள் சுமஜ்லா,
நான் உங்கள் வலைப்பூவுக்குப் புதியவன். ஓரிரு இடுகைகளே வாசித்திருந்தாலும் வாசித்தவை யாவும் சுவாரசியமானது என்று நிச்சயம் சொல்வேன். அதே சமயம் எனக்கு ஒரு விமரிசனமும் உண்டு உங்களின் இந்த இடுகையில்.
///பி.எட் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஏகப்பட்ட ரெகார்ட்ஸ், அசைன்மெண்ட்ஸ், கேம்ப், டீச்சிங் ப்ராக்டிஸ் எல்லாம் இருக்கிறது. லேப் டாப் ஒன்று வாங்கி காலேஜ் எடுத்து போகணும், அதில் டேட்டா கார்டு போட்டு நெட் அக்ஸஸ் பண்ணனும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால், இப்போ, பார்த்தால், அங்கே ஃப்ரீ டைமே கிடைக்காது போலிருக்கிறது. ரெகார்டு நோட் மட்டும் 20, அதோடு சார்ட் மற்றும் மாடல்ஸ் 40, அசைன்மெண்ட்ஸ் என டைட் செட்யூல்!////
இதைக் கொஞ்சம் பாருங்கள். இதில் எத்தனை வார்த்தைகள் தமிழ்? சில விசயங்களை முழுவதும் தூய தமிழில் எழுத முடியாது என்பது உண்மைதான் என்றாலும் இயன்றவரை எழுதலாமல்லவா? உங்களைப்போல் புத்திக்கூர்மை உள்ளவர்களால் அது இயலாத காரியம் இல்லையே.
தமிழைத் தமிழர் எழுதாமல் வேறு யாரும் எழுதப்போவதில்லை. ஆங்கிலம் எழுத உலகமே இருக்கு என்பதை மட்டும் அன்புடன் மனதில் கொள்ளுங்கள்.
சுவாரசியமான பதிவுகளை இடும் உங்கள் இடுகைகளில் தமிழ் வாசம் அதிகம் வீசினால் மகிழ்ச்சி உங்களையும் சேர்த்து தமிழுலகம் அனைத்துக்கும்தான் அல்லவா?
இந்த என் பரிந்துரையைத் தவறாக எண்ணித் தள்ளிவைக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
மற்றபடி நீங்கள் இடுகை இட்டதும் எனக்கு உடனே வரும்படி சமீபத்தில் Feed Burner இணைப்பில் என் மின்னஞ்சலைக் கொடுத்திருக்கிறேன். அதன்படி வந்து கொண்டும் இருக்கின்றன உங்கள் இடுகைகள்.
உங்கள் எழுத்துக்களுக்கு என் நன்றி.
அன்புடன் புகாரி
இரட்டை சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
200 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் சுமஜ்லா...
தாங்கள் இது போன்ற மேலும் பல நூறு பதிவுகள் இடவேண்டும் என்று வாழ்த்துகிறேன்...
விஜயகாந்துக்கு அப்புறம் இவ்ளோ புள்ளி விபரம் இந்த பதிவில்தான் பார்த்தேன்.. ஜோக்கிரி வந்து பாருங்க... விஜயகாந்த் பட்டையை கிளப்புகிறார்...
அக்கா,நீங்க வாரத்துக்கு எத்தனை போட்டாலும்,அத்தைனையும் படிப்போம்.
200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அத்தனையும் சும்மா அபப்டி இப்படி பதிவு கிடையாது,. அனைத்தும் அருமை.
காலேஜ் போய் கொண்டு இப்படி பதிவு போடுவதே பெரிய விஷியம்.
என்னாலும் அடிக்கடி நெட்டுக்கு வர முடியல.
பதிவுகளை லேட்ட்டா வந்து தான் பார்க்க முடியும்.
ஹை கிளாஸ் லீடரா, பொறுப்புகள் அதிகம் தான்.
அழகாக எழுதும் கலை ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் தந்திருக்கான்.
அந்த கலை உங்களுக்கு நிறையவே இருக்கு...200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுஹைனா தொடர்ந்து எழுதி பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே...
200 வது பதிவுற்கு..வாழ்த்துக்கள்..
மேலும் நிறைய தகவல்கள் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்..
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
200 பதிவுகள் என்பது சாதரணமான விஷயமல்ல. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி.
ஒன்னு விடாமல் எல்லாத்தையும் விவரமா அனலைஸ் பண்ணி புள்ளி விவரத்தோட சொல்லி இருக்கீங்க. கிரேட்
வகுப்புத்தலைவராவதற்கு தாங்கள் தகுந்தவர்தான். வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள் தொர்ந்து எழுதுங்கள்
200க்கு வாழ்த்துகள்
மென்மேலும் சிறப்பாக வளர்க.
தலைமைத்துவத்திற்கும் வாழ்த்துகள்.
தற்செயலாக இன்று வந்தால்,மகிழ்ச்சியான செய்தி அதற்குள் 200 இடுகை வெளியிட்டது பாராட்டத்தக்கது.மென்மேலும் பயனுள்ள இடுகைகள் பல இட்டு புகழின் உச்சிக்கே செல்ல வாழ்த்துக்கள்.
வாழ்த்து சொன்ன எல்லாருக்கும், நட்புடன் நெஞ்சார்ந்த நன்றிகள்! நேரமின்மையால் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை!
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுகைனா!!
இன்னும் பல 100க்கு இப்பவே என் அட்வான்ஸ் வாழ்த்துகள்....என்ன தான் பிஸினாலும் உங்க பதிவுகளை ஆவலாக எதிர்பார்போம்.
ஆரம்ப கால கட்டத்திலிருந்தே உங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். ரொம்ப மகிழ்வாய் உணர்கிறேன் சுஹைனா. வாழ்த்துக்கள்!
பிரம்மிப்பாய் இருக்கிறது வாழ்த்துக்கள் சுமஜ்லாக்கா இன்னும் இன்னும் முன்னேற இந்த தங்கையின் அன்பான வாழ்த்துக்கள்
சுமஜ்லா வாழ்த்துக்கள்..
உங்கள் பதிவுகளின் சிறப்பே உங்கள் எழுத்தின் எளிமை தான் மற்றும் பிழையில்லாமல் எழுதுவது.
பதிவுகளின் எண்ணிக்கையை விட பதிவுகளை இன்னும் சிறப்பாக கொடுக்க என் அன்பான வாழ்த்துக்கள்
நீங்கள் கூறிய பின்னூட்ட வண்ணம் மாற்றுதல் இன்னும் முயற்சி செய்யவில்லை..பின்னொரு நாளில் முயற்சிக்கிறேன் சந்தேகம் இருந்தால் கேட்கிறேன். நன்றி.
டபுள் சென்ட்சுரிக்கு வாழ்த்துக்கள்!! டாகடரேட்டுக்கு தயார் செயததது போல் உள்ளது இந்த கட்டுரை. உங்களது முயற்சியும் உழைப்பும் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. எனது பிராத்தணைகளும், வாழ்த்துக்களும்.
“இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்” (குர்ஆன் 27:61)
HAPPY EID
http://manithaneyaexpress.blogspot.com/2009/05/blog-post.html
Post a Comment